简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 13 – ரிடிகல அதி இயற்கை ஒதுக்கம்

Content Image

பள்ளத்தாக்கிற்கு வழுக்கினேன்

எனது பெயர் டப்ளியூ. எம்.கே. என். சந்திர்ரத்ன. தற்போது பொலன்னறுவை உதவிப் பணிப்பாளராகச் சேவையாற்றுகிறேன். நான் பேசும் நிகழ்வு 2006, ரிடிகல அதி இயற்கை ஒதுக்கத்தில் நிழந்த ஒன்றாகும்.

ரிடிகல அதி இயற்கை ஒதுக்கம் அமைந்துள்ளது அனுராதபுர உதவிப் பணிப்பாளர் வலயத்துக்குள் ஆகும். ரிடிகல அதி இயற்கை ஒதுக்கம் சிறப்பான சுற்றாடல் அமைப்பொன்றாகக் கருதப்படுகின்றது. பல சுற்றாடல் அமைப்புக்களின் கூட்டாகும். தாழ்வான பகுதியில் இருப்பது வறண்ட கலப்பு பசுமையான காடாகும்.  நடுப் பகுதி ஈரக் காடுகளின் அமைப்பு. உயர்வான பகுதி மூடுபனியுள்ள பகுதியாகும். மலைக் காடுகளின் அமைப்புக்குச் சமமானது. ஹோட்டன் சமவெளியில் கிடைக்கின்ற “மஹல்லாகே ரெவ்ல” என்னும் லைக்கன் இனங்களையும், குட்டையான தாவரங்களையும் இப்பிரதேசத்தில் காணக் கிடைக்கிறது.

2006 ஆம் ஆண்டில் நாம் அதிகாரிகள் குழுவொன்று மலையுச்சிக்கு ஏறினோம். வேவெல்தென்ன என்னும் பிரதேசத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆங்கில ஆட்சிக் காலத்தில் அனுராதபுர முன்னால் அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ இல்லம் வேவெல்தென்னவில் இருந்ததாக நாம் அறிந்திருந்தோம்.  கிளம்பும் போது நேரம் காலை பத்து முப்பது போல் ஆகியது.

நாம் சுற்றாடல் அமைப்பைக் கடந்து சென்று கொடிகல மலைக்கு ஏறினோம். கொடிகல மலை கருங்கல்லொன்றாகும். அங்கு உச்சியில் முக்கோண வடிவிலான புள்ளியொன்று காணப்படுகின்றது. நில அளவைத் திணைக்களம் அதனை அடையாளப்படுத்தி கொடியொன்றை நட்டு வைத்துள்ளது.

எமது குழுவிற்கு நான், சுனில் எனும் தள உதவியாளருமாகும். அடலுகம, வாசல, தென்னகோன் எனும் ஒழுங்குபடுத்துபவர்கள் மூவரும் இருந்தனர்.

கொஸ்கல மலை மேல் ஏறினால் அனுராதபுரத்தின் ருவன்வெலிசாய தாதுகோபத்தின் கோபுரம் தென்படுகிறது. எதிர்ப் பக்கத்தில் சீகிரியா. இன்னொரு பக்கத்தில் ஹுருளு வாவி. அடுத்த பக்கத்தில் கலா வாவி. மிக அழகான இடமொன்று. மாலை ஆகும் போது வெயில் குறைந்து சென்று பனி வருகின்றது. குளிர் காற்று வீசுகிறது.

நாம் இவ்வாறான பயணம் செல்லும் போது பகலுணவு, தண்ணீர் என்பன எடுத்துச் செல்வோம். இங்கு எல்லா இடங்களிலும் நீர் காணப்பட்டது. நீர் ஊற்று போல் இருந்தது. இந்த ரிடிகலவிலிருந்தே மல்வது ஓயா ஆரம்பிக்கின்றது.

நாம் கொஸ்கல மலையிலிருந்து இறங்கி வேவெல்தென்னவைத் தேடிச் சென்றோம். வேவெல்தென்ன கிடைக்க​வில்லை. இப்போது நேரம் மாலை ஐந்து முப்பது போல் ஆகியது.  இருள் சூழ்ந்து கொண்டு வந்தது. குளிராக இருந்தது. நாம் விரைவாகக் கீழிறங்க வேண்டி ஏற்பட்டது.

