简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 17 – டெல்ப் தேசிய பூங்கா

Content Image

டெல்ப் தீவில் தனிப்பட்ட குதிரைகள்

டெல்ப் தீவொன்றாகும். இங்கு  சுமார் 4000 ஆக அல்லது 5000 என்றளவில் மக்கள் இருக்கின்றனர். பிரதேச செயலாளர் பிரிவு டெல்ப் ஆகும்.

டெல்ப் தீவில்  குதிரைகள்  இருக்கின்றன. அவை ஒல்லாந்த யுகத்தில் பொருட்களை இழுப்பதற்கு கொண்டு வந்த குதிரைகளாகும். தற்போது அவை எமது நாட்டிற்கு இசைவாக்கம​டைந்​தன. மத்திய அளவிலான குதிரைகள் சுமார் 400 என 500 என இருக்கின்றன.

இக்குதிரைகள் இயற்கையாகவே பராமரிக்கப்படுகின்றன. டெல்ப் பகுதிக்கு ஜூனிலிருந்து செப்டெம்பர் வரை வரட்சி வருகிறது. இவ்வரட்சியுடன் வயோதிபமான விலங்குகள் மற்றும் குட்டிகளும் இறக்கின்றன. பலம்மிக்கவை உயிர் வாழ்கின்றன. பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தாங்கிகளுக்கு வனஜீவராசிகள் திணைக்களம் பவுசர் மூலம் நீரை வழங்குகின்றது. எனினும் இக்காலத்தினுள் விலங்குகள் இறக்கின்றன.

கல்பிடியவிலிருந்து யாழ்ப்பாணம் வரை அழமற்ற  கடல் காணப்படுகின்றது.   இக்கடலில் கடற்பன்றிகள் காணப்படுகின்றன. அவை கடற் புட்களையே உணவாக எடுக்கின்றன. கடற் புட்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கீழ் நோக்கி வளர்ந்திருக்கின்றன. ஓர் இனம் உள்நாட்டுக்கு உரித்தானது. மீன்பிடி நடவடிக்கைகளினால் ஆழமற்ற கடலில் உள்ள கடற்பன்றிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்த டெல்ப் தீவில் ‘பயோபெக்’ எனும் விசேடமான தாவரமொன்று காணப்படுகின்றது. இது தென்னாபிரிக்காவிலிருந்து எடுத்து வரப்பட்ட மரமொன்றாகும். தலை மன்னாரிலும் இது போன்ற மரமொன்று காணப்படுகின்றது. இலங்கைக்கு இருப்பது இந்த இரண்டு மரங்களாகும்.

சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வருகின்றனர். அவர்களுக்கு போவதற்கும் வருவதற்கும் படகுகள் காணப்படுகின்றன. வனஜீவராசிகள் திணைக்களத்துக்குரிய படகுகளில் பணிக்குழுவினர் சென்று வருகின்றனர். இதற்கு மேலதிகமாக காலை 8.00 மணிக்கு போன்று வீதி அபிவிருத்தி அதிகார சபையிலிருந்து 100 க்கு போல் செல்ல முடியுமான படகொன்று தீவுக்கு வருகின்றது. அப்படகில் இலவசமாக சென்று வர முடியும். கடற் ​படையினரால் படகின் செயற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

டெல்ப் தீவுக்கும் புலம்பெயர் பறவைகள் வருகின்றன.  ​டெல்ப் தீவு பற்றிய விசேடமான சம்பவமொன்று அல்லாவிட்டாலும் யுத்தத்தின் பின்னர் இச்சூழல் சாதாரண நிலைமைக்குத் திரும்பும் போது அங்கு பகுதியாளரொருவராக இருப்பதனையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.​

திரு. ஜீ. யூ. சாரங்க அவர்கள்

திரு. ஜீ. யூ. சாரங்க அவர்கள் தள பாதுகாப்பு அதிகாரியொருவராக 1983 இல் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இணைந்தார். பல்வேறு தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் கடமையாற்றுவதற்கு சாரங்க அவர்கள் அதிஷ்டம் பெற்றார். யால மற்றும் வில்பத்து சரணாலயங்களிலிருந்து அவருக்கு ஆரம்பப் பயிற்சி கிடைத்தது. சீகிரிய சரணாலயத்துக்குப் பொறுப்பாக சேவையாற்றிய அவர் பின்னர் மின்னேரிய தேசிய பூங்காவிலும் பின்னர் 7 வருடங்கள் வஸ்கமுவ தேசிய பூங்காவிலும் சேவையாற்றினார். அவ்வாறே 2004-2005 ஆண்டுகளிலும்  2009-2012  ஆண்டுகளில் அவர் ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவில் பூங்காப் பொறுப்பாளராக கடமையாற்றினார். பின்னர் உதவிப் பணிப்பாளர் ஒருவராகவும் பதவியுயர்வு பெற்ற  சாரங்க அவர்கள் கிளிநொச்சி பிரதேச பொறுப்பாளராகவும் பின்னர் அம்பாறை பிரதேச பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்.

