简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 26 – ஹொரகொல்ல தேசிய பூங்கா

Content Image

முதலை ஓடிவிட்டது

2017ஆம் ஆண்டிலிருந்து 2021 வரை நான் ஹொரகொல்ல தேசிய பூங்காவின் பூங்காப் பொறுப்பாளராகக் கடமையாற்றினேன். ஹொரகொல்ல பூங்காவினுள் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை வழங்குதல், அநாதைகளாகும் குட்டிகளுக்கும் வயதான விலங்குகளையும் கொண்டு வந்து கவனித்துப் பார்துக் கொள்ளல், அவ்விலங்குகளை மேலும் வைத்துக் கொள்வதற்குத் தேவையாயின்அத்திடியவில் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்புதல், அவ்வாறு இல்லையாயின் மீண்டும் காட்டிற்கே விடுவித்தல், இங்குள்ள விலங்கைளுக்கு உணவு நீர் வழங்குதல், பிரதேசத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளில் தலையீடு செய்தல் போன்ற பணிகளை ஹொரகொல்ல பூங்காவில் எமது பிரதான கருமங்களாக இருந்தன. நாம் அதன்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

ஹொரகொல்ல தேசிய பூங்காவை சிறிமாவோ பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரே அரசுக்கு வழங்கினார். இது 35 ஏக்கர் விசாலமானது. தேசிய பூங்காவுக்கு நுழையும் இடத்திலேயே சுமார் 3 ஏக்கர் வாவி ஒன்றுள்ளது.  மழை காலத்திற்கு சிறிய கால்வாய் ஊடாக இவ்வாவிக்கு நீர் வருகின்றது.  மழை இல்லாத காலத்திலும் வாவியில் நீர் உள்ளது. ஆமைகள், மீனினங்கள் இவ்வாவியில் வாழ்கின்றன.  நாம் கைப்பற்றும் ஆமைகளையும் இவ்வாவிக்கே விடுகின்றோம்.

நான் வந்த காலத்தில் இப்பூங்காவில் உவர்நீர் முதலைக் குட்டியொன்று இருந்தது. பிடித்துக் கொண்டு வந்து போடப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் இம்முதலைக்குட்டி விரைவாக வளர்ந்நு விட்டது. சுமார் 10, 15 வயதுள்ள இக்குட்டி பார்த்திருக்கும் போதே இளமையான உறுதியான முதலையானது. இது  பூங்காவினுள் அங்கும் இங்கும் செல்லத் தொடங்கியது. இதனை வில்பத்துவில் விடுவிக்க வேண்டும் என நாம் எண்ணியிருந்தோம். எனினும் அதற்கு முன்னரே ஒரேயடியாக முதலை காணாமல் போயிற்று. பல நாட்கள் காணாமல் போயிருந்தது. முதலையினால் மக்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படலாம்.  அதே போன்று மனிதர்களினாலும் வாகனங்களினாலும் முதலைக்கு ஆபத்து ஏற்படலாம். நாம் மிகவும் குழப்பமடைந்தோம்.

நாம் எல்லா இடங்களிலும் தேடினோம். அதன் பின்னர் அருகிலிருந்த கிராமமொன்றிலிருந்து முதலையொன்று நடமாடுவதென செய்தியொன்று கிடைத்தது. ஹொரகொல்ல வளவைக்கு அருகில் தென்னை ஓலையால் வேயப்பட்ட சோற்றுக் கடைக்கு அருகில் தண்ணீர்க் குளமொன்று இருந்தது. முதலை குளத்துக்குச் சென்று இறங்கியுள்ளது என்ற செய்தி கிடைத்தது. முதலையொன்றைப் பிடிப்பது இலகுவல்ல. அங்கும் இங்கும் நீந்துகிறது. முன்னே பாய்கிறது. வாலினால் அடிக்கின்றது.  அன்று கட்டுப்பாட்டாளர்களின்  வேலைநிறுத்தப் போராட்டமொன்று. நான் வட்டார உதவியாளர்  சந்திரசிரி மற்றும் கள உதவியாளர் சுமித்துடன் அவ்விடத்துக்குச் சென்றேன். சுமார் 4 மணித்தியாலயங்கள் சிரமப்பட்டு​ பொறி இட்டு முதலையைப் பிடித்தோம். அதன் பின்னரே நிம்மதியான மூச்சொன்றை விட முடிந்தது. சம்பவத்தைப் பார்வையிட சனம் கூடியிருந்தது.

