简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 2 – கஹல்லே பல்லேகெலே சரணாலயம்

Content Image

சதுப்புமுதலை என் பின்னால் துரத்தியது

நான் சேவைக்கு இணைந்த காலத்தில் இந்நிகழ்வு நடந்தது. அப்போது, வில்பத்து வனம் எட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. எனக்கு, 3 ஆம் தர வனப் பாதுகாப்பு உத்தியோகத்தராக ‘பொம்பரிப்பு’ எனும் இடத்தில் தொழில் கிடைத்தது. அக்காலத்தில் கள வேலைகளுக்கு அரசிடமிருந்து வாகனங்கள் தரப்படவில்லை. நாம் கால்நடை அல்லது சைக்கிள் மூலமே பயணம் செய்தோம்.

இவ்வழியில் பழைய ஒரு வயல்வெளி காணப்பட்டது. அதனூடாக எவ்வாறேனும் வாகனங்கள் செல்ல முடியாது. அதுமட்டுமன்றி சுமார் இருபது கிலோ மீற்றர் தூரம் வரை மணலாகக் காணப்பட்டது.

நாம் சோதனையிட்டால் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜராக்குவர். அந்நாட்களில் குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு உட்படுத்துவதற்கு வில்பத்து பிரதான வாயிலால் வாகனமொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும். வழக்கு விசாரணை நடைபெறும் தினங்களில் நாங்கள் நீதிமன்றத்துக்கு நடந்தே செல்வோம்.

நான் வேலை செய்த பொம்பரிப்பு வனத்திலிருந்து வில்பத்து பிரதான வாயிலுக்கு நாற்பத்தாறு கிலோ மீற்றர் தூரம் இருக்கின்றது. நான் ஏரிக்குப் பக்கத்தால் வரும் போது பெரிய முதலை​யொன்று ஏரிக் கரையிலிருந்து திடீரென என் முன்னே பாய்ந்தது. இம்முதலை சுமார் பதினைந்து அடிகள் நீளமானது. அதிஷ்டவசமாக நான் அகப்படவில்லை. பாய்ந்து ஓட ஆரம்பித்தேன். மணற் பாதை புதைவதால் கஷ்டத்துடன் ஓடினேன். பின்னர் மறைந்திருந்து பார்க்கும் போது  முதலை என்னைப் பின்னால் துரத்தி வந்து கொண்டிருந்தது. எனக்கு நடுக்கமெடுத்தாலும் ஓட முடிந்தது.  முதலை சுமார் எட்டு மீற்றர் தூரத்திற்குத் துரத்தியது. அதன் பின்னர் இப்பாதையில் செல்லும் போதெல்லாம் முதலையைப் பற்றி விசேட கவனமெடுத்தேன்.

நீதிமன்றத்துக்குச் செல்லும் நாட்களில் நாங்கள் அதிகாலையில் எழுந்து நாற்பத்தாறு  கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்ல ஆரம்பிப்போம். தேவையான ஆவணங்களையும் ஏனைய பொருட்களையும் ஒரு பையில் இட்டு எங்கள் முதுகில் சுமந்து கொண்டோம்.

பொம்பரிப்புவில் இருந்து ஏழு கிலோ மீற்றர் சென்ற பின் தலவில விடுதி இருக்கின்றது. அங்கே சிறிது ஓய்வெடுத்துக் கொள்ள முடியும். பின்னர் முப்பத்தொன்பது கிலோ மீற்றர் நடந்து சென்றோம். வில்பத்துவ வாயிலுள்ள இடத்துக்கு ‘ஹுணுவில’ என்று அழைக்கப்படும்.

தலவில விடுதியைத் தாண்டி வரும் போது மணலுள்ள பிரதேசப் பகுதியில் ‘கொக்கரிய’ எனும் ஏரி காணப்படுகின்றது. இந்த ஏரியிலுள்ள களப்பு நீரினால், ஏரிக்கு அருகிலுள்ள மணற்பாதை புதையும் தன்மையுள்ளது.

நான் ஒரு நாள் அதிகாலை நீதிமன்றத்துக்குச் செல்ல வந்தேன். நேரம் காலை ஆறு மணி போல இருக்கும். சிறிதாக சூரிய ஔி விழுந்திருந்தது. எனது கையில் ஆயுதம் இருக்கவில்லை. காட்டு விலங்குகளைப் பயமுறுத்துவதற்காக உபயோகிக்கும் வெளிச்ச வெடிகள் (தன்டர் ப்ளேஷ்) இரண்டு அல்லது மூன்று இருந்தன. பாதுகாப்புக்குப் பக்கத்தில் யாரும் தென்படவில்லை.