தற்போது அவர் வவுனியா வலய பொறுப்பாளராக சேவையாற்றுகிறார்.

1995 ஆம் ஆண்டில் ​வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படுகின்ற 9 மாத டிப்ளோமா பாடநெறியை நிறைவேற்றிய சாரங்க அவர்கள் அதன் பகுதியாக 3 மாதங்கள் இந்தியாவில் டெஹெராடுன் நகரத்தில் வனஜீவராசிகள் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். அவர் கொரியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் குறுகிய பயிற்சிப் பாடநெறியை நிறைவேற்றியுள்ளார்.

சாரங்க அவர்களின் வீடு கண்டி, கடுகஸ்தொடவில் அமைந்துள்ளது.

டெல்ப் தேசிய பூங்கா

டெல்ப் தீவு இலங்கையின் குடியேற்றத் தீவுகளில் தூரத்தில் இலங்கையில் வயம்ப திசையிலும் இந்து சமுத்திரத்தின் வட திசைக்கு ஆகுமாறு அமைந்துள்ளது. யாழ்ப்பாண தீபகற்பத்தின் இயற்கைத் தன்மையைப் போன்றே புராதன கட்டடங்களின் இடிபாடுகளினால் வடிவமைந்த டெல்ப் தீவு அனைவரினதும் மனதைக் கவர்ந்திழுத்த நீண்ட வரலாலொன்றுக்கு உரிமை கூறும் தீவொன்றாகும்.

டெல்ப் தேசிய பூங்காவின் வரைபடமொன்று

இத்தீவு இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்துக்கு உரியதாகும்.  நெடுந்தீவில் (டெல்ப்) அமைந்துள்ள 1846.2 ஹெக்டயாரினைக் கொண்ட நிலப்பகுதியானது விலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்  விதிகளின்படி 2015 ஜூன் 22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையொன்றின் மூலம் தேசிய பூங்காவொன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது.

நீள்வட்ட வடிவத்தினைக் கொண்டமைந்த தீவின் பரப்பளவு 50சதுர கிலோ மீற்றர் ஆவதோடு உயர்ந்தபட்ச நீளம் 8 கிலோ மீற்றர்மற்றும்அகலம் 6 கிலோ மீற்றர் ஆகும். யாழ்ப்பாணத்துக்கு 35 கிலோ மீற்றர் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள நிலப்பரப்பாகும்.  இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தின் மேற்கு மூலையில் இந்திய நிலப்பகுதிக்கு 80 கிலோ மீற்றர் தூரத்திலும் தலைமன்னார் மற்றும் ராமேஷ்வரம் என்பவற்றுக்கு 42 கிலோ மீற்றர் தூரத்திலும் போக் சமுத்திரத்தின் நடுவில் அமைந்துள்ள டெல்ப் தீவு,  இலங்கைக்கு உரித்தான இரண்டாவது பாரிய தீவாகும்.

டெல்ப் தீவு முழுவதும் இருப்பது போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்த காலங்களுக்கு உரியதும் விஜித இராஜதானிகளின் தகவல்கள் பற்றிய இடிபாடுகள் மற்றும் அதற்கு அப்பாலுள்ள காலங்கள் வரை தீவின் பௌத்த இடிபாடுகளாகும். தீவின் வரலாறு இன்றைக்கு சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் சோழர் வம்ச காலம் வரை செல்வதோடு, தீவின் மேற்கு கடற்கரையில் பண்டைய தூபிகளைக் காணலாம். ஒல்லாந்தர் காலத்தில் இத்தீவு உறுதியாக இருந்ததோடு போர்த்துக்கேயரினால் பயன்படுத்தப்பட்டதன் பின்னர்ஒல்லாந்தரினால் பயன்டுத்தப்பட்ட “மீகானம்” எனப்படும் ஒரேயொரு காலணித்துவக் கோட்டையும் இங்கு அமைந்துள்ளது. மேலும் டெல்ப் தீவில் வடக்கு கடற்கரையில் ஒல்லாந்தரினால் நிர்மாணிக்கப்பட்ட கலங்கரை விளக்கொன்றை குத்தகைக்கு எடுத்திருந்த குவின்ஸ் கோபுரம் எனப்படும் ராணி கோபுரமாகும்.