நாம் முதலையைப் பலகையொன்றில் கட்டி அங்கிருந்து வில்பத்துவிற்கு எடுத்துச் சென்றோம். வில்பத்துவிற்குச் செல்லும் போது அதிகாலையானது. எலுவன்குலத்திலிருந்து உள்ளே சென்று முதலையைப் பாதுகாப்பாக விடுவித்தோம்.

யாருக்கும் ஆபத்து ஏற்படாத முறையில் முதலையைப் பிடிக்கக் கிடைத்தது பெரிய விடயம். நான் ஹொரகொல்லவில் செலவழித்த காலத்தை நினைவு கூரும் போது இம்முதலை பற்றிய சம்பவம் நினைவுக்கு வருகிறது.

திரு. டீ. ஆர். பிரதீப் அவர்கள்

திரு. டீ. ஆர். பிரதீப் அவர்கள் 3 ஆம் தரத்தில் வட்டார வன பாதுகாப்பாளராக 1998 ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதியாகும். போட்டிப் பரீட்சையொன்றில் சித்தியடைதல் அவருக்கு அப்பாக்கியத்தை ஈட்டிக் கொடுத்தது.

அவர் வில்பத்து தேசிய பூங்காவின் விலச்சிய வட்டாரத்துக்கு முதல் நியமனம் பெற்றார். அக்காலம் *எல். டீ. டீ. ஈ. குழப்பம் மிகுந்த காலமாகும். பின்னர் தந்திரிமலை வில்பத்து கலா ஓயா வனம், அனுராதபுர கச்சேரி வட்டார அலுவலகம், முத்துராஜவெல வனம், ஹொரகொல்ல, வஸ்கமுவ தேசிய பூங்காவின் கிரி ஓயா வனம் அவர் கடமையாற்றிய இடங்களாகும். 

வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம்நடாத்தப்படுகின்ற கிரிதலை டிப்ளோமா பாடநெறியை நிறைவேற்றுவதற்கு பிரதீப் அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்ததோடு அதன் பகுதியொன்றாக இந்தியாவில் டெஹெராதுன்னில் 2 கிழமைகள் பயிற்சி பெற்றார். அதற்கு மேலதிகமாக ஆயுதங்கள் பற்றிய குறுகிய பாடநெறியொன்றையும் வனவிலங்கு சட்டம் பற்றிய  குறுகிய பாடநெறியொன்றையும் நிறைவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

வட கொரியாவில் உலக ஈரநில நிகழ்ச்சிக்கும் சீனாவில் காலநிலை மாற்றம் பற்றிய பட்டறையொன்றில் கலந்து கொள்வதற்கும் பிரதீப் அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

அவருடைய அன்பான குடும்பம், மனைவி மற்றும் மகளைக் கொண்டது.  அவருடைய மனைவி டீ. டீ. என். எஸ்.கே. போம்புவல அவர்கள் பட்டதாரி ஆசிரியரொருவர் ஆவதோடு மாவனல்ல, பெமினியாவத்த மகா வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவில் கடமையாற்றுகிறார். 13 வயதாகும் மகள் டசிதி திஸாரா, கேகாலை ஸ்வர்ண ஜயந்தி பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்கிறார்.

அவர்களின் முகவரி பெமினியாவத்த, மாவனல்ல ஆகும்.

