简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 12 – மணற்பாறைத் தீவுகள்

Content Image

முயற்சியின் பெறுபேறுக்கு இடையில் விபத்து

வனஜீவராசிகளுக்கு இருந்த விருப்பத்தினாலேயே நான் வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைய முடிவு செய்தேன். 1999 இல் முதலாம் தரத்தில்  வனவிலங்கு தள பாதுகாப்பாளர் ஒருவராக திணைக்களத்துக்கு நாடளாவிய ரீதியிலான போட்டிப் பரீட்சை ஒன்றில் தெரிவு செய்யப்பட்டேன்.

எனக்கு வஸ்கமுவ, மாதுறு ஓய, கிரிதலே, கவுடுள்ள போன்ற தேசிய பூங்காக்களில் கடமையாற்றியதன் பின்னர் கொழும்பு பிரதான அலுவலகத்தில் உதவிப் பணிப்பாளர் (இயற்கை வளங்கள்) ஆக சேவையாற்றுவதற்குச் சந்தர்ப்பமொன்று கிடைத்தது.2013 இல் மேலதிக படிப்புக்காக வெளிநாடு சென்ற நான் 2015 இல் மீண்டும் இலங்கைக்கு வந்தேன்.

தற்போது வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கடல்சார் உயிர்கள் பாதுகாப்புக்காக சுயாதீனமான  பிரிவொன்று அல்லது அலகொன்று இருக்கவில்லை.  திணைக்களத்திற்குள் கடல்சார் தொடர்பான அலகொன்றை அமைப்பதற்கு அரசு தீர்மானித்தது. அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எனக்கு ஒப்படைக்கப்பட்டது.

சமுத்திரஅலகொன்றை அமைப்பதற்கான நிர்மாணங்களைத் தயாரிப்பது பாரிய கருமமொன்றாகும். இதனை எவ்வாறு மேற்கொள்வது என நான் தேடிப் பார்த்தேன்​. இது தொடர்பான விசேட நிபுணர்கள் மற்றும் நிறுவனங்கள் யார் எனத் தேடிப் பார்த்து பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன் இவ்விசேட ​நிபுணர்கள் மற்றும்நிறுவனங்களுக்கிடையில் தொடர்பை ஏற்படுத்தினேன்.

அரச நிறுவனம் என்ற வகையில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அதிகார சபை- நாரா (NARA – National Aquatic Resources Research & Development Authority), தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு  அபிவிருத்தி அதிகார சபை(NAQDA – National Aquaculture Development Authority), கரையோரம் பேணல் மற்றும் கரையோரவளங்கள் முகாமை திணைக்களம் (CCD – Coast Conservation and Coastal Resources Managing Department) மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை(MEPA – Marine Environment Protection Authority) இலங்கை கடற்படை மற்றும் கரையோரபாதுகாப்புத் திணைக்களம் போன்றே கொழும்புப் பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் கடல்சார் பல்கலைக்கழகம் என்பன இச்செயற்பாட்டுக்கு தொடர்புபட்டன. அரசு சாராத நிறுவனங்களாக இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) போன்ற நிறுவனமாகும்.

அது போன்றே இத்துறைக்குரிய துறைகளுள் அனுபவம் மிக்க நபர்கள் மற்றும் விஞ்ஞானிகளையும் தொடர்புபடுத்திக் கொண்டோம். முருகைக் கற்கள் பற்றி ஆஜன் ராஜசூரிய அவர்களும் கடலாமைகள் பற்றி கலாநிதி லலித் ஏக்கநாயக்க அவர்களும் கடற் பாலூட்டிகள் பற்றி ரணில் சேனானாயக்க அவர்களும் திமிங்கிலங்கள் பற்றி கலாநிதி ஆஷா டிவோஸ் அவர்களும்சுறாக்கள் பற்றி நீல வளங்கள் அறக்கட்டளையின் (Blue Resources Trust) டேனியல் மற்றும் நிஷான் போன்றவர்களும் சம்பந்தப்பட்டனர்.