வேஹான் சஹன்ஜித் வேரகம

இருபது வயதிலும் குறைந்த இளைஞராக 1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தர வன பாதுகாப்பாளராக வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைந்த சஹன்ஜித் வேரகம அவர்கள் தற்போது 2 ஆம் தர மற்றும் 1 ஆம் தர வினைத்திறன் தடைகாண் பரீட்சையைத் தாண்டி அனுராதபுர வலய உதவிப் பணிப்பாளராக பணி புரிந்தார்.

மனைவியையும், மகளொருவரையும், இரு மகன்களையும் கொண்ட வேரகம அவர்களின் அன்பான குடும்பம் கண்டி மாவட்டத்தில் கலகெதர பிரதேசத்தில் வாழ்வதோடு அவர் அனுராதபுரஉத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து தம் கடமைகளை நிறைவேற்றுகிறார்.

கஹல்ல பல்லெகெலே சரணாலயம்

கஹல்லபல்லெ கெலே சரணாலயம் வட மத்திய மாகாணத்தில் அனுராதபுர மாவட்டத்திற்கு உரித்தான கலாகம் பகுதி , பலாகல மற்றும் கெகிராவ பிரதேச செயலகப் பிரிவுக்கும், வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ மற்றும் பொல்பிதிகம பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வியாபித்துள்ளது. இந்த சரணாலயத்தின் தென்கிழக்குப் பகுதியில் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தின் எல்லை அமைந்துள்ளது.

1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி, இதன் மொத்த நிலப்பரப்பு 216.9 சதுர கிலோ மீற்றர் அல்லது 26690 ஹெக்டயராக அறிவிக்கப்பட்டது. அதன்அமைவிடத்தின் காரணமாக, சரணாலயத்தைச் சுற்றி குடியேற்றங்கள் உள்ளதோடு, ஹக்வடுன ஓயாவும் சியம்பலாங்கமுவ வாவியும் இதன் அண்மையில் அமைந்துள்ளன. இப்பன்கமுவ முதல் பொல்பிதிகம ஊடாக மொரகொல்லாகம வரை நோக்கிச் செல்லும் பாதையும், கலேவல இல் இருந்து நேகம வரை நோக்கிச் செல்லும் பாதையும் சரணாலயத்தை அடையக் கூடிய பிரதான பாதைகளாகும். மடாடுகம, கலாவெவ​ ஊடாக கெகிராவ பாதையைத்தொடர்புபடுத்தி குறுக்கு வழிகள் பல இந்த சரணாலயத்துக்கு அண்மையில் காணப்படுகின்றன.

மகாவலி எச்வலயத்தின் கீழ் இப்பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகள், மக்கள் குடியிருப்பு மற்றும் அபிவிருத்தி  ​நடவடிக்கைகள் நடைபெறும் காரணத்தால் தம் வாழ்விடங்களை இழந்த காட்டு யானைகள் உட்பட வன விலங்குகளுக்கு வாழ்விடமளிப்பதனை நோக்காகக் கொண்டு ஹக்வடுன ஓயா, கலா வாவி மற்றும் பலலு ஓயா என்பவற்றை அண்மித்து இச்சரணாலயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கஹல்ல பல்லெகெலே சரணாலயம் அதன் அளவுகளைக் கணிக்கும் போது பல்லுயிர்களை பெருமளவு கொண்டது. வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்படும் சரணாலயத்தில் அரச காணிகள் போன்று தனியார் காணிகளும் அமைந்திருக்கலாம். எனினும் அத்தகயை தனியார் காணிகளில் ஏதேனும் நிர்மாணப் பணிகள் அல்லது ஏதேனும் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொ​ள்வதாயின் அதற்கு வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற்றுக் கொ​ள்ள வேண்டும்.

