2004 ஆண்டில் பத்தாம் மாதம் 1 ஆம் திகதி நான் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இணைகிறேன். எனக்கு சேவையாற்றக் கிடைப்பது அனுராதபுர வயம்ப மற்றும் வட பிரதேசங்களிலாகும். இது பாரிய பிரதேசமொன்றாகும். இலங்கையிலிருந்து பாதியொன்றே உள்ளது. அதே போன்று மிகவும் கடினமானது. அதன் போது இப்பக்கத்தில் அதிகளவான பகுதிகள் எல். டீ. டீ. ஈ. யினர் பிடித்துக் கொண்டிருந்தனர்.விலங்கு வைத்தியர்களும் சில பேர்களே இருந்தனர்.
இப்பக்கத்தில் எல். டீ. டீ. ஈ. யினரினால் பாரிய உயிருக்கான அச்சுறுத்தலொன்று இருந்தது. அடிக்கடி வெடி வைத்தனர். மிதிவெடிகளும் எல்லா இடத்திலும் போன்று புதைக்கப்பட்டிருந்தன. எமக்கு ஒரு நாளைக்கு 200-300 கி. மீ. விலங்குகளைத் தேடிய பயணம் செய்ய வேண்டியிருந்தது. இலங்கை இராணுவப் படையினரின் அனுமதியைப் பெற்றே நாம் எல்ல இடங்களுக்கும் செல்ல வேண்டும். இராணுவத்தினர் பல மணி நேரம் பரிசோதிக்கின்றனர். அனுமதியைப் பெறும் செயன்முறை சற்று நீளமானது. சில நாட்களில் நாம் இராணுவ முகாம்களில் தங்குமிடங்களை எடுப்போம். பெரும்பாலான சிகிச்சைகளுக்கு இராணுவத்தினரின் உதவியுடனே செல்வோம். மிதிவெடிகளின் காரணமாக இராணுவத்தினரும் அதிகளவு நடமாடுவதற்கு விரும்பவில்லை. இந்நிலைமையை நாம் வீடுகளுக்கு கூறவில்லை.
2008 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் வெடிதலதீவு பிரதேசத்தில் மக்களைத் தாக்கும் யானையொன்று இருந்தது. இவ்யானை மக்களைக் கொல்ல ஆரம்பித்தது. இவ்யானையைப் பிடிப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்தது. கவனிக்கப்பட வேண்டிய பாரிய பிரதேசமொன்றில் யானை சுற்றித் திரிகின்றது. சில பிரதேசங்கள் மிதிவெடிகள் காணப்படும் பகுதிகளாகும். சில பிரதேசங்கள் மிதிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளாகும். சில பிரதேசங்கள் எல். டீ. டீ. ஈ. யினரின் கீழ் இருந்தன.
எமக்கு இவ்வாறான செயற்பாடுகளுக்கு சுமார் இருபது பேரினரின் குழுவொன்று இருந்தது. நானும் விலங்கு வைத்தியர் தர்மகீர்த்தி அவர்களும் இருந்தோம். அன்று நாம் யானையை மயக்கிப் பிடித்து லொறியொன்றில் ஏற்றி வேறொரு பகுதிக்கு எடுத்துச் சென்று விடிவிப்பதற்கு எதிர்பார்த்தோம்.