நாரா நிறுவனத்தின் கலாநிதி கிஹான் தஹநாயக்க அவர்கள், IUCNநிறுவனத்தின்கலாநிதி ஆனந்த மல்லவதந்த்ரீ அவர்கள், மீபா நிறுவனத்திலிருந்து கலாநிதி டர்னி ப்ரதீப் அவர்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்டனர். அது போன்றே கடற் படையின் கொமடோர் பியல் டீ சில்வா அவர்களும் எமக்கு விசேட ஒத்துழைப்பினை வழங்கினர். ​​கடற் படையும் இலங்கை கரையோர பாதுகாப்புத் திணைக்களமும் எமக்குத் தொடர்ந்து உதவி செய்தனர். இத்திட்டத்தை 2017 ஆகும் போது ஆரம்பிக்க வேண்டும் என அக்கால முன்னாள் அமைச்சர் எனக்கு உத்தரவு பிறப்பித்தார்.

கடல்சார் பாதுகாப்பினை நாம் பல பிரிவுகளின் கீழ் மேலும் பகுப்பாய்வு செய்தோம். கடல் பாலூட்டி வகைகள், ​கடலாமைகள், முருகைக் கற்பாறைகள் மற்றும் அதனை அண்டிய மீன்கள், ஈரநிலங்கள், கடற் பன்றிகள் மற்றும் கடற் புற்கள போன்றே கடல்சார் சுற்றுலாக் கைத்தொழிலையும் நாம் கற்பதற்கு முனைந்தோம். காலையிலிருந்து இரவு வரை பல்வேறான கூட்டங்கள், கள ஆய்வுகள் மேற்கொண்டோம்.

இங்கு கடல் ரீதியான பாதுகாப்புச் செய்ய வேண்டிய பகுதிகளை நாம் ​அடை​யாளம் காண வேண்டிய தேவை ஏற்பட்டது. இப்போது வட மாகாணத்தில் டெல்ப் பிரதேசம்  வனஜீவராசிகள் தேசிய பூங்காவொன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

மட்டக்களப்பில் பாசிக்குடாவிற்கு வடக்கே அமைந்துள்ள காயன்கார்னி பிரதேசம் மற்றும் இலங்கையின் தெற்கே யால தேசிய பூங்காவிற்கு அண்மித்த கடலில் அமைந்துள்ள சிறிய இராவணண் மற்றும் பெரிய இராவணண்ஆகிய வெளிச்ச வீடுகளுக்கி​டையில் ​அமைந்துள்ளமுருகைக் கற்பாறைகளை விசேடமாகப் பாதுகாக்க வேண்டிய கடல்சார் சூழல் அமைப்பாக எம்மால் இனங்காண முடியுமானது.

11.04.2019  ஆம் திகதி காயன்கார்னி பிரதேசமும் 11.10.2019 ஆம் திகதிசிறிய இராவணண் பெரிய இராவணண் ஆகிய வெளிச்ச வீடுகளுக்கி​டையில் ​ அமைந்துள்ள முருகைக் கற்பாறைகள் வர்த்தமானி மூலம் கடல்சார் சரணாலயங்கள் என்ற வகையில் பிரகடனப்படுத்தப்பட்டு சட்ட ரீதியாக்குவதற்கு எம்மால் முடிந்தது.  அதன்படி காயன்கார்னி பிரதேசத்தில் 953 ஹெக்டயாரும் சிறிய இராவணண் பெரிய இராவணண் பாறைகளில் 67,282.3 ஹெக்டயாரும்கடல்சார் சரணாலயமாக ஆயிற்று.

கடற் பன்றிகள் மற்றும்கடற் புற்கள் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் புத்தளம், கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக பருத்தித்துறை முனை வரை பாதுகாக்க வேண்டிய பிரதேசங்களை இனம் கண்டோம்.

இச்செயற்றிட்டத்தில் எமக்குத் தொடர்ந்து அடையாளம் காண்பதற்கு முன்மொழியப்பட்ட பகுதிகளில் பயணிக்க வேண்டியிருந்தது. களப் பயணங்களில் பல்வேறான தகவல்களை ஒன்று திரட்டுவதற்கு நீந்துவதற்கு சுழியோடுவதற்கு அவசியமாகும். இலங்கையில் இருந்த திறமையான சுழியோடியொருவர் முருகைக்கல் பற்றிய விசேட நிபுணரான ஆஜன் ராஜசூரிய அவர்கள் எனக்கு சிறந்த பயிற்சியொன்றை வழங்கினார்.  எனக்கு வெவ்வேறான அனுபவங்கள் கிடைத்தன.

