简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 19 – மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வனஜீவராசிகள் ஒதுக்கப் பிரதேசங்கள்

Content Image

சகோதரத்துவம்

நான் 2014 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றினேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடத்துக்கிடம் பல வன ஒதுக்கங்கள் அமைந்திருந்தாலும் அவை வன பாதுகாப்புத் திணைக்களத்துக்கு உரித்தானவை.   வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு உரிய வன ஒதுக்கங்கள் இல்லை. எனினும் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் காட்டு யானைகளின் பிரச்சினை காணப்படுகின்றது. அதனால் பீட்டு தள அலுவலகமும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் நடத்திச் செல்லப்பட்டது. அது கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்திருந்தது. இவ்வலுவலகத்தில் எனக்குக் கீழ் இன்னும் பல அதிகாரிகள் சேவையாற்றினர்.

ஒரு நாள் யானைக் குட்டியொன்று காயமடைந்திருப்பதாக எமக்கு செய்தியொன்று வந்தது. சுமார் ஐந்து வருடங்களான சிறு ஆண் யானைக் குட்டியொன்று விழுந்திருப்பதனை நாம் கண்டோம். குட்டிக்கு சேலைன் வழங்கியதும் எழுந்து காட்டுப் பகுதிக்குச் சென்றது. பின்னர் நாம் தொடர்ச்சியாக யானைக் குட்டியைத் தேடியும் கிடைக்கவில்லை​.  இக்காலத்திலும் எல். டீ. டீ. ஈ. யினர் புதைத்த மிதிவெடிகள் இருக்கலாம் என்பதனால் நாம் அதகளவாக காடுகளில் நடந்து திரிவதில்லை.

இச்சம்பவம் நடந்து சுமார் ஒரு கிழமைக்குப் பின்னர் காலை பத்து மணியளவில் யானையொன்று ஊருக்குள் பாய்ந்து வன்முறையான முறையில் நடந்து கொள்வதாக செய்தியொன்று கிடைத்தது. எனது உதவிக்கு வரையறுக்கப்பட்ட பணிக்குழுவினரே இருந்தனர். அதனால் இராணுவப் படையின் இருவரை அழைத்துக் கொண்டு ஊருக்குச் சென்றோம். மிகக் கொடூரமான முறையில் யானை நடந்து கொண்டுள்ளது. பொதுவாக காட்டு யானைகள் குடியிருப்புக்களுக்குள் புகுவது இரவு நேரத்திலாகும். எனினும் இச்சம்பவம் இடம்பெறுவது காலை​ நேரத்திலாகும். யானை வீடொன்றுக்குச் சென்று முன்னே இருந்த நாயொன்றை மிதித்துக் கொன்றிருந்தது. அதற்கருகில் பாலர் பாடசாலையொன்றும் இருந்தது. பிள்ளைகள், மக்கள் கூச்சலிடுகின்றனர். நாம் யானையைத் தேடி அதிகாரிகள் பிரிந்து ஒவ்வொரு இடத்துக்கும் சென்றோம். இதற்கிடையில் நாம் யானையைக் கண்டோம். யானை எமக்குப் பின்னால் துரத்திக் கொண்டே வந்தது. எமது வாகனம் நிறுத்தப்பட்டுருந்தது.  சாரதியால் வாகனத்தில் ஏற முடிந்தது. மற்றவர்கள் வாகனத்துக்கு ஏறும் வரை நான் ஏறவில்லை. எனினும்  வாகனத்துக்கு ஏறுவதற்கு நேரமில்லை என எனக்குத் தெரிந்தது. நான் ஓடிச் சென்று மரமொன்றிற்கு சாய்ந்து கொண்டேன். யானை ஓடியவாறு முன்னே சென்றது. நான் தப்பித்தேன். சிறிது நேரத்தில் நாம் யானைவெடியைச் அடித்து யானையை காட்டிற்கு விரட்டி விட்டோம்.

பின்னர் நாம் இச்சம்பவம் எவ்வாறு நடந்தது எனத் தேடிப் பார்த்தோம். முன்னே கூறிய யானைக்குட்டி இறந்திருப்பதாக எமக்கு அறியக் கிடைத்தது. மேலும் தேடிப் பார்த்த போது எமக்கு சடலம் கிடைத்தது. குட்டி தாடைவெடியை சாப்பிட்டிருந்துள்ளது. இக்குட்டிக்கு அருகில் ஆண் யானையொன்று பல நாட்களாக கத்தியவாறு அழுத வண்ணமிருந்துள்ளது. ஊர் மக்கள் தந்த தகவல்களின் படி அது இக்கிராமத்துக்கு வந்த அதே யானைதான். குட்டி இறந்த கவலைக்கு யானை கிராமத்துக்கு வந்திருக்கும் எனத் தோன்றியது.