அன்று காலை சுமார் 7.00 மணிக்கு எமது குழு புறப்பட்டது. எம்முடன் இராணுவப் படையின் சுமார் 15 ம் 20ம் காணப்பட்டனர். பல வாகனங்களையும் லொறியொன்றையும் எடுத்துச் சென்றோம். வெடிதலதீவு காட்டிற்குள் நாம் யானையைக் கண்டோம். மிதிவெடி இல்லாத பகுதியொன்றிலே யானை இருந்தது. நாம் மயக்க மருந்தைச் செலுத்தியதும் யானை சுமார் 500 மீற்றர் மிதிவெடி இருக்கும் பகுதிக்கு ஓடியது. நாம் பின்னால் சென்று கஷ்டப்பட்டு யானையைக் கண்டுபிடித்தோம். யானை விழுந்திருப்பதனைக் கண்டோம் நாம் மயக்க மருந்தை அகற்றாவிட்டால் யானை இறந்து விடும். அவ்விடத்துக்குச் செல்வதைத் தவிர வேறி வழி இருக்கவில்லை. நாம் இராணுவத்தினரின் அறிவுறுத்தலின்படி யானை வைத்த பாதச் சுவட்டின் வழியிலே கால் வைத்து வைத்து அவ்விடத்துக்குச் சென்றோம். மயக்க மருந்தை அகற்றியதன் பின்னர் கயிறொன்றில் மாட்டி மிதிவெடி இல்லாத பகுதியொன்றுக்கு பெக்கோ பொறியொன்றின் உதவியுடன் யானையை சிறிது சிறிதாக இழுத்து எடுத்தோம். பின்னர் சிரமப்பட்டு வாகனமொன்றுக்கு ஏற்றிக் கொண்டு பாதுகாப்பாகப் புறப்பட்டோம்.
இப்பிரதேசத்திலேயே இன்னொரு சம்பவமும் இடம்பெற்றது. அப்போது சமாதான காலமாகும். யானையொன்று கிணற்றுக்குள் விழுந்துள்ளது என வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டது. எல். டீ. டீ. ஈ. யினரினரே அறவித்துள்ளனர். யானை விழுந்திருப்பது எல். டீ. டீ. ஈ. யினரினரின் நிர்வாகப் பிரதேசத்திலாகும். வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகம் எமக்கும், எல். டீ. டீ. ஈ. யினரினரிடையே இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. நாம் 5-6 ஆன குழுவொன்று இராணுவத்தினரடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். வவுனியாவின் தள பாதுகாப்பாளர் ஹேரத் அவர்களும் எம்முடன் இருந்தார். ஓர் இடத்திலிருந்து அப்பால் இராணுவம் இருக்கவில்லை. எல். டீ. டீ. ஈ. யினரினரின் அதிகாரமே இருந்தது. வீதியில் நாய்கள் கூட இருக்கவில்லை. ஆயுதம் ஏந்தியவர்கள் எல்லா இடங்களிலும் எம்மைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பெண் படையினரும் ஆங்காங்கே இருந்தனர். சிறு பெண்களே அதிகளவாக இருந்தனர். நாம் மிகப் பயத்துடன் சென்றோம்.
அவர்களுக்கு சிங்களம் முடியாது. எமக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலம் கொஞ்சம் தெரிந்தவர்களுடன் நாம் ஆங்கிலத்தில் கதைத்தோம். அவர்கள் எமது வாகனத்தைப் பரிசோதித்தனர். வாகனத்தில் மயக்க மருந்து துப்பாக்கிகளுக்கு மேலதிகமாக ரீஜீடர் துப்பாக்கியொன்றும் கால் துடைப்பானுக்குக் கீழ் இருந்தது. அதை அவர்கள் காணவில்லை. எல். டீ. டீ. ஈ. படையினர் இரு மோட்டார் சைக்கிள் வீதம் முன்னாலும் பின்னாலும் எம்முடன் புறப்பட்டனர். ஒருவருக்கு இரு ஆயுதங்கள் வீதம் இருந்தன.
இப்பயணத்தில் நாம் எல். டீ. டீ. ஈ. யினரின் முகாம்களைக் கண்டோம். சுற்றினை மறைத்து இரும்புத் தகரம் போட்டிருந்தனர். உழவு இயந்திரமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் எமக்கு பேராதெனிய பல்கலைக்கழகத்தில் என்னுடன் படித்த பொறியியலாளர் ஒருவர் வீதி புனர்நிர்மாணம் செய்து கொண்டிருக்கும் போது சந்தித்தார். அவர் எமக்கு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தந்தார். உரிய இடத்துக்குச் செல்லும் போது பாரியளவு கிராம மக்கள் ஒன்று திரண்டிருந்தனர். பாரிய பாதாளக் கிணறொன்றுக்குள் யானை விழுந்துள்ளது. மேலிருந்து பார்க்கும் போது யானை சிறியதாக வெள்ளையாகத் தெரிந்தது. சுமார் 10 நாட்கள் கிணற்றுக்குள் விழுந்திருந்துள்ளது.