ஒரு நாள் நாம் கல்பிடியில் மணல்மேடு சரணாலயப் பகுதிக்குச் சென்றோம். இம்மணல் மேடு சரணாலயம் காணப்படுவது கடற்கரையிலிருந்து சில கிலோமீற்றர்கள் உள்ளே அதாவது கடற் பக்கத்திற்கு ஆகுமாறு கடலின் நடுப் பகுதியும் 2018-2019 ஆம் ஆண்டுகளில் பூகோள வெப்பநிலை அதிகரிப்பினால் மணல்மேடு சரணாலயப் பகுதியில் அதிகளவான முருகைக் கற்பாறைகள் அழிவடைந்தன. சில இடங்களில் முழுமையாக அழிவடைந்தன. நீர் நிலைகள் காரணமாகவும் மற்றும் மீன்பிடி சாதனங்களின் தாக்கம் காரணமாகவும்  முருகைக்கல் கட்டமைப்புக்கள் உ​டைந்து சென்றிருந்தன. எமக்கு இதனை மீண்டும் பாதுகாக்க வேண்டி ஏற்பட்டது.

இதற்காகக் கடற் படை​யும் எமது உதவிக்கு வந்தனர்.  மணல்மேடு சரணாலயத்தில் முருகைக்கற்கள் அழிந்த இடங்கள் மற்றும் மீண்டும் வளர்ந்து வருகின்ற இடங்களை நாம் இனங் கண்டோம். இனங் கண்ட இரண்டு பகுதிகளுக்கு மீனவர்களுக்குச் செல்ல விடாது பாதுகாப்பதற்கு கடல்சார் அலகு போயவல் இட்டனர்.  கல்பிடிய பிரதேசத்தின் கடல்சார் சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் கரையோர பாதுகாப்புத் திணைக்களமும் கடற் பன்றிகள் மற்றும் கடற் புற்கள் பாதுகாப்புச் செயற்றிட்டத்திற்கு தொடர்புபட்டு செயலாற்றிய சகல நிறுவனங்களும் இதற்கு இணைந்தன.

ஒரு நாள் மணல்மேடு சரணாலயத்துக்குக் குழுவொன்றே சென்றோம். அன்று கடல் அமைதியாக இருந்தது. இரு படகுகளில் சென்றோம். ஆஜன் ராஜசூரிய அவர்கள் படகிலிருந்து இறங்கி மிதந்து செல்வது போன்று நான் கண்டேன். அடுத்ததாகத்தான் நான் இறங்கினேன். ஸ்னோக்கல் மற்றும் வரல் என்பவற்றை அணிந்து கொண்டே நீருக்குள் பாய்ந்தோம். எனது இடது காலின் மூட்டில் நீண்ட காலமாக மூட்டிலிருந்து கால் பாய்கின்ற பிரச்சினையொன்று காணப்படுகின்றது. நீருக்குள் பாய்வதுடனேயே அது நடந்து விட்டது. மிகுந்த வலி ஏற்பட்டது. நான் நீரின் மேற்பரப்புக்குச் சமாந்தரமாக இருக்கும் போதே மூட்டினை மீண்டும் சரி செய்து கொள்வதற்கு முயற்சி செய்தேன்.

இவற்றுடன் படகிலிருந்து நான் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டேன். மேல் நீர் அமைதியாக இருந்தாலும் கீழே நீரோட்டங்கள் காணப்பட்டன. இவ்வாறு பத்து பதினைந்து நிமிடங்கள் போன்று நான் இழுத்துச் செல்லப்பட்டேன். பின்னர் நான் மிகவும் கஷ்டத்துடன் காலைச் சரி செய்து கொண்டு நீரோட்டங்கள் பாய்ந்து செல்லும் பிரதேசங்களிலிருந்து அகன்றேன். இச்சந்தர்ப்பத்தில் காலைச் சரி செய்து கொள்ள முடியாமல் போயிருந்தால் என்ன நடக்கும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளுக்கு முகம் கொடுத்தாலும் எமது செயற்றிட்டம் வெற்றியடைந்ததையிட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  மணல்மேடு சரணாலயமும் இப்போது நன்றாக முருகைக் கற்பாறைகள் வளர்ந்துள்ளன.