இது உணர்வுபூர்வமான சம்பவமொன்றாக எனது மனதில் பதிந்தது. பொதுவாக யானைக் குட்டிகளுடன் ஒன்றாக இருப்பது தாய் அல்லது கூட்டம் என்றாலும் இங்கு குட்டியுடன் இருந்திருப்பது ஆண் யானையொன்றாகும். சில வேளைகளில் கூட்டத்திலிருந்து விடுபட்ட யானைக் குட்டியொன்றை வேறொரு யானை பார்த்துக் கொண்டதாகவும் இருக்கலாம்.

இச்சம்பவத்தில் பல உயிர்களுக்கு சேதம் ஏற்படுவதற்கும் இடமிருந்தது.

திரு. ஜானக சாந்த குமார அவர்கள்

ஜானக சாந்த குமார அவர்கள்09.11.1998 ஆம் திகதி3 ஆம் தரத்தின் தள வன பாதுகாப்பு உத்தியோகத்தொருவராக வனஜீவராசிகள் திணைக்களத்தில் சேவைக்கு இணைந்தார். முதலாவதாக பூந்தல தேசிய பூங்காவில் கடமையாற்றிய அவர், கல்வல தேசிய பூங்கா, தொடபோவ தளம், லீகல தளம் மற்றும் முல்லேகம தளங்களிலும், யால தேசிய பூங்காவில் பலடுபான தலைமையகத்தில் மற்றும் யால 3, 4, 5 ஆம் வலயங்களிலும் உடவளவை எத் அத்துரு செவனவிலும் மட்டக்களப்பு யானைகளைக் கவனித்துப் பார்க்கும் பிரிவிலும் தொடன்கும்புர கடலாமைகள் பாதுகாப்பு நிலையத்திலும் கடமையாற்றினார்.

தற்போது அவர் முதலாவது தரத்தின் ​வன தள பாதுகாப்பு அதிகாரி, பூங்காப் பொறுப்பாளராக பூந்தல தேசிய பூங்காவில் கடமையாற்றுகிறார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற டிப்ளோமா பாடநெறியை நிறைவேற்றியுள்ள அவர்கள் அப்பாடநெறியின் ஒரு பகுதியை இந்தியாவிலும் சுமார் ஒரு மாத கால பயிற்சியொன்றைப் பெற்றுள்ளார். மேலும் சீனாவிலும் குறுகிய பயிற்சியொன்றைப் பெற்றுள்ளார்.

ஜானக சாந்த குமார அவர்களின் மனைவி, துஷாரி புத்திகா அபேரத்ன அவர்கள், மாத்தறை தீயகக கிழக்கு கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். அவர்களின் மகன் உயர் தரத்தில் கல்வி கற்பதோடு மகள் எட்டாம் தரத்தில் கல்வி கற்கிறார்.

ஜானக சாந்த குமார அவர்களின்  விலாசம் ரத்னமாலி, நா விமன தெற்கு, மாத்தறை ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வனஜீவராசிகள் ஒதுக்கப் பிரதேசங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வனஜீவராசிகள் ஒதுக்கப் பிரதேசமாக காயன்கர்னி சமுத்திர சரணாலயம், திரிகோணமடு இயற்கை ஒதுக்கத்தின் பகுதியொன்றும் சேருவில அலே சரணாலயத்தின் சிறிய பகுதியொன்றும் உள்ளடங்குகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வனஜீவராசிகள் ஒதுக்கப் பிரதேசங்களின் வரைபடம்

