简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 3 – கவுடுல்லா தேசிய பூங்கா

Content Image

இரண்டு அபாயங்கள் ஒன்றாக

2004 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் போயா தினமொன்றில் கவுடுள்ள வன பூங்காவிற்கு உரித்தானகிதுல் உதுவ எனும் பிரதேசத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. அப்போது நான் கவுடுள்ள  தேசிய பூங்காவில் பொலன்னறுவை வன விலங்கு அதிகாரியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு இரவு 12.45 மணியளவில் அலுத் ஓயாவிலிருந்து மெதிரிகிரிய கவுடுள்ள பூங்கா ஊடாக மரப் போக்குவரதொன்று இடம்பெறுவதாக ஓர் உளவுச் செய்தி கிடைத்தது. வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அல்லது வன பாதுகாப்புத் திணைக்களத்திற்கு அருகில் காணப்படும் இடங்களிலுள்ள காடுளை வெட்டி அதன் மரங்களைக் கிழித்தே இவ்வாறு கொண்டு செல்கின்றனர். நான் எமது ஆட்களுடன் அவ்விடத்துக்குச் சென்றேன்.

கிதுல் உதுவ புகையிரதப் பாதை அருகில் சுமார் நாம் எட்டு பேர் காவலுக்கு இருந்தோம். எனது நினைவுகளின்படி அவ்வித்தில் சுரங்க ரத்நாயக்க, புஷ்பகுமாரஎனும் வட்டார வன பாதுகாவலர்கள் இருவரும் இருந்தனர். நாம் கெப் வாகனத்தில் அவ்விடத்திற்குச் சென்றோம்.கெப் வாகனத்தை சாரதி திலகரத்ன ஓட்டிச் சென்றார்.

சாதாரணமாக மர வியாபாரிகள் மரங்களை வெட்டுவது போன்று மிருகங்களையும் வேட்டையாடுகின்றனர். පஅவர்களிடம் ஆயுதங்களும் காணப்படுகின்றன. ‘ஒரேயடியாகப் பாய வேண்டாம். கவனமாக இருங்கள் என’ எல்லோருக்கும் ஆலோசனை வழங்கி விட்டு நான் அவ்விடத்திலிருந்து விலகி அங்கிருந்து முந்நூறு நானூறு மீற்றர் தூரத்தில் இருந்தசதுரக் கிளை கூடுகளின் அருகிற்கு
செல்ல வந்தேன். சதுரக் கிளை கூடுகள் என்பது நிலத்தில் மனிதர்கள் மறைந்திருப்பதற்கு அமைத்துக் கொண்ட இடமொன்றாகும். தாவர வகைகளாலும் கிளைகளாலும் பெட்டி போன்று அமைத்து அதன் நடுவில் மறைந்திருப்பது நீர் அருந்த வரும் விலங்குகளை வேட்டையாடுவதற்காகும்.

சாதாரணமாக நீர்த்தேக்கமொன்றினைத் தொடர்புபடுத்தியே சதுரக் கிளைக் கூடுகள் அமைக்கப்படுகின்றன. இங்கே ஏரியொன்று இருந்தது. ஏரியை இணைத்து சதுரக் கிளைக் கூடுகள் பல அமைக்கப்பட்டிருந்தன.

நான் வீதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு சதுரக் கிளைக் கூட்டுக்கு அருகிற்கு நடந்து சென்றேன். எனக்குப்  பின்னால் ;சாரதியும், துறை அதிகாரியும் வந்தனர். சந்திரனின் வெளிச்சம் இருந்தாலும் அப்பக்கத்தில் மரங்கள் இருந்தமையால் இருளாகக் காணப்பட்டது. சதுரக் கிளைக் கூடுகள் காணப்பட்ட பக்கத்தில் பெரியமருத மரம் ஒன்றிருந்தது.

நான் மருத மரத்திற்குப் பக்கத்தில் சென்றேன். அங்கு யானையொன்று நின்றிருப்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. திடீரென யானைநான் இருந்த பக்கத்தை நோக்கித் திரும்பியது. ஆனால்அதன்போது என் பின்னாடி இருந்த சாரதியும், துறை அதிகாரியும் கூச்சலிட்டதால்  நானும் ஒரு புறத்திற்குப்பாய்ந்து விட்டேன். யானை பாய்ந்து ஓடியது.