எல்லா இடங்களிலும் இலைச் சருகுகள் விழுந்து காணப்பட்டன.   கீழே நீர். ஓரிடத்தில் மிகப் பெரிய சாய்வொன்று காணப்பட்டது. இலைச் சருகுக் குவியலின் மேல் கால் வைத்தது மட்டும். கால் சறுக்கியது.  நான் சறுக்கியவாறு கீழே செல்லும் போது எனது உதவிக்கு தென்னகோன் வந்தார். அவரும் வழுக்கினார். முன்னே பெரிய கொடியொன்று இருந்தது. நான் அதில் தொங்கினேன்.  தென்னகோனும் அதில் தொங்கினார். எனினும் நிற்கவில்லை. தொடர்ந்து வழுக்கிக் கொண்டே சென்றோம். நாம் கொடியில் தொங்கியவாறே முன்னே இழுபட்டோம். இறுதியாக ஒருவாறு தரையில் விழாது காப்பாற முடியுமானது.

அந்நேரத்தில் கை விடுபட்டிருந்தால் குறைந்த பட்சம் கையொன்று காலொன்று ​உடைந்திருக்கும். அதிஷ்டவசமாகக் கை விடுபடவில்லை. கற்கள் முட்களில் மோதி உருண்டு கீழே வந்தோம். நாம் அன்று இரவில் மீண்டும் வந்தோம்.

பின்னர் ஒரு நாளில் எமது ஆட்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் செயற்றிட்டமொன்றின் சுற்றாடல் அமைப்பை வரைபடமாக்கும் நேரத்தில் வேவெல்தென்ன பங்களா இருந்த இடம் கிடைத்தது. அங்கு இருந்தது திருவானைக்கல்லின் அத்திவாரம் மட்டுமாகும். பங்களாவிலிருந்து கனேவெல்ல சந்திப் பக்கத்திற்கு இறங்க முடியும். பாதை அவ்விடத்திலே இருந்திருக்க வேண்டும்.

ரிடிகல அதி இயற்கை ஒதுக்கம்

பெரிய குளங்கள் தாதுகோபங்கள் பல அளவில் அமைக்கப்பட்ட இராச ரட்டை வனங்களினால் மூடப்பட்டுள்ள வன ஒதுக்கங்களுள் ரிடிகலவனத்திற்கு மிக முக்கிய இடமொன்று கிடைக்கின்றது. வடமேல் சமவெளியில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை போன்ற புராதன நகர்கள் இரண்டிற்குமிடையில் அமைந்துள்ள ​​​ரிடிகல மலை, பலுகஸ் வெவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும் கெகிராவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும் எல்லைகளாக உள்ளன. ரிடிகல இயற்கை ஒதுக்கம் இலங்கையின் அதி இயற்கை வனங்கள் மூன்றிலும் ஒன்றாக உள்ளதோடு அப்பிரதேசம் பிரதானமாக அதி ஒதுக்கமொன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது ஆய்வு நோக்கத்துக்காக, பாதுகாப்புக்காகவும் பேணுவதற்காகவும் ஆகும். அவ்வாறான பிரதேசங்களில் அடிப்படை நோக்கமாக இருப்பது விஞ்ஞான நடவடிக்கைகள் மற்றும் சூழல் கண்காணிப்புக்காக அத்தியாவசியமான விசாரணை பிரதேசமாக உயிர்ப் பல்வகைமைத்தன்மையைப் பாதுகாப்பதற்காகவேயாகும்.

                                                ரிடிகல அதி இயற்கை ஒதுக்கம்

1941 நவம்பர் 7 ஆம் திகதி 5.29 சதுர கிலோ மீற்றரான நில அளவொன்றை (1528 ஹெக்டயார்) அதி ஒதுக்கமொன்றாக  வன விலங்கு மற்றும் தாவர பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ரிடிகல நிலம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதி ஒதுக்கமொன்றாக சுற்றுலா வசதிகள் அல்லது எந்தவொரு மனித செயற்பாட்டுக்கும் அனுமதி கிடைக்காத வனஜீவராசிகளினதும் மற்றும் இயற்கை சூழல் அமைப்புக்களின் இருப்புக்காக ​ மாத்திரம் பூரணமாக வேறாக்கப்பட்ட தேசிய ஒதுக்கமொன்றாகும். வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்தின் விசேட அனுமதியின் அடிப்படையில் விஞ்ஞான ஆய்வுக்காக மாத்திரம் அதி இயற்கை ஒதுக்கமொன்றிற்குள் மேற்கொள்வதற்கு முடியுமாக உள்ளது.