சன்ன சுரவீர

  

1999 இல் 1 ஆம் தரத்தில் வன விலங்கு தள பாதுகாப்பு உத்தியோகத்தரொருவராக நாடளாவிய ரீதியில் போட்டிப் பரீட்சையொன்றினால் தெரிவு செய்யப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு இணைந்த சுரவீர அவர்கள் அதற்கு முன்னர் ஆசிரியரொருவராக சேவையாற்றினார். வஸ்கமுவ தேசிய பூங்காவிற்கு முதல் நியமனம் பெற்ற அவர் இரண்டாவது மாதுறு ஓயாதேசிய பூங்காவில் பூங்காப் பொறுப்பாளராகவும் கிரிதலே பயிற்சி மையத்தில் வளபங்களிப்பாளராகவும் அதன் பின்னர் கவுடுள்ள தேசிய பூங்காவில் பூங்காப் பொறுப்பாளராகவும் பின்னர் 2011 ஆம் ஆண்டில் கொழும்பு பிரதான அலுவலகத்தில் இயற்கை வளங்கள் பிரிவில் உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

இதற்கிடைப்பட்ட காலத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வனஜீவராசிகள் முகாமைத்துவம் பற்றி விசேட டிப்ளோமா பாடநெறியொன்றையும் இந்தியாவில் தேசிய  வனஜீவராசிகள் நிறுவனத்தில் ஒன்பது மாத வனஜீவராசிகள் முகாமைத்துவ பற்றி முதுமாணி பட்ட  டிப்ளோமா பயிற்சிப் பாடநெறியொன்றையும் செய்துள்ள சுரவீர அவர்கள் 2013 இலிருந்து 2015 வரையான காலத்தில் செக் குடியரசில் Forestry, Water and Landscape Management விஞ்ஞானமாணி பட்டத்தை மேற்கொள்வதற்கும் தெரிவு செய்யப்பட்டார்.

அங்கு சுரவீர அவர்களால் காட்டப்பட்ட ஆய்வு ரீதியான திறமைகள் மற்றும் சிறந்த பெறுபேற்றினால் செக் குடியரசினால் கலாநிதிப் பட்டமொன்றை மேற்கொள்வதற்கு அவருக்கு சந்தர்ப்பமொன்று வழங்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில் நாடு திரும்பியதன் பின்னர் அவ்வாண்டிலிருந்து சமுத்திர அலகொன்றை நிர்மாணிப்பதில் அதன் தலைவராகக் கடமையாற்றி 2017 ஆம் ஆண்டிலிருந்து சமுத்திர முகாமைத்துவம் பற்றிய திட்டத்தையும் தயாரித்துநிறைவு செய்யவும் அவரால் முடிந்தது. 2020 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அவர் தென் வலயத்துக்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.சன்ன சுரவீர அவர்களின் ஆசிரியை ஒருவர் என்பதோடு அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகள் மூவரும் இன்னும் பாடசாலை வயதில் உள்ளனர். அவருடைய முகவரி 28 டீ, வல்பிடமுல்ல, தெவலபொல ஆகும்.

மணற்பாறைத் தீவுகள்

பவளப் பாறைகள் பூமியில் அமைந்துள்ள அதிகமான உயிரியல் ரீதியான வெவ்வேறானதும் பயனுள்ளதுமான சூழல் அமைப்பொன்றாக உள்ளதோடு அது கடலிலுள்ள மழைக்காடுகளாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. வானவில்லைப் போன்றவாறான சிக்கலான வடிவங்களைக் கொண்ட கடல்வாழ் உயிரினங்களினை உள்ளடக்கிய பவளப் பாறைகள் நீருக்குக் கீழுள்ள பூங்கா போன்றனவாகும்.பவளப் பாறைகளின் மூலம் கடல் தரையில் சிறிய வீதம் மாத்திரத்தையேமூடி மறைக்கின்றது என்றாலும் அதற்குள் உலகின் கடல்வாழ் உயிரினங்களின் சுமார் நூற்றுக்கு 25 ஆனவை உயிர் வாழ்கின்றன.