அந்த சத்தத்திற்கு மர வியாபாரிகள் நாம் இருந்த திசைக்கு துப்பாக்கிச் சூடு வைத்தனர். அதனுடனே காவலில் ஈடுபட்டிருந்த எமது ஆட்களும் நாம் இருந்த பக்கத்திற்கே துப்பாக்கிச் சூடு வைத்தனர். காது அதிரும் வகையில் துப்பாக்கிச் சூடு  பரிமாறப்பட்டது.

அதிஷ்டவசமாக எமக்கு துப்பாக்கிச் சூடு தாக்கவில்லை. இறுதியாகப் பார்க்கும் போது மர வியாபாரிகள் சைக்கிளை விட்டு விட்டு பாய்ந்து ஓடியிருந்தனர். காட்டிலிருந்து வெட்டிய மரங்களைசைக்கிள்களில் கட்டியேகொண்டு வருகின்றனர். ஒரு சைக்கிளில்எட்டு ஒன்பது பலகை அல்லது பராலைகளைக் கட்டிக் கொண்டு வருகின்றனர்.

அவர்கள் விட்டுச் சென்ற மர பராலைகளுடன் கூடிய எட்டு சைக்கிள்கள் எமக்குக் கிடைத்தன. எம்மால் அவ்வியாபாரிகளைப் பிடிக்க முடியவில்லை.

அன்று யானை தாக்கியிருந்தால் நான் முடிந்திருப்பேன். அதேபோல் இரு புறமிருந்தும் வந்த துப்பாக்கிச் சரமாரியிலிருந்தும் தப்பிக்க முடிந்தது 

டீ. எம். வீரசிங்ஹ

 பொலன்னறுவை வன விலங்கு அத்தியட்சகராக முதலாம் தரம், பதவிநிலை உத்தயோகத்தராக 1998 ஆம் ஆண்டு வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைந்த டீ. எம். வீரசிங்ஹ அவர்கள் 2013 ஆம் ஆண்டு முதல் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) ஆகக் கடமையாற்றினார்.

அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பட்டத்தைப் பெற்றுள்ளதோடு, சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வன மற்றும் சூழல் விஞ்ஞானம் தொடர்பாக கலை முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். அதற்கு மேலதிகமாக களனி பல்கலைக்கழகத்தில் உயிர் பல்வகைமை பற்றிய டிப்ளோமாவையும், இந்தியாவில் வனஜீவராசிகள் நிர்வாகம் பற்றிய பாடநெறியையும், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் வனஜீவராசிகள் பற்றிய குறுகிய காலபாடநெறியையும் நிறைவு செய்துள்ளார்.

தற்போது அவர் இலங்கை மன்றக் கல்லூரியில் குற்றவியல் விஞ்ஞானம் பற்றிய உயர் டிப்ளோமாவைபயின்று கொண்டிருக்கின்றார்.

மனைவியையும், ஒரு மகளையும் மற்றும் மகன்மார்களையும் உள்ளடக்கிய வீரசிங்ஹ அவர்களின் அன்பான குடும்பம் அவருடன் பத்தரமுல்லையில் வசிக்கின்றது.

கவுடுள்ள தேசிய பூங்கா

மின்னேரிய மற்றும் கவுடுள்ள தேசிய பூங்காக்கள் ஆசிய யானைகளின் (Elephas maximus) இயல்பான நடத்தைக்கு உலகப் புகழ் பெற்றவை. கவுடுள்ள நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள புல்வெளிகள் யானைகளின் புகலிடமாகும். ஆண்டு முழுவதும் யானைக் கூட்டங்களை இங்கு காண முடிவதோடு ஓகஸ்ட் – செப்டெம்பர் மாதங்களில் வறண்ட காலங்களில் பொதுவாக ஏரிக் கரைகளில் சுமார் இருநூறு முந்நூறு யானைகளை பொதுவாகக் காண முடிகிறது.

                                                                                                   ஆசிய யானைகள் (Elephas maximus)

கவுடுள்ள தேசிய பூங்காவின் வருடாந்த மழைவீழ்ச்சி மில்லி மீற்றர் 1500 க்கும் 2000 க்கும் இடையில் ஆகும். கூடிய மழைவீழ்ச்சி நவம்பர் முதல் பெப்ரவரி வரை பருவ மழை கிடைக்கின்றது. ஏப்ரல் முதல் ஒக்டோபர் வரை வறண்ட காலநிலை நிலவுகின்றது. வெப்பநிலை 20 முதல் 34.5 பாகை சென்டிகரேட் வரை மாறுபடுகின்றது.