காயன்கர்னி சமுத்திர சரணாலயம்

காயன்கர்னி சமுத்திர சரணாலயத்தின் வரைபடம்

இலங்கையில் கிழக்கு வலயத்தின் கடற்கரையில் அமைந்துள்ள பிரதான சமுத்திர சூழல் இடங்களில் ஒன்றான மட்டக்களப்பில் அமைந்துள்ள காயன்கர்னி பவளப்பாறை 2019 ஏப்ரல் 11 ஆம் திகதி வனவிலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் சமுத்திர சரணாலயமொன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சமுத்திர சூழல் அமைப்பின் பாதுகாப்புக்காகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் கோரளைப் பற்று – வட பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அமைந்துள்ள953 ஹெக்டயாரான நில அளவொன்றினாலும் அந்நிலப் பிரதேசத்துக்கு இணைந்த சமுத்திர வலயங்களைக் கொண்ட நிலம் “காயன்கர்னி சமுத்திர சரணாலயம்” ஆக இனங்காணப்பட்டுள்ளது. இது பல்வேறான பவளப்பாறைகள் மற்றும் ஏனையஉயிர்த் தாவரங்கள் மற்றும் விலங்கு சமூகங்களுக்கான அற்புதமான இல்லமொன்றாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பிரதேசத்துக்கு அப்பால் அமைந்துள்ளகாயன்கர்னிக்குரிய, நிலப்பரப்புப் பகுதி போன்று பல மடங்குகளினால் பெரிய சமுத்திர நிலத்தில் இது வரை கண்டுபிடிக்கப்பட்ட  அதிகளவான மீனினங்கள்உட்பட உயர் பல்வகைத் தன்மையைக் கொண்டதாகும். மட்டக்களப்பு வட இப்பவளப்பாறை கடற்கரையிலிருந்து சுமார் 800 மீற்றர் பரந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. வண்ண மீன்களினால் அலங்காரமான நீருக்குக்கீழ் பூங்காவான இது சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சியை ஈட்டிக் கொள்வதற்கு உட்பட்டுள்ளது.

காயன்கர்னி சமுத்திர சரணாலயம்
காயன்கர்னி சமுத்திர சரணாலயம்

பவளப் பாறைகளில் அடை​யாளம் காணப்பட்ட வண்ணத்துப்பூச்சி மீனினங்கள் 18 இனைத் தெளிவான நீரில் கண்டு கொள்ள முடிகின்றது. வண்ணத்துப்பூச்சி மீனினங்கள் உதாரணமாக, Chaetodon வகைகள்; Red-tailed butterflyfish (Chaetodoncollare), Speckled butterflyfish (Chaetodoncitrinellus), Blackwedgedbutterflyfish (Chaetodonfalcula), Yellowheadbutterflyfish (Chaetodonxanthocephalus), Lined butterflyfish (Chaetodonlineolatus), Scrawled butterflyfish (Chaetodonmeyeri), Black-backed butterflyfish (Chaetodonmelannotus), Latticed butterflyfish (Chaetodonrafflesi),  Melon butterflyfish (Chaetodontrifasciatus)மற்றும்Triangle butterflyfish (Chaetodontriangulum) என்பனவாகும். இவை மிகவும் தெளிவாகத் தெளிகின்றதும் வர்ணங்களிலான வண்ணத்துப்பூச்சி மீன்களாகும். அவைகள் வாழ்வது ஆரோக்கியமான பவளப்பாறைகளின் பின்னணியில் மாத்திரமாகும். இவ்வாழிடங்களில் இவ்வகைகள் அதிகளவு காணப்படுதல்,  வாழிடத்தில் உயிர்ப்பல்வகைத் தன்மையைக் காட்டுகின்றது. அவற்றின் பல்வேறு வர்ணங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை இயற்கையாகவே ஈர்க்கிறது. பாசிகளில், Caulerpataxifolia, Ulva, Sargassamமற்றும்Padinaஇனங்கள் உள்ளன. மெல்லிய சேற்றுடனான அடிப்பகுதி பவளப்பாறைகளிடையில் அமைந்துள்ள ஹலோபிலா Halophile speciesமற்றும் என்ஹலஸ் Enhalusacoroidesஎனும் கடற் புல்லினங்களும் உள்ளன. அவை கடலுக்கு அடியில் ஒரேயொரு பூக்கும் தாவரமாவதோடு சமுத்திரத்தில் வாழ்கின்ற ஒரேயொரு தாவரமாகும். சுழியோடியொருவர் பவளப்பாறை இனங்களில் பல்வேறு தன்மையைக் காண்பதோடு, Devil’s hand corals (Lobophytum)மற்றும் Staghornபவளப்பாறை AcroporacervicornisAcroporaformosa, Rose coral (Montiporaaequituberuulata)போன்றபவளப்பாறை இனங்கள் அவற்றுள் உள்ளன.  மேலும் பல்வேறு வகைகளில் பவளப்பாறை இனங்களினட தொடரொன்றாக, Cauliflower coral or Lace corol  (Pocilloporadamicornis), Rasp coral (Pocilloporaverrucosa), Pocilloporaeydouxi, Stony coral (Poritesrus), Star coral (Favitesabdita)ஆகும். Feather duster worms (Sabella species), Lobsters (Panulirus species), Common spider conch (Lambislambis), The giant spider conch (Lambis truncate),Coral snails(Drupa species), Onus species மற்றும் Sea urchin (Echinethrixcalamaris) இப்பவளப்பாறைகளிடயில் காணப்படுவதோடு முதுகெலும்பற்றவை (Invertebrates)சிலவாகும்.