                                                                                                        அடர்த்தியாக வளர்ந்த Staghorn coral

‘கடல்களின் மழைக் காடுகள்’ ஆக அறிமுகப்படுத்தப்படுகின்ற ​பவளப் பாறைகள் என்பது பொலிப்ஸ் (Polyps)எனும் சிறிய உயிரினங்களின் சமூகத்தினால் கட்டியெழுப்பப்பட்டுள்ள நீருக்குக் கீழுள்ள சூழல் அமைப்பொன்றாகும். இப்பொலிப்ஸ்கள் அவைகளின் நுட்பமான கட்டமைப்புக்களைப் பாதுகாப்பதற்காக ஆழமற்ற கடலோர நீரில் கடல் மேற்பரப்பில் சுண்ணாம்பு வெளிப்புற எலும்புக் கட்டமைப்பொன்றை படிப்படியாக மெதுவாக உருவாக்குகின்றது. ஒரே இனத்தைச் சேர்ந்த முருகை பொலிப்ஸ்கள் ஆயிரக்கணக்களவில் ஒன்றாக பவளச்சமூகமொன்றை அமைப்பதோடு, அது பவளப் பாறையாகும் போது பல்வேறான முருகை பொலிப்ஸ்கள் பல இனங்களில் முருகைச் சமூகம் பலவற்றின் தொகுப்பொன்றாகும். அதிகமான பவளப் பாறைகளில் பொலிப்ஸ்களின்இளையங்களில் வாழ்கின்ற ஸூஸென்தெல்லே (Zooxanthellae) எனும்  ஒளித்தொகுப்பாளரான பாசி அடங்குகின்றது. பொலிப்ஸ்கள் மற்றும் பாசிகள் என்பவற்றுக்கிடையில் பரஸ்பர உறவொன்று உள்ளது. பவளப்பாசிகளுக்குப் பொருத்தமான சூழலொன்றும் ஒளித்தொகுப்புக்குத் தேவையான பதார்த்தங்களை வழங்குகின்றன. பாசிகளினால் பொலிப்ஸ்களுக்குத் தேவையான ஒட்சிசன் மற்றும் போசணைப் பதார்த்தங்களை உற்பத்தி செய்வதோடு  கழிவுகளை அகற்ற உதவுகிறது.பொலிப்ஸ்கள் சமுத்திரத்தில் ஒட்சிசனை உற்பத்தி செய்யும் பாரிய உற்பத்தியாளர்களில் ஒரு பகுதியாகும்.

                                                                                               Pocilloporadamicornisஹம்பாந்தோட்டை

பவளப் பாறைகள் வெவ்வேறான வடிவங்கள், அளவுகளில் மற்றும் நிறங்களில் இருப்பதோடு பவளங்கள் இரண்டு வகைகளில் காணப்படுகின்றன. அவை மென்மையான பவளப் பாறைகள்(Soft corals) மற்றும் கடினமான அல்லது வலுவானபவளப் பாறைகள் (Hard or strong corals) ஆகும். இலங்கையில் பவளப் பாறைகள், விளிம்புப் பவளப் பாறைகள்(Frnging reefs), திட்டு பவளப் பாறைகள்(Patchy reefs), மணற்கல் பவளப் பாறைகள்(Sandstone reefs) மற்றும் பாறைபவளப் பாறைகள்(Rocky reefs) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் பவளப் பாறைகள் பொதுவாக கடற்கரைக்குத் தூரமாக அமைந்துள்ள பாறைகள்(Off shore reefs). உண்மையான ​தடை​ பவளப் பாறைகள்இலங்கையில் இல்லை என்பதனால் இவை கடற்கரைக்கு அண்மையிலுள்ள பாறைகளாகக் கருதப்படுகின்றன. அவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட வாழிடங்களில் உருவாகினாலும் கலந்தவாறு காணப்படுகின்றன.