*எல். டீ. டீ. ஈ. – தீவிரவாத அமைப்பொன்றாக பெயர் குறிக்கப்பட்ட அமைப்பொன்றாகும்.

ஹொரகொல்ல தேசிய பூங்கா

பண்டாரநாயக்க குடும்பத்தின் இல்லமாக இருந்த ஹொரகொல்ல வளவைக்கு அருகில் அமைந்துள்ள ஹொரகொல்ல தேசிய பூங்கா இலங்கையின் புதிய பூங்காக்களில் ஒன்றாகும். எண்ணை மரங்கள் அதிகமாகக் காணப்படுவதனால் இப்பெயரால் அழைக்கப்படுகின்ற ஹொரகொல்ல தேசிய பூங்கா இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள ஒரே நகர பூங்காவாகும். இப்பூங்கா கொழும்பிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதோடு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள சிறியதுமான பூங்காவாகும். 13.40 ஹெக்டயார் நில அளவைக் கொண்ட இத்தேசிய பூங்கா கம்பஹ மாவட்டத்தில் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவில் நாம்பதலுவ கிராம அதிகாரி பிரிவில் அமைந்துள்ளது. எழுபதாம் நூற்றாண்டில் அரசுக்குரித்தான இந்நிலம் வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரதேசத்தில் உள்ள பல உயிர்ப் பல்வகைத்தன்மையை கவனத்தில் கொண்டு சரணாலயமொன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டதோடு 2004 ஜுலை 28 ஆம் திகதி இலக்கம் 1351/17 உடைய வர்த்தமானிப் பத்திரிகை மூலம் ஹொரகொல்ல தேசிய பூங்காவாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

                                                                                                                          பெயர்ப் பலகைகள்

ஹொரகொல்ல தேசிய பூங்கா ஹியுமஸ்  மண் அமைப்பைக் கொண்ட தாழ்நில பசுமையான வனம் என்பதோடு ஆண்டு முழுவதும் வெப்பமான வெப்பநிலை நிலவுகிறது. இத்தேசிய பூங்காவில் பரவலாக வளர்ந்த பல்வேறான உள்நாட்டு மர இனங்களில் எண்ணை, கருவா, உவா மரம், கூந்தல் பனை, நெந்துன், காட்டு மா, அரச மரம், காட்டுநொச்சி எனும் பெயர்களினால் அழைக்கப்படுகின்ற தாவரங்களைக் காண முடிகின்றது. யானைக் கொழிஞ்சி வகைகளைப் பெருமளவில் காணக் கிடைக்கும் இந்நிலத்தில் அளவில் சிறியதாக இருந்தாலும் உயிர்ப் பல்வகைத்தன்மை நிறைந்த பூங்காவாகும்.  பூங்கா தேக்கு மற்றும்  கருங்காலி போன்ற உயர்ந்த மரங்களினாலும் ஆதிக்கம் செலுத்தப்படுவதோடு கீழ் பற்றைகள், கொடிகள் மற்றும் மூங்கில்களினாலும் அடர்த்தியாக உள்ளது.

எண்ணை

பூங்கா முழுவதும் நிலப்பரப்பினை உள்ளடக்கியவாறு பல்வேறான தாவர இனங்களும் புட்களையும் காண முடிகின்ற இப்பூங்காவில் பல்வேறான தாவரங்களின் மூலம் பறவைகளுக்கு, விலங்குகளுக்கும் ஊர்வனவற்றுக்கும் உணவு மற்றும் போதுமான நீரை வழங்குவது போன்றே என்றும் பசுமையான காடுகளில் காணக் கிடைக்கின்ற விலங்கினங்கள் பெரும்பாலானவற்றுக்கு போதுமான வாழிடமாகும்.  எனினும் இப்பூங்கா விலங்கினங்களை விடவும் தாவரங்களினால் நிறைந்தது. எமக்குப் பழக்கமான வானளவு உயர்ந்த கட்டடங்களுக்குப் பதிலாக பல்வேறுபட்ட உயர்ந்த மர இனங்கள் உள்ள இப்பூங்காவில் மரங்களில் வாழ்கின்ற பல்வேறுபட்ட பறவைகளின் அவ்வப்போது கேட்கின்ற ஒலிகள் சிலவேளைகளில் பொழுதுபோக்கை வழங்குகின்றது.