கஹல்ல பல்லெகெலே சரணாலயத்தில் சுமார் 50 கிராமங்கள் அமைந்துள்தோடு, சரணாலயத்தின் எல்லைகளைச் சுற்றியும் பல கிராமங்கள் அமைந்துள்ளன. இச் சகல கிராமங்களும், இதனை சரணாலயமாகப் பிரகடனப்படுத்த முன்னரே அமைந்திருந்தவையாகும். இந்தப் பழைய கிராமங்கள் சிறிய வாவிகளுக்கு அருகில் அமைந்துள்தோடு தேங்காய், வாழைப்பழம், பழங்கள் போன்ற வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கைகளும் இங்கு இடம்பெற்று வருகின்றன. ரிடிகல பாதுகாப்பு ஒதுக்கமும் இச்சரணாலயத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது.

வருடந்தோறும் உலர் காலநிலையொன்று காணப்படுதோடு, இங்கு சராசரி வருடாந்த வெப்பநிலை சுமார் 32 பாகை செல்ஸியஸ் ஆகும். வருடத்தில் ஏப்ரல்-மே மற்றும் ஒக்டோபர் – நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி கிடைப்பதோடு​ ஜூன் முதல் செப்டெம்பர் இறுதி வரை நீண்ட கோடயான காலநிலை காணப்படும். நவம்பர்- ஜனவரி வரை பருவ மழை கிடைக்கின்றது. ​சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 1450 முதல் 1650 மில்லி மீற்றருக்கும் இடையில் ஆகும்.

கலா வாவி

கஹல்ல பல்லெகெலே சரணாலயத்தில் பிரதான நான்கு முக்கிய நீரோடை​கள் காணப்படுகின்றன.கஹல்ல கிழக்கு சரிவிலிருந்து மொரகொல்ல ஓயா, கலா வாவிக்கு பாய்கின்றது. தென்  சரிவிலிருந்து ஹக்வடுனா ஓயா பாய்வதோடு, பல்லெ கெலே மேற்கு சரிவிலிருந்து மீ ஓயா பாய்கிறது. இங்குள்ள பிரதான நீர் ஆதாரம் சியம்பலங்கம ஓயா ஆகும். இதற்கு மேலதிகமாக விவசாய நடவடிக்கைகளுக்காக பலலு வாவி, போகஹபத்துவ வாவி, ஆடியாகல வாவி, திவுல் வாவி, உல்பத் வாவி, ரம்பேவ வாவி, மில்லகொட வாவி ஆகிய பல வாவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இச்சரணாலயத்தில் 256 வகையான தாவரங்கள் உள்ளதோடு இங்கு உயர் விதானமுடன் கூடிய முதன்மைக் காடுகள், கீழ் விதானமுடைய மலைகள், மத்திய அளவிலான அடுக்குக் காடுகள், புதர்கள், ஈரநிலங்கள், நெல் வயல்கள், மலைகள் போன்ற சுற்றுச் சூழலியல் அமைப்புக்களைக் காணக் கூடியதாக உள்ளது.

மரஅணில் (Ratufa macroura)

இச்சூழல் அமைப்புக்களுடன் தொடர்புடைய ஏராளமான விலங்கினங்கள் விசேட எண்ணிக்கையில் இங்கு காணப்படுகின்றன. பாலூட்டிகள், மீனினங்கள், ஊர்வன, நீர்வாழ் உயிரினங்கள், பறவையினங்கள், வண்ணத்துப்பூச்சிகள், பூச்சியினங்கள், மொலொஸ்காக்கள் (நத்தைகள்)  போன்ற பல்வேறு வகையானவற்றை அதிகளவில் காணலாம். யானை, கரடி, கறுப்பு குரங்கு, புலி, எருமைகள் இங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் உயிரினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மான், காட்டு எருமைகள், தேவாங்கு, அழுங்கு என்பன அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் உயிரினங்களாகும். குரங்கு, நரி, சிறுத்தை,ஹோதம்புவா, முகடியா, முள்ளம்பன்றி, மரஅணில் போன்ற உயிரினங்களும் இங்கு வாழ்கின்றன.கஹல்ல பல்லெகெலே சரணாலயத்தில் 150- 200 அளவிலான யானைகள் வசிப்பதோடு,  அவற்றுள் தந்தங்களையுடைய யானைகள் சுமார் 10 காணப்படுகின்றன. கைவிடப்பட்ட சேனைகள், வாவிக் கரைகள், தேக்கப்பயிர்ச் செய்கை​ நிலங்கள் என்பன யானைகள் விருப்பமான வாழிடங்களாகும். பகல் காலங்களில் யானைகள் புதர்களுக்கு அருகிலுள்ள மரங்களின் நிழலில் தம் நேரத்தை சுதந்திரமாகக் கழிக்கின்றன.          