பல நூற்றாண்டுகளாக அரச துறைமுகமொன்றாக வரலாறொன்றைக் கொண்டுள்ள, சமுத்திரத்தில் சமுத்திரத்தில் ஒரு முக்கிய கடல் அமைப்பொன்றான மணற்பாறைத் தீவுகள்(Bar Reef)இலங்கையில் அதிகளவு பிரபலமானதும் பாரியதுமான முருகைக் கற்பாறையாகும். வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகார எல்லையின் கீழ் 1992 ஆம் ஆண்டில் சமுத்திர சரணாலயமொன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இது 306.7 சதுர கிலோமீற்றர் (118.4 சதுர மைல்கள்) முழுவதும் பரந்துள்ள ஆழமற்ற பவளப் பாறைகள், கடல் புற்றரைகள் மற்றும் ஆழமான பவளப் பாறைகளினால் கொண்டமைந்ததாகும். இம்மணற்பாறைச் சமுத்திர சரணாலயம் (Bar reef sanctuary)கடற்கரையிலிருந்து சில கிலோமீற்றர்கள் கடற் பக்கத்துக்கு ஆகுமாறு கடலுக்கு நடுவில் அமைந்துள்ள பிரதேசம் ஆவதோடு இது கல்பிட்டி தீபகற்பத்தின் வட முனையிலிருந்து மன்னார் விரிகுடா மூலம் போர்த்துக்கல் விரிகுடாவைப் பிரிக்கும் தீவுகள் வரை கடற்கரைக்கு இணையாக பரந்துள்ள கற்பாறைத் தொகுதியொன்றாகும். இது வட இலங்கையின் மன்னார் மாவட்டத்தில், யாழ்ப்பாணப் பிரதேசத்துக்கு அண்மையில் அமைந்துள்ள உயர் சுற்றுச்சூழல், உயிரியல் மற்றும் அழகியல் முக்கியத்துவம் வாய்ந்தபவள வகைகள் 156 வையும் மீனின வகைகள் சுமார்283  உம் வாழ்கின்ற பிரதேசமொன்றாகும். கல்பிட்டியவில், மணற்பாறை கடற் சரணாலயம்(N8° 22.57′ E79° 44.35′), 3 மீற்றர் வரை ஆழமான இலங்கையின் பல்வேறு கடல் வாழிடங்களை உள்ளடக்கிய ஒரேயொரு கடல் பாதுகாப்புப் பிரதேசங்கள் (Marine Protected Areas) ஆகும். மணற்பாறை கடற் சரணாலயம், கல்பிட்டி தீபகற்பத்தின் வட பகுதி, முட்வால் தீபகற்பம் மற்றும் காரைத்தீவு தீவுகளை உள்ளடக்குகின்றது. அது கிழக்கு – மேற்கு திசையிலிருந்து கண்டக்குழி மீன்பிடித் துறைமுகம் வரை நீளும் பாதைக்கு வடக்காக கிராம உத்தியோகத்தர் (GS -கிராம உத்தியோகத்தர்) பிரிவுகள் 11 இனைக் (இலங்கையில் சிறிய நிர்வாகப் பிரிவுகள்) கொண்டதாகும். நாட்டில் கடல் பாதுகாப்புப் பிரதேசங்கள் நான்கிற்குள் உள்ள கற்பாறையாக ஹிக்கடுவை கடற் தேசிய பூங்கா, புறாத்தீவு கடற்பூங்கா,மணற்பாறைச் கடற் சரணாலயம் மற்றும் ரூமஸ்ஸல கடற் சரணாலயம் எனும் பிரதேசங்களை இனங்காட்ட முடியும்.

Montiporaaequituberculata–ஹம்பாந்தோட்டை
Corralimopharia–புறாத் தீவு இறந்த பவளப் பாறைகளும் மேல் வளர்கின்றன.

கல்பிட்டியவில் மணற்பாறைபவளப் பாறைகள் பாரிய திட்டு கற்பாறைகள்பவளப் பாறைகள் ஆகும். எமது தீவின் கடற்கரையும் அதிகமான பவளப் பாறைகளினால் சுற்றியுள்ளன. கல்பிட்டியவின் பவளப் பாறைகள்இலங்கையின் பாரிய கற்பாறை அமைப்பானதுடன் ​எமது நாட்டில் கடல் உயிர்ப் பல்வகைத் தன்மைக்காக கவனிக்கத்தக்க கடமைகளை நிறைவேற்றுகிறது.