பூங்காவின் உள்ளே
யானைக் கொழிஞ்சி

33 ஏக்கர் முழுவதும் பரந்துள்ள பூங்காவாவில் பாலூட்டியினங்கள் 10, பறவையினங்கள 64, மீனினங்கள் 7 மற்றும் வண்ணத்துப்பூச்சியினங்கள் 28 க்குமான வசிப்பிடமாகும். மீன்பிடிப் பூனை, செம்மான், தேவாங்கு, பொன்னிறக் குள்ளநரி, சாம்பல் முகக் குரங்கு, பழுப்பு மலை அணில், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி உட்பட பல்வேறான விலங்குகளுக்கு இப்பூங்கா வசதிகளை வழங்குகின்றது. அழிந்து செல்லும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ள இனங்கள் அதிகமானவற்றையும் ஹொரகொல்ல தேசிய பூங்காவில் காண முடிவதோடு மலைப்பாம்புகள் மற்றும் நாகப்பாம்புகளை பூங்காவில் காணக் கிடைக்கின்ற பெரும்பாலான ஊர்வனவைகளுள் ஆகும்.

ஓணான்

பறவையினங்கள் 100 க்கும் அதிகமான எண்ணிக்கையானவை உலாவும் இத்தேசிய பூங்கா பறவை கண்காணிப்பாளர்களின் இன்னும் விர்ப்பமான இடமொன்றாகும். இலங்கைக்கே உரித்தான குக்குறுவான், இலங்கை தொங்கும் கிளி, இலங்கை மைனா, சாம்பல் கிளி, கொடிக்கால் வாலாட்டி போன்ற பறவைகளை இங்கு கண்டு கொள்ள முடியும்.

அக்காக்குயில்

இப்பூங்காவினுள்ள பாதைகள் நெடுகில்  நடந்து செல்லும் போது, அங்குள்ள காற்றின் புத்துணர்ச்சியினால் உங்களது மனஅழுத்தம் நீங்கும். காட்டில் செல்லும் ஜிப் சவாரிக்குப் பதிலாக , மிகவும் நிதானமான முறையில் சூழல் தர்மத்துடன் இணைவதற்குப் பயன்படும் ஹொரகொல்ல தேசிய பூங்கா பார்வையாளர்களுக்காக செயற்பாடுகள் பலவற்றை முன்வைக்கின்றது. பறவைகளைப் பார்வையிடுவது இங்குள்ள பிரசித்தமான செயற்பாடொன்றாவதோடு பூங்காவுக்கே உரித்தானதும் புலம்பெயர் பறவையினங்களை இனங்காண்பதற்கும் போதுமான சந்தர்ப்பங்களை வழங்குகின்றது. சுதந்திரமாகத் திரிவதற்கும் உல்லாசப் பயணங்களுக்கும் பிரசித்தி பெற்ற இப்பூங்கா பார்வையாளர்களுக்கு இயற்கையாக நிதானமாக ஆய்வு செய்வதற்கும் இடமளிக்கின்றது.

விபரப் பலகையொன்று
ஓய்வு பெறும் இடமொன்று

கொழும்பு கண்டி பாதையில் 35 கிலோமீற்றர் பயணம் செய்வதனால் ஹொரகொல்ல தேசிய பூங்காவினை அடைய முடியும். நிட்டம்புவிலிருந்து திரும்பி வேயங்கொட திசைக்கு ஒரு கிலோமீற்றர் செல்லும் போது சந்திக்கும் பின்னகொல்ல சந்தியில் 6 கிலோமீற்றர் தூரத்தில் பூங்காவின் அலுவலகம் காணப்படுகின்றது.