மீகானம்கோட்டை
பண்டைய தூபிகளின் இடிபாடுகள்
பண்டைய தூபிகளின் இடிபாடுகள்
குவின்ஸ் கோபுரம்

இப்பூங்காவில் விசேடமாக இருப்பது இலங்கையில் ஏனைய பூங்காக்களில் காண முடியாதடெல்ப்க்கு மாத்திரம் உரித்தான காட்டுக் குதிரைகளைக் காண முடியும். பூங்காவில் கிடைக்கும் காட்டுக் குதிரைகள் 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரினால்அரேபியாவினால் கொண்டு வரப்பட்டதோடு பின்னர் ஒல்லாந்தரினால் இனப்பெருக்கம் செய்யப்பட்டு டெல்ப்பினூடாக விழுந்துள்ள கடற்பாதை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு விற்கப்பட்டுள்ளன. ஒல்லாந்தர் இந்நாட்டினை விட்டுச் சென்ற பின்னர் இக்குதிரைகள் படிப்படியாக காடுகளுக்குச் சென்று காட்டுக் குதிரைகளாக ஆகிவிட்டன.            டெல்ப்பிலுள்ள இக்குதிரைகள் பெருமளவு அழைக்கப்படுவது “போ​னீன்” என்றவாறாகும்.

ஆழமற்ற கடல் சார்ந்த வலயமொன்றான இங்கு மழை காலம் ஒக்டோபரிலிருந்து பெப்ரவரி வரை என்றாலும் மழை காலம் முழுவதிலும் நீல வானம் உள்ள பல நாட்களும் உள்ளன. வருடாந்த மழைவீழ்ச்சி சுமார் 750​மில்லி மீற்றர் ஆவதோடு பொதுவாக வடவரைக் கோளத்தில் கோடை மாதங்களில் உச்ச காலத்தில்  மழைவீழ்ச்சி முழுமையாக குறைவடைகின்றது.  வருடாந்த மழைவீழ்ச்சி மிகக் குறைந்தளவில் காணப்படுவதனால் இங்கு அரை வரண்ட மண்டலத்தின் பண்புகளைக் காட்டுகின்றது.  தீவின் நடுவில்  வெட்டுக்குளம் மற்றும் பெரிய குளம் ஆக இரு குளங்களும் அமைந்துள்ளன.

வரண்ட காலநிலை தன்மைகளுக்கும் பிரதேசத்தில் காணப்படும் மண்ணுக்கு (Porous corallin soil) வடிவமைந்த தாவரப் பூங்காவினுள் கண்டு கொள்ள முடியும்.  ஆரம்ப காலத்தில் குடியிருந்தவர்கள் அவற்றை முழுமையாக சுத்திகரித்துள்ளனர் என்பது தென்படுகின்றதோடு, சீரற்ற காலநிலைமைகளிலும் தாவர உண்ணிகளின் புட்களை மேய்வதனால் இங்கு உள்ளூர் வளர்ச்சி தேக்கமடைகிறது போல் தென்படுகின்றது. இனங்காணப்பட்ட வகைகளில் பூக்கும் தாவரங்கள் 209 உம், புதர்கள் 29 உம்,  பூக்காத தாவரங்கள் 67 மற்றும் மருத்துவச் செடி இனங்கள் சுமார் 70 உம் ஆகும். ஆசியப்பனை பெருமளவாக தீவு முழுவதும் பரந்துள்ளதனைக் காண முடிகிறது. பூங்காவில் அமைந்துள்ள பெருக்க மரத் தாவரம் வெப்ப மண்டல ஆபிரிக்காவில் எதியோப்பிய உள்நாட்டைக் கொண்ட தாவர வகையாகும். இத்தாவரம் அரேபிய வியாபாரிகளினால் இந்நடுகை மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகின்றது. இத்தாவரத்தின் தண்டில் பாரிய ஓட்டையொன்று உள்ளதோடு அங்கு மனிதர்கள் சிலருக்கு இலகுவாக நின்று கொண்டிருக்கக்கூடிய அளவுக்கு பெருதாகும். இங்கு குற்றியின் உயரம் சுமார் 12 மீற்றர் ஆவதோடு  வட்டத்தின் அளவு சுமார் 15 மீற்றர் ஆகும்.