Coral colanies- புறாத் தீவு

பவளப் பாறைகள் என்பதனைப் பார்வையிடுவதற்கு இரசனையுடனான பொழுதுபோக்கான பெறுமதியொன்றைப் பெற்றுத் தருகின்ற அழகான இடங்களாகும். கல்பிட்டியவிலிருந்து ஒரு மணித்தியாலத்திலான படகுப் பயணத்தின் பின்னர், 300 கிலோமீற்றர் நீளமான மணற்பாறை கடற் சரணாலயமானது இலங்கையின் பாரிய கடற் பிரதேசத்தினை நெருங்க முடிகின்றது. மணற்பாறை கடற் சரணாலயத்தில் சுற்றுலா செய்வதற்கு சுழியோடுதல் அல்லது கண்ணாடி அடிப்பகுதியைக் கொண்ட படகொன்றைப் (Glass Bottom) பயன்படுத்தல் மிகப் பொருத்தமாகும். கண்ணாடி அடிப்பகுதிகளினை உடைய படகுகளினால் பவளப் பாறைகளை மாத்திரமன்றி பல்வேறு வர்ணங்களிலான மீன்களையும் பவளப் பாறைகளில் நீந்திச் செல்லும் விதத்தினைப் பார்வையிட முடியும்.  ஆழமற்ற பவளப் பாறைகள் மற்றும் மீன் உயிரினங்களைப் பார்வையிடுவதற்கான சிறந்த முறை ஸ்நோகலிங் ஆகும் (Snokeling). ஸ்நோகலிங் பரிந்துரைக்கப்பட்டாலும் சிறந்த நீச்சல் திறமையுள்ளவர்களுக்கு மாத்திரமேயாகும். ஒக்டோபர் இறுதியிலிருந்து ஏப்ரல் நடு வரை வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் ​மணற்பாறைகளை நோக்கி நுழைய முடியும் என்றாலும் டிசம்பர் மற்றும் ஜனவரி ஆரம்பத்தில் பலத்த காற்று ஏற்பட முடியும் என்பதோடு ​படகுப் பயணத்தில் அது மிகவும் சிக்கலாக முடியும். சுற்றுலா செய்வதற்குச் சிறந்த காலம் பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகும், மிதமான காற்று காரணமாக நிலையான கடல் மற்றும் சிறந்த நீருக்குக் கீழ் வெளிப்படையாக உள்ளதாகும். வர்த்தகக் காற்று பகலில் அதிகமாவதனால் அதிகாலையிலே அங்கு செல்வதற்கு முயற்சி செய்வது மிகப் பொருத்தமானதாகும்.​

                                             Faviaspeciosaமோல்டிவா பேன்க், வெடிதலதீவு பிரதேசத்துக்கு அருகில் அமைந்துள்ளது

இலங்கையைச் சுற்றியுள்ள பவளப் பாறைகளின் வளர்ச்சிக்குப் பிரதானமாக பருவமழைக் காலநிலை தாக்கம் செலுத்துவதோடு தென்மேற்குப் பருவமழை காலத்தில் கடலோர நீரின் கொந்தளிப்பான தன்மை அதிகரிப்பது பவளப் பாறைகளின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ளது. இலங்கையின் கற்பாறை அனைத்தும் கடற்கரையிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் உள்ளே அமைந்துள்ளதோடு அவை  கடல் மீனுற்பத்திக்கும் கவனிக்கத்தக்க பங்களிப்பொன்றையும் வழங்குகின்றது. பல்வகைத்தன்மையைக் கொண்ட கடல் உயிரினங்களின் வசதியான வாழிடங்களை உருவாக்கும் இவ்வாறான கற்பாறைகள், வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கல் இறால்கள், இறால்கள் மற்றும் நண்டுகள் உட்பட முதுகெலும்பற்ற வகைகள் பலவற்றுக்கும் கடற் புல் மற்றும் பாசி போன்ற கடல் தாவர வகைகள் பலவற்றுக்கும் உரித்தான இடமாகும். மேலும் டொல்பின்கள், திமிங்கிலங்கள், சுறாக்கள் மற்றும் கடலாமைகளும் கடற்கரைக்கு அண்மையிலும் கடலின்  கற்பாறைகளுக்கு இடையிலும் காணக் கிடைப்பதோடு பட்டாம்பூச்சி மீனினங்கள் பலவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Porites species - மோல்டிவா பேன்க்
Staghorn coral (Acropora Formosa)மோல்டிவா பேன்க்

வரையறுக்கப்பட்ட மக்கள் தொகை மற்றும் பிரதேசத்தின் வரையறுக்கப்பட்ட மீன் பிடித்தல் காரணமாக பல வருடங்களாக மணற்பாறை கடற் சரணாலயம் அதிக பழமை வாய்ந்த நிலையில் இருந்தாலும் தற்காலத்தில் கடற்கரைக்கு அண்மையில் அமைந்துள்ள கற்பாறைகள் அதிகளவானவை மனித நடவடிக்கைகள் காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. பிரதானமாக கடலில் பவளப் பாறைகளை அகழ்தல், அழிவுகரமான மீன்பிடி முறை, மீன்பிடி விளக்குகள் மோதுதல் மற்றும் கற்பாறை வளங்கள் கட்டுப்பாடின்றி அறுவடை செய்யப்படுதல் போன்ற கடல் சூழலின் முழு சேதத்துக்கும் காரணமாக உள்ளது. 2018-2019 ஆம் ஆண்டுகளில் பூகோள வெப்பநிலை அதிகரித்தமையினாலும் மணற்பாறை கடற் சரணாலயப் பிரதேசங்களில் அதிகளவான பவளப் பாறைகள் அழிவடைந்தன.