இலங்கையில் வடமேல் வறண்ட வலயத்தில் அமைந்துள்ள இந்த சிறப்பான இடம், நாட்டில் மனித வரலாற்றுடன் நீண்ட காலமாகத் தொடர்புபட்டுள்ளதனால், அங்கு பல வரலாற்றுக் கதைகளும் உள்ளன. இப்போது சுமார் 2434 ஆண்டுகள் வரை தெளிவான கடந்த காலத்திற்கு வழிவகுக்கின்ற ரிடிகல இந்நாட்டு வரலாற்றில் முதலாவது இராசதானியான அனுராதபுரத்திற்கும் முற்பட்ட பண்டுகாபய மன்னனின் யுத்த மையமாகவும் இருந்தது. அவர் தமது மாமாகளுடன் இட்ட போருக்கு மையமாக வைத்துக் கொண்டது இந்நிலத்தையாகும். மிகப் பண்டயை காலத்தில் பண்டுகாபயன், சூரதிஸ்ஸ, லஜ்ஜாதிஸ்ஸ போன்ற மன்னர்கள் யுத்த நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்புக்காகவும் ரிடிகலையைப் பயன்படுத்தியதாகப் பிரபலமானது. நவீன யுகத்தில் ரிடிகல முக்கியத்துவம் மிக முக்கியத்துவமாக இருந்தது அங்குள்ள பிராமிய சீலா கல்வெட்டுக்களைக் காரணமாகக் கொண்டேயாகும். மிகிந்தலை, வெஸ்ஸகிரிய போன்ற இடங்களில் காண முடியுமான குகை கல்வெட்டுக்களுக்கு இரண்டாவதாக இல்லாத முக்கியத்துவமொன்று ரிடிகல கல்வெட்டுக்களுக்கும் கிடைக்கிறது. இந்நாட்டு கல்வெட்டு ஆய்வில் முதன்மையான செனரத் பரணவிதான போன்ற அறிஞர்கள் ரிடிகலவை நோக்கி கவனம் செலுத்தியதனால் இவ்விடத்தின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகியது. ரிடிகலவில் கிடைத்த சீலா கல்வெட்டுக்கள் 152 உம்,  கற்குகைகள் 74 உம், தொல்பொருள் கட்டடங்கள் 140 இனால் பெறுமதி வாய்ந்த இக்கலாச்சார பாரம்பரியங்களுள் பண்டைய ஆயுர்வேத வைத்தியசாலையொன்றின் இடிபாடுகளும், சக்மன் மலு, குளிர் அறைகள் போன்றவற்றின் எச்சங்களும் இன்றும் எஞ்சியுள்ளன.

                                                                                           ரிடிகல புராதன கலாச்சார இடிபாடுகள்

இந்த மலைக் காடுகள் மூன்று வகைகளைக் கொண்டது. மலைத் தொடரின் கீழ்ப் பகுதி  ​வறண்ட கலப்பு பசுமையான காட்டு வகையொன்றாகும். தொடரின் மத்திய பகுதி வெப்ப மண்டல மலைக் காடுகளின் வகைகள் மற்றும் உயர் மலைக் காட்டு வகைகளுக்கு உரிய உயர் நிலப் பிரதேசமாகும். 2000 மில்லியன் ஆண்டுகளாக காலநிலை மாற்றத்திந்கு உட்படுவதன் மூலம் ரிடிகல மலை அமைந்துள்ளது. சுற்றிலும் அமைந்துள்ள நிலம் அரிக்கப்பட்டு சமவெளியொன்றாக உருவாகினாலும் ரிடிகல அவ்வாறு இல்லாமல் இருப்பதற்கு அது அரிப்புச் செயன்முறைகளைத் தாங்கக் கூடிய கடினமான பாறைகளான க்வார்ட்ஸைட்,  மற்றும்  பளிங்குப் பாறைகளினால் உருவாக்கப்பட்டிருந்தமையினாலாகும்.

காலநிலை ரீதியாக இம்மலை வறண்ட வலயத்தின் தாழ்வான சமவெளியில் அமைந்துள்ளது. எவ்வாறாயினும் ரிடிகல அதற்கே உரிய காலநிலை மாற்றங்களைக் கொண்டது. சுற்றியுள்ள சமவெளிகளில் மிக வெப்பமான காலநிலையொன்று நிலவினாலும் ரிடிகல மலையில் அதி குளிர் காலநிலையொன்று நிலவுகிறது. ரிடிகலவிற்கு வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவக் காற்றினால் மழை​வீழ்ச்சி கிடைக்கின்றது. வருடாந்த மழைவீழ்ச்சி சுமார் 1482 மில்லி மீற்றர் ஆவதோடு, ஒக்டோபர் நவம்பர் காலங்களில் இப்பிரதேசத்துக்கு அதிக ஈரமான காலநிலையொன்றும் ஜூன்- செப்டெம்பர் காலத்தில் அதிக வறண்ட காலநிலையொன்றும் பொதுவாக நிலவுகின்றது. சாதாரண வெப்பநிலை 28 0 C ஆகும்.​