                                                                                                                       பெருக்க மரத் தாவரம்

ஆசியப்பனை

பதிவு செய்யப்பட்டுள்ள பூவினங்களுள் அழிவடையும் அச்சுறுத்தலை நெருங்கியுள்ள Fimbristylisdipsacea இனமும் அழிவடையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள lpomoeacoptica, Occulushirsutusமற்றும் Peplidiummaritimum இனங்கள் 05 உம் போன்றே அச்சுறுத்தலுக்கு உள்ளாவதற்கு அருகிலுள்ள இனங்கள் 11 உம் கிடைக்கின்றன. கடற் தாவரங்களுள் Sargassumமற்றும் Caulerpa கடற்பாசி இனங்கள் அதிகமானவற்றையும் காண முடிகின்றது.

பூங்காவின் விலங்கு வகைகளுள் பாலூட்டி வகைகள் 11 உம், ஈரூடக வாழி வகையொன்றும் , ஊர்வன வகைகள் 08 உம்,  பறவை வகைகள் 101 உம்,  வண்ணத்துப்பூச்சி வகைகள் 15 உம்,  தும்பி வகைகள் 10 உம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டெல்ப் தேசிய பூங்காவினுள் பாலூட்டிகளுள் டெல்ப் போனி அல்லது காட்டுக் குதிரை முதன்மையானதாகும். அவைகள் 1000 க்கு அண்மித்த அளவொன்று பூங்காவினுள் வசிக்கின்றன. அவ்வாறே சிறிய பாலூட்டிகளுள், குட்டைவால் இந்திய சாம்பல் கீரிப்பிள்ளை, சாம்பல் கீரிப்பிள்ளை, காட்டு குழி முயல், பெரிய வௌவால் அல்லது தவசிப்பட்சி என்பன அரிதான வகைகளாகும்.

                                                                                                                              காட்டுக் குதிரை

காட்டு குழி முயல்
பெரிய வௌவால்

ஊர்வன வகைகளாக சுருட்டை விரியன், பொதுவான தோட்டப்பல்லி என்பவற்றைக் கண்டுகொள்ள முடியும்.

சுருட்டை விரியன்
பொதுவான தோட்டப்பல்லி

பூங்கா அதிக பறவைகளின் பல்வகைத்தன்மையொன்றைக் காட்டுவதோடு அதிகளவான புலம்பெயர் பறவைகளுக்கு சிறந்த ஓய்விடமாகும். சாதாரண சிற்றெழால்,  சிறிய வளையம் கொண்ட பிளவர், கென்டிஷ் ப்ளோவர், நெற்குருவி, கௌதாரி, யுரேஷியா காலர் புறா, பெரிய முகடு டெர்டன், கறுப்பு கிரீடம் அணிந்த நைட் ஹெரான்கள் கண்டு கொள்ள முடியுமான பறவை வகைகளில் சிலவாகும்.

சாதாரண சிற்றெழால்சிறிய
வளையம் கொண்ட பிளவர்யு
ரேஷியா காலர் புறா

வண்ணத்துப்பூச்சி வகைகளாக சிவப்புடல் அழகி, தருகஸ் நாரா, சிறிய சால்மன் அரபு மற்றும் தும்பி இனங்களாக Pruinosedbloodtail இனைப் பெரும்பாலும் கண்டு கொள்ள முடிகின்றது.

 

கொழும்பிலிருந்து வரும் ஒருவருக்கு குருனாகல்- தம்புள்ளை- மெதவச்சி, வவுனியா- கிளிநொச்சி- அலிமங்கட- கய்ட்ஸ் வீதி ஊடாக யாழ்ப்பாணத்தை நெருங்குவதற்கு முடியுமாவதோடு கொழும்பிலிருந்து மொத்தத் தூர அளவாகும். 389  கிலோமீற்றர் ஆகும். அங்கிருந்து கய்ட்ஸ் வீதி ஊடாக 31  கிலோமீற்றர் சென்று குரிகட்டுவான் கப்பல் நிறுத்துமிடத்தை ​நெருங்க முடியும். கப்பல் நிறுத்துமிடத்திலிருந்து டெல்ப் தேசிய பூங்காவை நெருங்குவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பயன்படுத்தப்பட்டுள்ள கடற்படையினால் நிர்வகிக்கப்படுகின்ற ‘வடதாரகீ’ மற்றும் ‘குமுதினீ’ எனும் பாரிய படகுகள் இரண்டின் மூலம் ஒரு முறைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.  காலை சுமார்  8.30 மணிக்கு ஆரம்பமாகும் இப்படகுகள் இரண்டும் உட்பட படகுப் பயண முறைகள் சுமார் ஐந்து செயற்படுத்தப்படுகின்றன. சுமார் ஒரு மணி கடற் பயணத்தில் 14 கிலோமீற்றரினால் பயணித்த பின்னர் டெல்ப் தீவினை நெருங்க முடியும். தீவினுள் போக்குவரத்துக்காக பஸ் சேவை ஒன்று   செயற்படுகின்றது.  வட மாகாண சபையினால் நடத்திச்செல்லப்படுகின்ற தங்குமிட வசதிகள் மற்றும் சுற்றுலா நிலையங்களும் இத்தீவினைப் பார்வையிடுவதற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக தற்போது செயற்படுகிறது.