கவுடுள்ள தேசிய பூங்கா மின்னேரிய தேசிய பூங்காவையும் சோமாவதிய தேசிய பூங்காவையும் அண்மித்து அமைந்துள்ளது. இப்பூங்காவில் வறண்ட மற்றும் ஈரமான பசுமையான காடுகள், புல்வெளிகள், பற்றைக் காடுகள் மற்றும் மலைத்தொடர்கள் போன்ற சுற்றுச் சூழல் அமைப்புக்கள் காணப்படுகின்றன.

இத்தேசிய பூங்காவில், கவுடுள்ள நீர்த்தேக்கம், ஒலமடு நீர்த்தேக்கம், வெஹெரகல நீர்த்தேக்கம் மற்றும் புலியன்கெலே ஏரி என்பன அமைந்துள்ளன. அதற்கு மேலதிகமாக மின்னேரிய – கந்தளாய் யோத கால்வாய் மற்றும் ஹதரெஸ் கொடுவ ஓயா, அலுத் ஓயா என்பனவும் இதனூடாகப் பாய்கின்றன.

அவ்வாறே இச்சூழல் அமைப்புக்களுடன் தொடர்புடைய பல வகையான விலங்குகளையும் காண முடிகின்றது. இப்பூங்காவில் வெவ்வேறு வகையான புட்தரை ஈர நில சூழல் அமைப்புக்களில் யானைகள், மரைகள், புள்ளி மான் கூட்டங்கள், சருகுமான், காட்டுப் பன்றிகள் போன்ற விலங்குகளைக் காண முடிகின்றது. அவ்வாறே புலி, கரடி, சதுப்பு முதலைகள், நீர்ப் பறவைகள் மற்றும் பல வகையான விசேட மீனினங்கள் என்பனவுமாகும். மேலும் பூங்காக்கு அருகில் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் பறவைகள் அதிகமானவற்றையும் அடையாளம் காணலாம். இங்கு சிறு நீர்த்தேக்கங்களிலும் கால்வாய்களிலும் நீர்ப்பறவைகளைக் காணலாம். அவற்றுள் விசேடமாக நீர்க் காகங்கள், நீளவால் இலைக்கோழி,கொக்கு போன்றவற்றையும் காணலாம்.

கோடை காலங்களில் ஒன்று கூடும் யானைக் கூட்டங்கள் மற்றும் அவற்றின் நடத்தைகளை வைத்து ஒதுக்கப்பட்ட நிலமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கவுடுள்ள தேசிய பூங்காவானது, வெவ்வேறு காலங்களில் யானைகளுக்கு பயணம் செய்வதற்கான பாதை வசதியையும் வழங்குகின்றது. அந்த ரிடிகல அதி இயற்கை வன ஒதுக்கத்திலிருந்து சோமாவதிய தேசிய பூங்காவுக்குச் செல்வதற்கு யானைகளின் பயணப் பாதை இத்தேசிய பூங்காவினூடாகச் செல்கின்றமையாகும்.

விலங்குகளுக்கு, தாவரங்களுக்கு வாழ்விடங்களை வழங்கி உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின தேவைகளைப் பூர்த்தி செய்யும் இம்மதிப்பு மிக்க தேசிய பூங்கா பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளது. சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டுதல், மிருகங்களை வேட்டையாடுதல், காடுகளுக்கு தீ வைத்தல், சட்ட விரோதமாக நிலங்களைக் கைப்பற்றிக் கொள்ளல், கால்நடைகளை பூங்காவிற்கு விடுவித்தல், மணல் அகழ்தல் போன்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக இத்தேசிய பூங்காவில் வனவிலங்கு அதிகாரிகள் தொடர்ந்து கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

தொகுப்பாளர் – தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு 

பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்-ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்பு- ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்பு (ஆவணங்கள்)- அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும்
வன பாதுகாப்பு அமைச்சு

ஆங்கில வியாக்கியானம் (கதை)- தானுக மல்சிங்ஹ

இணைய வடிவமைப்பு- என்.ஐகயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

படங்கள்- ரோஹித குணவர்தன, மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்), வனஜீவராசிகள்பாதுகாப்புத்
திணைக்களம்