Melon butterflyfish(Chaetodon trifasciatus)

காயன்கர்னி சமுத்திர சரணாலயத்தப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பான பங்குதாரர்கள்  பாரிய அளவு ஒன்றிணைந்த முழுநேர முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு இப்பாதுகாப்புப் பயிற்சியின் பங்குதாரர்களாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA), வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலாளரின் பங்கேற்பும் உள்ளது.

திரிகோணமடுவ இயற்கை ஒதுக்கம்

திரிகோணமடுவ இயற்கை ஒதுக்கத்தின் வரைபடம்

பிரபலமல்லாத வனஜீவராசிகள் ஒதுக்கமொன்றான திரிகோணமடுவ, மடு மரங்கள் பெரும்பாலும் பரந்துள்ள பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்கள் ஊடாகச் செல்கின்றது. உலர் கலந்த என்றும் பசுமையான வனப்போர்வையொன்றினை உடைய  இந்நிலம் 1986 ஒக்டோபர் 24 ஆம் திகதி இலக்கம் 424/24 இன் கீழ் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்த நிலமும் சமதள நில அமைப்பினைக் கொண்டமையினால் புல் நிலங்களும் பரந்திருப்பதோடு சுமார் 25019 ஹெக்டயார் ஆன உயர் வனஅடர்த்தியினால் மூடப்பட்டுள்ளது.  முதிரை, பாலை, வீரை, காட்டு நொச்சி, கருங்காலி, பதுரங்கலி, அத்தி போன்ற தாவரப் போர்வையினாலும் கமாச்சிப் புல், தர்ப்பைப் புல் புல்லினங்களையும் இங்கு கண்டு கொள்ள முடிகின்றது. காட்டிற்கு கம்பீரத்தைச் சேர்க்கின்ற யானைக் கூட்டங்கள் தமது வருடாந்த பருவகால இயக்கத்துக்காக திரிகோணமடுவ இயற்கை ஒதுக்கத்தைப் பயன்படுத்துகின்றன. மகாவலி கங்கையின் கிளையாறுகள் இரண்டான வெருகல் ஆறு மற்றும் கந்தக்காடு ஆறு ஒதுக்கத்தினூடாகப் பாய்ந்தோடுவதோடு சுமார்5-10 க்கும் இடையிலான அளவுவாவிகள் போன்றே இரு வில்லுகளையும் கொண்டது. வரண்ட வலயத்துக்குரிய விலங்குகளின் வாழிடமொன்றான இது யானை, புள்ளி மான், மரை, சிறுத்தை போன்ற பாலூட்டி விலங்குகளினால் அழகாகின்றது.

சேருவில அலே சரணாலயம்

சேருவில அலே சரணாலயத்தின் வரைபடம்

சேருவில அலே சரணாலயமொன்றாக 1970.10.09 ஆம் திகதி இலக்கம் 14925 இன் கீழ் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. இச்சரணாலயம் திருகோணமலை நிர்வாக மாவட்டத்தில் சேருவில பிரதேச் செயலாளர் பிரிவுக்குரிய கொட்டியார் பத்துவ எனும் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 15,540 ஹெக்டயார் நில அளவொன்று முழுவதும் பரந்துள்ளது. சரணாலயத்தில் தாவரங்கள் போன்றவை வரண்ட வலயஎன்றும் பசுமையான காடுகளினால் அமையப் பெற்றுள்ளதோடு தாவரங்களின் பல்வேறுபட்ட தன்மை​யினால் இங்கு வாழ்கின்ற விலங்குகளின் உணவு, நிழல் மற்றும் பாதுகாப்பு குறையாதவாறு கிடைக்​கிறது. உல்லக்கலீ (Ullackalie) ஆக​ அடையாளம் காட்டப்படுகின்ற பாரிய ஆழமற்ற அதாவது சுமார் 2 மீற்றர் ஆழமுள்ள களப்பொன்று இச்சரணாலயத்துக்குரிய நிலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