இளஞ்சிவப்பு மார்பக பச்சைப்புறா (Treron bicinctus)

மாலை நேரங்களில் வாவிக் கரைகளுக்கு அருகில் அமைந்திருக்கும் புல்வெளிகளுக்கு வரும் அவை, வாவிகளின் மூலம் தமது நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. புல்வெளிகள் போன்றே தேக்கப் பயிர்ச் செய்கை​களும் அவற்றிற்குத் தேவையான சிறந்த உணவை வழங்குகின்றன.

இச்சரணாலயத்தில் அதிகளவான மான்களையும் மரைக் கூட்டங்கள் பலவற்றையும் காணக் கூடியதாக உள்ளன. அவை கீழ் அடுக்குக் காடுகளிலும், மேல்  அடுக்குக் காடுகளிலும் காணப்படுகின்றன. ஏழு அல்லது எட்டு புலிகள், சில கரடிகள் இங்கு வாழ்கின்றன. இலங்கையில் சுமார் 427 வகையான பறவைகள் பதிவாகியுள்ளன. அவற்றில் சுமார் 189 இனங்கள் புலம் பெயர்ந்த பறவைகளாகும். இலங்கையில் சுமார் 236 வகையான புலம் பெயர்ந்த பறவைகள் வாழ்கின்றன. அவற்றில் 34 வகையானவை  இலங்கைக்குச்சொந்தமானவை.

கஹல்ல பல்லெகெலே சரணாலயத்தில் உள்நாட்டு மற்றும் இடம் பெயர்ந்த பறவைகளை அடையாளம் காணலாம். இவற்றில் பல பறவையினங்கள் மேல் முதன்மைக் காடுகளில் காணப்படுகின்றன. சேனைப் பயிர்ச்செய்கை நிலங்கள், பற்றைக் காடுகள், ஈரநிலங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் என்பன அவற்றின் வாழிடங்களாகும்.

இலங்கையில் சுமார் 171ஊர்வன வகைகள்பதிவாகியுள்தோடு அவற்றில் 75 வகையானவை இலங்கைக்கு உரித்தானவை. கஹல்ல பல்லெகெலே சரணாலயத்தில் பல வகையான ஊர்வன இனங்களைக் காணலாம். அதற்குரிய பல ஊர்வன இனங்கள் ஆபத்துக்களுக்கு உள்ளாகியுள்ளன. இலங்கைக்கு உரித்தான அனைத்து உயிரினங்களிலும் 45% ஆனவை ஊர்வன ஆகும். நட்சத்திர ஆமைகள், ஓணான் இனங்கள், கபரகொயா​, தலகொயா, முதலை, பல்லியினங்கள் என்பனவும் இங்குகாணப்படுகின்றன. அவ்வாறே மணல் பாம்புகள், மலைப் பாம்புகள், நாகப்பாம்புகள் போன்ற பல வகையான பாம்புகளும் உள்ளன.

இலங்கையில் 82 வகையான மீனினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 20 வகையானவைகஹல்ல பல்லெகெலே சரணாலயத்தில் கண்டறியப்பட்டுள்ளதோடு, அவற்றுள் 4 வகையானவை இதற்கு உரித்தானவை.கஹல்ல பல்லெகெலே சரணாலயத்திலிருந்து  47 வகையான வண்ணத்துப்பூச்சியினங்கள் கிடைத்துள்ளதோடு, அவற்றில் 5  வகையானவை உரித்தானதாக உள்ளன. விசேடமாக 3 இனங்கள் ஆபத்திலுள்ளன. ப்ளூ மொமன்ட், கொமன் பென்டட் , பிகொக், ப்ளூ அத்மிரால் போன்றவை அவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பவையாகும்.கொமன் இந்தியன் க்ரோ, புஷ் ப்ரவுன் இதற்கு உரித்தானவை. இந்த பல விதமான வண்ணத்துப் பூச்சியினங்கள் சரணாலயத்தில் பற்றைக் காடுகளுக்கு அண்டிக் காணப்படுகின்றன.