இலங்கையின் மொத்த சதுர அடியில் 0.0237% ஆன சதவீதத்திற்குள் பரந்துள்ள இந்நில அளவில் 10% ஆன தாவர வகைகள்  அறியக் கிடைத்​துள்ளதோடு அவற்றின் வகைகளின் படி சுமார் 418 ஆக உள்ளதுடன் இவற்றில் இலங்கைக்கு உரித்தான வகைகள் சுமார் 54 ஆகும். இச்சிறிய மலையிடம் உள்ளது உலகில் எந்த நாட்டிலும் நிலப்பகுதியிலும் காணப்படாத தாவர வகைகள் மற்றும் விலங்கு வகைகளின் தோற்றத்திற்கு முடியுமான சூழல் அம்சமாகும். இராமன்- இராவணன் யுத்தத்தில் காய​மடைந்த இராமனுக்கு சிகிச்சையளிப்பதற்காக அனுமனால் பாரத நாட்டிலிருந்து தூக்கி வரப்பட்ட ​மருந்துப் பாறையின் பகுதியொன்று ரிடிகலையின் மேல் உடைந்து வீழ்ந்திருக்கலாம் என நாட்டுக் கதைகளிலிருந்து வருகிறது. அவ்வாறே பாலை, வீரை, அன்னாசி, எலுமிச்சை, தோடை போன்ற பல்வேறான பழங்கள் போன்றே ரிடிகல முழுவதும் இரராஜ, சந்தராஜ, நிலவேம்பு போன்ற அரிய வகையான மருந்துக் கன்றுகளும் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

பறவை வகைகள் சுமார் 100 ஆனவை வசிக்கும் இக்காட்டில் இலங்கைக்கு உரித்தான இலங்கை காட்டுக்கோழி, சின்னக் காட்டுக்கோழி, சின்ன குக்குறுவான், இலங்கை சாம்பல் இருவாய்ச்சி, நீல முகச் செண்பகம், கறுப்பு மூடிய புல்புல், இலங்கை மைனா, மலபார் கறுப்பு வெள்ளை இருவாய்ச்சி, புள்ளிச் சிறகுகள் கொண்ட த்ரஷ் போன்ற பறவைகளையும் கண்டு கொள்ள முடியும்.

அவ்வாறே பாலூட்டி வகைகளாக ஆசிய யானை,  தேன்கரடி, புலி, காட்டுப் பன்றி, புள்ளி மான், கேளையாடு, மரை, முள்ளம்பன்றி, சாம்பல் முகக் குரங்கு, செங்குரங்கு, செந்நரி, தேவாங்கு, மீன்பிடிப் பூனை, துரும்பன் பூனை போன்று இன்னும் அதிகமான காட்டு விலங்குகள் இங்கு இருப்பிடத்தை அமைத்து வாழ்ந்து வருகின்றன.

மேலும் பல நிறங்களிலான வண்ணத்துப்பூச்சி வகைகள் 50 உம், மீனின வகைகள்20 உம், ஊர்வனவகைகள்16 உம் மற்றும் நத்தை வகைகள் சுமார் 16 உம் அறியக் கிடைத்தும் உள்ளன.

ரிடிகல என்பது இலங்கையின் வறண்ட வலயத்தில் அனுராதபுரத்திற்கு அண்மையிலுள்ள மலையொன்றாகும். அது அனுராதபுரத்திலிருந்து சுமார் 42 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதோடு மரதன்கடவலயைக் கடந்து அனுராதபுரம்- ஹபரணை அதிவேக நெடுஞ்சாலை கனேவல்பொலவிலிருந்து திரும்பி அண்மிக்க முடியும். தம்புள்ளவிலிருந்து  ரிடிகலவிற்கு 28கிலோ மீற்றர் மற்றும் அனுராதபுரத்திலிருந்து37 கிலோ மீற்றர் தூரமாகும். கனேவல்பொலவிற்கு அருகில் உள்ளே திரும்பும் போது தொல்பொருள் இடங்களின் நுழைவாயிலுக்கு உள்ள தூரம் சுமார் 9 ஆகும். ரிடிகல அதி ஒதுக்கத்திற்கு நுழைவதற்கு இலகுவான வழி விழுந்திருப்பது பந்தாபொகுண அருகனிலாகும்.