மட்டக்களப்புமாவட்டத்தில்அமைந்துள்ளவனஜீவராசிகள்ஒதுக்கப்பிரதேசங்கள்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Scientific Names

කොටියා

புலி

Leopard

Panthera pardus kotiya

අලියා

யானை

Asian elephant

Elephas maximus

තිත්මුවා           

புள்ளி மான்

Spotted deer

Axis axis ceylonensis

ගෝනා

மரை

Sambar

Rusa unicolor

සමනල මත්ස්‍යයන් Chaetodon විශේෂ                       

வண்ணத்துப்பூச்சி மீனினங்கள்

Chaetodon வகைகள்

Butterfly fish species

Chaetodon species

 

  

Red-tailed butterflyfish

Chaetodon collare

  

Speckled butterflyfish

Chaetodon citrinellus

  

Blackwedged butterflyfish

Chaetodon falcula

  

Yellowhead butterflyfish

Chaetodon xanthocephalus

  

Lined butterflyfish

Chaetodon lineolatus

  

Scrawled butterflyfish

Chaetodon meyeri

  

Black-backed butterflyfish

Chaetodon melannotus

  

Latticed butterflyfish

Chaetodon rafflesi

  

Melon butterflyfish

Chaetodon trifasciatus

  

Triangle butterflyfish

Chaetodon triangulum

පණු විශේෂ

புழு இனங்கள்

Feather duster worms

Sabella species

පොකිරිස්සන්

பாறை இறால்

Lobsters

Panulirus species

බෙල්ලන් විශේෂ

சங்கு இனங்கள்

Common spider conch

Lambis lambis

බෙල්ලන් විශේෂ

சங்கு இனங்கள்

The giant spider conch

Lambis truncate

ගොලු බෙල්ලන්

கடல் நத்தைகள்

Coral snails (Drupa species)

 

පණු විශේෂ

புழு இனங்கள்

Onus species

 

මුහුදු ඉකිරියන්

இரட்டை சுழல் முல்லை

Sea urchin

Echinethrix calamaris

කොරල් විශේෂ

பவளப்பாறை இனங்கள்

Devil’s hand corals

Lobophytum

  

Staghorn

 

   

Acropora cervicornis

   

Acropora formosa

  

Rose coral 

Montipora aequituberuulata

  

Cauliflower coral or Lace coral

Pocillopora damicornis

  

Rasp coral

Pocillopora verrucosa

   

Pocillopora eydouxi

  

Stony coral

Porites rus

  

Star coral

Favites abdita

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வனஜீவராசிகள் ஒதுக்கப் பிரதேசங்கள்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific Name

බුරුත

முதிரை

Satin wood

 Chloroxylon swietenia

කළුවර

கருங்காலி

Ebony

Diospyros ebenum

මිල්ල

காட்டு நொச்சி

Milla

Vitex altissimia

පලු

பாலை

Palu

Manilkara hexandra

වීර

வீரை

Hedge Box wood

Drypetes sepiaria

කළුමැදිරිය

பதுரங்கலி

Kalumadiriya

Diospyros quaesita

මයිල அத்திMilaBauhinia racemosa

මාන

கமாச்சிப் புல்

Mana

Cymbopogon confertiflorus

ඉලුක්

தர்ப்பைப் புல்

Illuk

Imperata cylindrica

ඇල්ගීවිශේෂ         

 

 

Caulerpa taxifolia

  

 

Ulva

  

 

Sargassam

  

 

Padina

මුහුදු තෘණ විශේෂ -හලෝෆිලා 

 

 

Halophile species

එන්හලස් 

 

 

Enhalus acoroides

குப்பாளர்  – தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு பகுதி, விவசாய மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன  வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்),வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

இணய வடிவமப்புஎன்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ) சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள் இணையம் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டன.

உசாத்துணை

news.lk

newsfirst.lk

dailynews.lk

lankapradeepa.com

Sunday Observer (16.12.2018)

Kayankerni Marine Sanctuary;  Ecological grandeur,  Ravi  Ladduwahetti, Sunday Observer (04.09.2022)

Preliminary  report on the Status of  Kayankerni Coral Reef, Sri Lanka 2019,  NishanPerera,  Consultant,  SACEP

தினமிண (2022.06.04)