 

வெள்ளப்பெருக்குகளுக்கு அமிழாத, தாவரச் சூழலை விட  பொருத்தமான தீவின்​ அபிவிருத்தியடைந்த பிரதேசங்கள் முழு அளவில் சுமார் ¼ ​ஆவதோடு  எஞ்சிய பிரதேசங்கள் விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.  இங்கு முழு சனத்தொகை 5000 க்கு அண்மித்ததாகும்.

 

கடற்படையினால் செயற்படுத்தப்படுகின்ற படகொன்று

டெல்ப் தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific name

කැලෑ අශ්වයා

காட்டுக் குதிரை

Wild horse

Equus caballus

වල් හාවා

காட்டு குழி முயல்

Black naped hare

Lepus nigricollis

බොර මුගටියා

குட்டைவால்  இந்திய சாம்பல் கீரிப்பிள்ளை

Brown mongoose

Herpestes brachyurus

අලු මුගටියා

சாம்பல் கீரிப்பிள்ளை

Grey mongoose

Herpestes edwardsii

මා වවුලා

பெரிய வௌவால்

Flying fox

Pteropus giganteus

ගරා කටුස්සා 

பொதுவான தோட்டப்பல்லி

Common garden lizard

Calotes versicolor

වැලි පොළඟා

சுருட்டை விரியன்

Saw- scaled viper

Echiscarinatus

පොදු උකුසු ගොයා

சாதாரண சிற்றெழால்

Common kestrel

Falco tinnunculus

පුංචි මාල ඔලෙවියා

சிறிய வளையம் கொண்ட பிளவர்

Little ringed plover

Charadrius dubius

කෙන්ටි ඔලෙවියා

கென்டிஷ் ப்ளோவர்

Kentish plover

Charadrius alexandrinus

වී කුරුල්ලා

நெற்குருவி

Silverbill

Lonchura malabarica

අළු උස්සවටුවා

கௌதாரி

Grey francolin

Francolinus pondicerianus

මාල කොබෙයියා

யுரேஷியா காலர் புறா

Eurasian collared dove

Streptopelia decaocto

මහා කොණ්ඩ මුහුදු ළිහිණියා

பெரிய முகடு டெர்டன்

Great crested tern

Sterna bergii

රෑ කණ කොකා

கறுப்பு கிரீடம் அணிந்த நைட் ஹெரான்

Black-crowned night -heron

Nycticorax nycticorax

අරූණු සෙව්වන්දියා 

சிவப்புடல் அழகி

Crimoson rose

Pachliopta hector

ඉරි කෝනංගියා

தருகஸ் நாரா

Striped pierrot

Tarucus nara

මලිතරිසියා

சிறிய சால்மன் அரபு

Small samon arab

Colotis amata

කූරන් විශේෂයන්

தும்பி இனங்கள்

Pruinosed bloodtail

Lathrecista asiatica

டெல்ப் தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Botanical Name

තල් ශාකය

ஆசியப்பனை

Palmyra Palm

Borassus flabellifer

බයෝබැබ්

பெருக்க மரம்

Baobab

Adansonia digitata

මල් විශේෂයන්

பூ வகைகள்

Flower Sps

Fimbristylis dipsacea

මල් විශේෂයන්

பூ வகைகள்

Flower Sps

lpomoea coptica

වැල්  විශේෂයන්

கொடி  வகைகள்

Creeper Sps

Cocculus hirsutus

මල් විශේෂයන්

பூ வகைகள்

Flower Sps

Peplidium maritimum

මුහුදු ශාක  විශේෂ

கடற் தாவர   வகைகள்

Ocean plant Sps

Sargassum

මුහුදු ශාක  විශේෂ

கடற் தாவர   வகைகள்

Ocean plant Sps

Caulerpa

குப்பாளர்  –  தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்),வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்பாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்பாதுகாப்பு அமைச்சு

இணய வடிவமப்புஎன்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள்பாதுகாப்பு அமைச்சுசீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்பாதுகாப்பு அமைச்சு

படங்கள்ரோஹித குணவர்தன, வனஜீவராசிகள்பாதுகாப்புத் திணைக்களம்