Symphyllia radians மோல்டிவா பேன்க்

இலங்கையினுள் கடல் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக சட்டமியற்றப்பட்டது ஒரு நூற்றாண்டுக்கு முன்னராகும். வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தினூடாக சகல பவளப் பாறைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இங்கு கடல் பன்றிகள் மற்றும் கடல் புட்கள் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் புத்தளம், கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக பருத்தித்துறை வரை பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளது. கடற்கரைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பவளப் பாறைகளின் வாழிடங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றாலும், நடுத்தர கீழ் நீர் வரியில் (MLWL)கடல் பக்கத்துக்கு 2  கிலோமீற்றர் உள்ளே கடலோர நீர்நிலைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.பவளப் பாறைகளைச் சார்ந்த பல பிரதேசங்கள் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன.   நாட்டின் கடல் பாதுகாப்புப் பிரதேசங்கள் நான்கினுள் உள்ள கற்பாறைகளாக ஹிக்கடுவை தேசிய பூங்கா, புறாத் தீவு தேசிய பூங்கா, பார் ரீப் கடல் சரணாலயம் மற்றும் ரூமஸ்ஸல கடல் சரணாலயம் போன்ற பகுதிகளை இனங்காண முடியும். இதற்கு மேலதிகமாக 11.04.2019 ஆம் திகதி 953 ஹெக்டயாரினைக் கொண்ட காயன்கர்னி பிரதேசமும் 11.10.2019ஆம் திகதி67,282.3ஹெக்டயாரினைக்கொண்ட சிறிய இராவணன் பெரிய இராவணன் வெளிச்ச வீடுகளுக்கிடையில் அமைந்துள்ள பவளப் பாறைகளும் வர்த்தமானி மூலம் கடல் சரணாலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு சட்ட ரீதியாக்கப்பட்டுள்ளது.

1999 இல் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இனால் இலங்கையின் கடற்கரை வளங்கள் முகாமைத்துவ செயற்றிட்டமொன்று (CRMP) ஆரம்பித்து கடலோர வளங்களில் நிலையான தன்மையை மேம்படுத்துவதற்காக ஒன்றிணைந்த முகாமைத்துவமொன்று நிறுவப்பட்டது. அதன் மூலம் கரையோர அரிப்பு, சூழல் மாசடைதல், முகாமைத்துவமொன்று இன்றி மீன்களைப் பிடித்தல், வளங்களை அதிகளவில் சுரண்டுதல் மற்றும் கடலோரப் பிரதேசங்களில் வறுமை போன்ற சிக்கல்களுக்குத் தீர்வினை வழங்குவதும் இடம்பெற்றது. அவ்வாறே இவ்வலயத்துக்காக நிலையான அபிவிருத்தித் திட்டமொன்றினை உருவாக்குவதற்காக களச் செயற்றிட்டத்தினைச் செயற்படுத்தும் அலகொன்று (FPIU) கண்டக்குழியில் அமைக்கப்பட்டது.

தாமதமின்றி, மழைக்காடுகளையும் விட அரிதான இவ்வாறான மதிப்பு மிக்க இயற்கை வளங்களை பாதுகாத்துக் கொள்வது எம் அனைவரினதும் கடமையாக இருக்க வேண்டும்.

                                                                                     Staghorn coral (Acroporaformosa) – புறாத் தீவுதேசிய பூங்கா

 

தொகுப்பு

Wikipedia

Travel Lanka

Current Status And Resource

Serendib

Springer Link

Time out

SARID

Sri Lanka’s Amazing   Maritime

தொகுப்பாளர் – தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்- ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்),வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்பு- ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்பு (ஆவணங்கள்)- அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு

ஆங்கில வியாக்கியானம் ​(கதை)- தானுகமல்சிங்ஹ

இணைய வடிவமைப்பு-சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு

படங்கள்-  சன்ன சுரவீர