அது கருங் கற்கலால் கட்டப்பட்ட கிணறொன்று. கிணற்றை உடைப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. அருகில் இருந்த கிணறொன்றினால் நீர் அடிப்போம் என்று எனக்குக் கூறினர். பின்னர் நீர் நிறைக்கும் இயந்திரமொன்றைத் தேடிக் கொண்டு அருகிலிருந்த கிணறொன்றிலிருந்து இக்கிணற்றுக்கு நிரப்பினோம். நீர் நிரம்பும் போது யானை மேலே வந்தது. அதன் பின்னர் யானை தவழ்ந்து கரைக்கு வந்தது. வந்தவுடன் பலவீனமாகி உயிரின்றி கீழே விழுந்தது.
நாம் யானைக்கு சேலைன் போத்தல்கள் 4 உம் 5 உம் வழங்கினோம். ஒரேயடியாக யானை எழுந்தது. நாம் அனைவரும் சிதறி ஓடினோம்.எல். டீ. டீ. ஈ. யினரும் ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு ஓடினர். நாம் மரமொன்றின் பின்னால் ஒளிந்தேன். அதோ எல். டீ. டீ. ஈ. ஒருவரும் அங்கே இருந்தார். அந்நபர் மேலே துப்பாக்கிச்சூடு வைக்க ஆரம்பித்தார். நான் வேண்டாம் எனக் கூறிய பின்னர் நிறுத்தி விட்டார். இங்கு நாம் எமது ரிஜீட்டர் துப்பாக்கியை வெளியே எடுத்தோம். எல். டீ. டீ. ஈ. யினர் அதனை முன்னரே கண்டிருக்கவில்லை என்பதனால்பதற்றமடைந்தனர். எனினும் எவ்வாறாயினும் இவ்வாறான செயற்பாடுகளின் போது நாம்ரிஜீட்டர் துப்பாக்கியை எடுத்துச் செல்வோம் எனக் கூறினோம். அவர்கள் அதனை பரீட்சித்துப் பார்த்தனர்.
பின்னர் எல். டீ. டீ. ஈ. யினர் கத்தரிக்காய் மற்றும் பன்றி இறைச்சியுடன் சோறு தந்தனர். ருசியாக இருக்கவில்லை. எம்மை அரசியல் தலைவரிடமும் அழைத்துச் சென்றனர். அவரின் பெயர் தற்போது எனக்கு நினைவில் இல்லை. அவர் எமக்கு விலங்கு நலன்கள் பற்றி விரிவுரயாற்றினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாம் படையனருக்கு அருகில் வந்தோம். எமது பயணத்தைப் பற்றி படையிருக்கு சந்தோசம் காணப்படவில்லை. அன்று நாம் மீண்டும் வரும் போது சமார் பன்னிரண்டு மணி ஆகிற்று. எல். டீ. டீ. ஈ. யின் புலனாய்வுப் பிரிவின் இருவர் என்னைப் பற்றிய தகவல்களைத் தேடியுள்ளனர் என பின்னர் அறிந்து கொண்டேன்.
போட்டிப் பரீட்சையொன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்டு 01.10.2004 ஆம் திகதியன்று வனஜீவராசிகள் திணைக்களத்தில் விலங்கு வைத்தியரொருவராக சேவைக்கு இணைந்த சந்தன ஜயசிங்ஹ அவர்கள் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் விலங்கு வைத்திய பட்டத்தைப் பெற்றுள்ளார்.
சூழல் விஞ்ஞானம் பற்றிய முதுமாணிப் பட்டதாரியான அவர் ‘ Wildlife & Rehabilitation’ இனைப் பற்றிய டிப்ளோமாவொன்றை அமெரிக்காவில் பெற்றுக் கொண்டுள்ளார்.