ஹொரகொல்ல தேசிய பூங்கா இலங்கையின் பாதுகாப்பு முயற்சிகளுக்கு முக்கிய பிரதேசமொன்றாவதோடு பூங்காவில் சிறிய அளவு மற்றும் நகர பிரதேசத்துக்கு அருகில் அமைந்திருப்பதனால் அது பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கும் அபிவிருத்திக்கும் உள்ளாகின்றது. பூங்காவின் இருப்பு மற்றும் தொடர்ச்சியான உயிர்ப் பல்வகைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் வாழிடங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான சுற்றுலா வியாபாரம் உட்பட பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது.

குளம்

ஹொரகொல்லதேசியபூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Scientific Name

හදුන් දිවියා

மீன்பிடிப்பூனை

Fishing cat

Prionailurus viverrinus

වැලි මුවා

செம்மான்

Barking deer

Muntiacus muntjak

නරියා

பொன்னிறக் குள்ளநரி

Golden jackal

Canis aureus

වල් ඌරා

காட்டுப்பன்றி

Wild boar

Sus scrofa

ඉත්තෑවා

முள்ளம்பன்றி

Porcupine

Hystrix indica

කලු වදුරා

சாம்பல் முகக் குரங்கு

Purple faced langur

Semnopithecus vetulus

දඩු ලේනා

பழுப்பு மலை அணில்

Giant squirrel

Ratufa macroura

උණ හපුළුවා

தேவாங்கு

Gray Slender Loris

loris lydekkerrianus

ශ්‍රි ලංකා රන් මුහුණත් කොට්ටෝරුවා

குக்குறுவான்

Yellow-fronted barbet

Megalaima flavifrons

ශ්‍රී ලංකා ගිරාමලිත්තා

இலங்கை தொங்கும் கிளி

Sri Lanka Hanging Parrot 

Loriculus beryllinus

ශ්‍රී ලංකා  සැලළිහිණියා 

இலங்கை மைனா

Sri Lanka  Myna

Gracula ptilogenys

ශ්‍රී ලංකා අලු  ගිරවා

சாம்பல் கிளி

Sri Lanka Layard’s Parakeet 

Psittacula calthropae

කැළෑ හැලපෙන්දා  

கொடிக்கால் வாலாட்டி

Forest wagtail 

Dendronanthus indicus

උකුසු කෝකිලයා

அக்காக்குயில்

Common hawk cuckoo

Hierococcyx varius

නාගයා

நாகம்

Cobra

Naja naja

පිඹුරා

மலைப்பாம்பு

python

Python molurus

කටුස්සා

ஓணான்

Common garden lizard

Calotes versicolor

ஹொரகொல்ல  தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific Name

හොර

எண்ணை

Hora

Dipterocarpus zeylanicus

කැකුණ

கருவா

kekune

Canarium zeylanicum

ගොඩපර

உவா மரம்

Godapara 

Dillenia retusa

කිතුල්கூந்தல் பனைkitul

Caryota urens

නැඳුන්நெந்துன்Nedun

Pericopsis mooniana

ඇටඹகாட்டு மாAtambaMangifera zeylanica
බෝරුක්அரச மரம்Sacred fig

Ficus religiosa

මිල්ලகாட்டுநொச்சிMillaVitex  altissima
පුස්වැල්யானைக் கொழிஞ்சிBeen entada

Fabaceae sps.

තේක්කதேக்குTeak

Tectona grandis

කළුවරகருங்காலிEbony

Diospyros ebenym

குப்பாளர்  –  தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா,அபிவிருத்தி  உத்தியோகத்தர்,வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (வனஜீ.வன. வள. பா. அ)

இணய வடிவமப்புஎன்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ) சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள்கவிந்து சதமின் குணவர்தன