கஹல்ல பல்லெகெலே சரணாலயம் வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு இடையில் அமைந்துள்ள அதி முக்கிய சரணாலயம் ஒன்றாகும்.விசேடமாக யானைகள் உட்பட பல விசேட விலங்கினங்களுக்கு வாழிடங்களை அளிக்கும் இச்சரணாலயமானது, அப்பிரதேசத்தின் வன ஜீவராசிகளுக்கு இணக்கமான சுற்றுச் சூழல் அமைப்புக்களைக் கொண்ட சரணாலயம் ஒன்றாகும்.

இச்சரணாலயத்துக்கு உரிய முக்கிய அச்சுறுத்தல், இதன் நிலத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்துவதாகும். அதனால் காடுகளை அக​ற்றுவதற்காக குடியிருப்பாளர்கள் நடவடிக்கை எடுப்பதனால் காட்டில் வாழும் உயிரினங்கள் தம் வாழ்விடத்தை இழக்க வேண்டிய அச்சுறுத்தலுக்கு உள்ளாவதோடு அதனூடாக யானை – மனித மோதலும் அதிகரிக்கின்றது. அவ்வாறே பசுக்கள் உட்பட பசு மந்தைகள்  சரணாலயத்துக்குள் அனுப்பப்படுவதன் காரணமாக யானைகளும் பிற விலங்கினங்களும் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்க வேண்டியுள்ளன. சரணாலயத்துக்குள் விலங்குகளை வேட்டையாடுதலானது, வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட செயலாக இருந்தாலும் குறைந்த மற்றும் கூடியளவு ​விலங்குகளை வேட்டையாடுவது எப்போதாவது இன்னும் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது. அதே போன்று சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டுதல், மூலிகைக்காக தாவரங்களைப் பெற்றுக் கொள்ளல் போன்ற காரணங்களால் சுற்றுச் சூழல் அமைப்புக்குச் சேதம் ஏற்படுகின்றது.  இச்சரணாலயத்துள் பல வகையான மூலிகைத் தாவரங்கள் காணப்படுகின்றன. அவற்றுள், வெள்ளை சந்தனம், கடுக்காய், புலு, இழுப்ப, ஒழிந்த, எலபடு, எலநெதுன், வசம்பு, சீந்தி, வேப்பிலை, கற்றாழை, ஆடாதோடா, கபுகினிஸ்ஸ, மஞ்சள்கொடி (வெனிவெல்), வெடகே மற்றும் வல் கந்துரு போன்ற மூலிகைத் தாவரங்கள் ஆகும். சட்ட விரோதமாக மணல் அகழ்தல், விறகுக்காக மரங்களை வெட்டுதல் போன்ற வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் சரணாலயத்தில் காணப்படும் இயற்கை வளங்களுக்கு சேதம் ஏற்படுவதுடன் அவை குறைவடைந்தும் செல்கின்றன. சரணாலயத்தை பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த முயற்சி எடுப்பது, இதன் நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிக்க முயற்சிப்பதும் இச்சரணாலயத்திற்கான மற்றுமொரு அச்சுறுத்தலாகும்.

மயில் ராஜ நீலம் (Tajuria cippus)

தேசிய பூங்காக்களில் இவ்வாறான சரணாலயங்களில் சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தில் விதிகள் இல்லை. சரணாலயம் என்பது, முழுமையாகவே வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் ஓர் இடமாகும். சரணாலயமொன்றுற்குள் வனவிலங்குகளின் வாழ்விடங்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் ஏதாவதொன்றை செய்தல், களைகளை அழித்தல், குட்டிகளையும் முட்டைகளையும் அழித்தல், மிருகங்களைக் கொல்லுதல் போன்றன தடை செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியர்        –           டீ .மல்சிங்ஹ, மலதிக சயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன

                                    பாதுகாப்பு அமைச்சு

உதவியாளர்கள்

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியகத்தர், வன பாதுகாப்புத் திணக்களம்

தமிழ் மொழிபெயர்ப்பு.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன

                                    பாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்பு (ஆவணங்கள்)அசக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்பு (கதை)டீ. மல்சிங்ஹ

இணய வடிவமப்புஎன்.கயத்ரி, அபிவிருத்தி  உத்தியகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன

            பாதுகாப்பு அமைச்சு

படங்கள்ரோஹித குணவர்தன,வன பாதுகாப்புத் திணக்களம்

சிங்கள தட்டச்சும் ஏனய உதவிகள்அருணிபலாபத்வல, வனஜீவராசிகள் மற்றும் வன

                                                பாதுகாப்பு அமைச்சு