இலங்கையின் மத்திய மலைநாடு மற்றும் தென்  இந்தியாவின் மலைகளுக்கும் இடையில் அமைந்துள்ள உயரமான மலையாக மதிப்பு மிக்க ரிடிகல மலை அதிக சட்ட திட்டங்களின் கீழ் பாதுகாப்புக்கும் முகாமைத்துவத்துக்கும் உள்ளாகி வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் உள்ளது.

 

தகவல்கள்

வனஜீவராசிகள் சஞ்சிகை 2011

வாரண சஞ்சிகை

தியதம சஞ்சிகை2000

Wikipedia

ரிடிகல அதி இயற்கை ஒதுக்கம் தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific name

අලියා

ஆசிய யானை

Asian elephant

Elephas maximus

කොටියා

புலி

Leopard

Panthera pardus kotiya

වලහා

தேன் கரடி

Sloth bear

Ursus ursinus

වල් ඌරා

காட்டுப் பன்றி

Wild Boar

Sus scrofa

තිත් මුවා

புள்ளி மான்

Spotted deer

Axis axis ceylonensis

වැලි මුවා

கேளையாடு

Barking Deer

Muntiacus muntijak

ගෝනා

மரை

Sambar

Rusa unicolor

ඉත්තෑවා

முள்ளம்பன்றி

Porcupine

Hystrix indica

අළු වදුරා

சாம்பல் முகக் குரங்கு

Common langur

Semnopithecus entellus

රිලවා

செங்குரங்கு

Toque Macaque

Macaca sinica

හිවලා

நரி

Golden jackal

Canis aureus

උනහපුළුවා

தேவாங்கு

Gray Slender Loris

Loris lydekkerrianus

හඳුන් දිවියා

மீன்பிடிப் பூனை

Fishing Cat

Prionailurus viverrinus

කොළ දිවියා

துரும்பன் பூனை

Rusty- spotted cat

Prionailurus rubiginosus

වලි කුකුළා

இலங்கைக் காட்டுக் கோழி

Sri lanka junglefowl

Gallus lafayettii

හබන් කුකුළා

சின்னக் காட்டுக்கோழி

sri lanka Spurfowl

Galloperdix bicalcarata

මල් කොට්ටෝරුවා

சின்ன குக்குறுவான்

Crimson-Fronted Barbet

Psilopogon rubricapillus

අළු කෑදැත්තා

இலங்கை சாம்பல் இருவாய்ச்சி

Sri lanka Grey Hornbill

Ocyceros  gingalensis

 

වත නිල් මල්

කොහා

நீல முகச் செண்பகம்

Blue – faced malkoha

Phaenicophaeus viridirostris

ලංකා සැළලිහිණියා

இலங்கை மைனா

Sri Lanka  Myna

Gracula ptilogenys

 

පොරෝ කෑදැත්තා

மலபார் கறுப்பு வெள்ளை இருவாய்ச்சி

Malabar pied horn bill

Anthracoceros coronatus

තිප්පි තිරාසිකයා

புள்ளிச் சிறகுகள் கொண்ட த்ரஷ்

Sri Lanka Spot-Winged Thrush

Geokichla spiloptera

ரிடிகலஅதிஇயற்கைஒதுக்கம்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Botanical Name

පලු

பாலை

Palu

Manilkara hexandra

වීර

வீரை

Hedge Box wood

Drypetes sepiaria

ඉරුරාජ

இருராஜ

Iru raja

Zeuxine regia

සඳරාජ

சந்த ராஜ

Sanda raja

Fittonia verschaffeltii

බිම්කොහොඹ

நிலவேம்பு

Bimkohomba

Munronia pinnata

අන්නාසි

அன்னாசி

pineapple

Ananas comosus

දෙහි

எலுமிச்சை

Lime

Citrus species

දොඩම්

–       හීන් නාරං

–       ඇඹුල් දොඩම්

தோடை

– சிறு தோடை

-புளி தோடை

Orange

-Heennaran

– Ambuldodan

 

Citrus crenatifolia

Citrus guramtium

தொகுப்பாளர் –  தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்- ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்),வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்பு- ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்பு (ஆவணங்கள்)- அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்பு ​(கதை)- தம்மிகா மல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

இணைய வடிவமைப்பு-சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு

படங்கள்- ரோஹித குணவர்தன, வனஜீவராசிகள்பாதுகாப்புத் திணைக்களம்