அனுராதபுர வயம்ப மற்றும் வட பிரதேசங்களில் கஷ்டமான பகுதியொன்றில் கடமையில் உள்ள விலங்கு வைத்தியர் சந்தன ஜயசிங்ஹ அவர்கள் பெற்றுக் கொண்டுள்ள அனுபவங்கள் பலவாகும்.
அவர் இரு மகன்மார்களினதும் ஒரு மகளினதும் தகப்பனாவார். அவரின் மனைவி களனி, அனுராதபுர மத்திய மகா வித்தியாலயத்தில் நடன ஆசிரியராகக் கடமயாற்றுவதோடு மகன்மார்கள் இருவரும் சாந்த ஜோசப் வித்தியாலயத்திலும் மகள் ஸ்வர்ணபாலி மகளிர் பாடசாலையிலும் கல்வி கற்கின்றனர்.
அவரின் முகவரி 186/1, சுபசாதக மாவத்தை, விஜேபுர, அனுராதபுரம் ஆகும்.
1937 வன விலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 1968 ஜூன் 28 ஆம் திகதி சரணாலயமொன்றாகப் பெயரிடப்பட்ட மடு வீதி பிரதேசம் இலங்கையின் வட மாகாணத்தில் மன்னார் நகரத்துக்கு சுமார் 25 கிலோமீற்றர் கிழக்காக அமைந்துள்ளது. இச்சரணாலயம் 103 சதுர மைல் அகலத்தினைக் கொண்டு வட மாகாணத்தல் மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் மாந்தாய் கிழக்கு, மாந்தாய் தெற்கு, சென்கலாவெட்டி மற்றும் வவுனியா தெற்கு (தமிழ்) போன்ற பிரதேச செயலாளர் பிரிவுக்கு உரியதாக அமைந்துள்ளது. இலங்கையில் சிவில் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் அரசாங்கத்தின் ஆட்சியொன்று இன்றி சட்ட ரீதியற்ற முறையில் மணல் அகழ்தல், மண் அகற்றுதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் விரிவாக்கப்பட்டதனால் வட மாகாணத்தில் பல சரணாலயங்கள் தேசிய பூங்காக்களாக்குவதற்குத் திட்டமிடப்பட்டன. அதன்படி அரசினால் 2014 ஒக்டோபர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சியிலும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சியின் உதவியுடன் பிரகடனப்படுத்துவதற்கு இருந்த வட மாகாணத்தில் ஒன்றிணைந்த மூலோபாய சூழல் மதிப்பீடு, அபிவிருத்தியடைந்த பிரதேசங்கள் அல்லாத மடுவீதி சரணாலயம் மற்றும் அதனை அண்டிய அரசுக்குச் சொந்தமான காடுகள், தேசிய பூங்காக்களாகப் பெயரிடப்படுவதற்கு முன்மொழியப்பட்டது. அதன்படி அங்கு உயிர்ப் பல்வகைத்தன்மையை இனங்கண்ட அரசு மடுவீதி, ஆதமின் பாலம், சுண்டிக்குளம் மற்றும் டெல்ப் வன தேசிய பூங்காவாகப் பெயரிடப்பட்டது. இதன்மூலம் மடுவீதி சரணாலயம் 163,067.39 ஆன ஹெக்டயார் நில அளவினைக் கொண்ட தேசிய பூங்காவொன்றாக 2015 ஜூன் 22 ஆம் திகதி இலக்கம் 1920/3 இன் கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
இலங்கையில் பரிசுத்த கத்தோலிக்க தேவாலயமொன்றான 400 வருடங்களையும் விட பழமையான உரோமன் கத்தோலிக்க மரியா தேவாலயமொன்றான மடு எமது திருமகளின் ஆலயமும் மடு தேசிய பூங்காவுக்கு அண்மையில் கண்டு கொள்ள முடியும்.
பூங்காவுக்கு நிழல் தரும் பிரதான தாவர வகையான வீரை, முதிரை, வேம்பு, ஆலமரம், பதுரங்கலி போன்றவற்றை இனங்காண முடிவதோடு மடுவீதி பல்வேறு பறவைகளின் வாழிடமுமாகும்.
இப்பூங்காவுக்குள் பல்வேறான விலங்கினங்கள் வாழ்வது அவைகளுக்கு அங்குள்ள சூழலுக்கான இணக்கத்தினாலாகும். இவ்வாறு கிடைக்கின்ற விலங்கினங்களில், பறவை இனங்களாக இலங்கை சாம்பல் இருவாய்ச்சி, நீல முகச் செண்பகம், பழுப்பு நிற மூடிய புளுணி, சின்ன குக்குறுவான்,இலங்கைக் காட்டுக் கோழி, இலங்கை வுட்ஷ்ரைக், மலபார் கறுப்பு வெள்ளை இருவாய்ச்சி, செம்பருந்துஎன்பனவாகும்.
மடுவீதி பூங்காவில் கவனிக்கப்படத்தக்க அளவில் காட்டு யானைகளும் நடமாடுவதோடு மடுப் பிரதேசத்தினூடாக யானைகளின் பயணப்பாதை காணப்படுகின்றது. இவ்வாறு பூங்காவுக்குள் கிடைக்கின்ற பாரியளவான பாலூட்டிகளுள் ஆசிய யானைகள், கரடிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் என்பவை பிரதானமானவை என்பதோடு, பழுப்பு மலை அணில், செந்நரிகள், சாம்பல் முகக் குரங்கு, இந்திய சாம்பல் கீரிப்பிள்ளை, இந்தியகுழி முயல்போன்ற சிறிய பாலூட்டி விலங்குகளும் காட்டின் பாதுகாப்பைப் பெறுகின்றன.
அண்மையில் தேசிய பூங்காவொன்றாகப் பெயரிடப்பட்டதனால் மடு தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்காக இன்னும் திறக்கப்படவில்லை.
Sinhala Names | Tamil Names | English Names | Scientific Name |
කොටියා | சிறுத்தை | Leopard | Panthera pardus kotiya |
වලහා | தேன் கரடி | Sloth bear | Melursus ursinus |
අලියා | ஆசிய யானை | Asian elephant | Elephas maximus |
වල් මී හරකා | காட்டெருமை | Water buffalo | Bubalus bubalis |
වල් ඌරා | காட்டுப்பன்றி | Wild Boar | Sus scrofa |
හිවලා | நரி | Golden Jackal | Canis aureus |
අළු වදුරා | சாம்பல் முகக் குரங்கு | Common langur | Semnopithecus entellus |
හාවා | இந்தியகுழி முயல் | Indian hare | Lepus nigricollis |
මුගටියා | இந்திய சாம்பல் கீரிப்பிள்ளை | Common Mongoose | Herpestes edwardsii |
දඬු ලේනා | பழுப்பு மலை அணில் | Giant squirrel | Ratufa macroura |
ශ්රී ලංකා අළුකෑදැත්තා | இலங்கை சாம்பல் இருவாய்ச்சி | Sri lanka Grey Hornbill | Ocyceros gingalensis |
වත නිල් මල් කොහා | நீல முகச் செண்பகம் | Blue – faced malkoha | Phaenicophaeus viridirostris |
ලංකා මුදුන් බොර දෙමලිච්චා | பழுப்பு நிற மூடிய புளுணி | Brown- Capped Barbbler | Pellorneum fuscocapillus |
ශ්රී ලංකා මල් කොට්ටෝරුවා | சின்ன குக்குறுவான் | SL Crimson-Fronted Barbet | Psilopogon rubricapillus |
වළි කුකුලා | இலங்கைக்காட்டுக்கோழி | Sri lankajunglefowl | Gallus lafayetii |
පොදුවනසැරටින්නා | இலங்கைவுட்ஷ்ரைக் | S.L Wood shrike | Tephrodornis affinis |
පොරෝ කෑදැත්තා | மலபார்கறுப்புவெள்ளைஇருவாய்ச்சி | Malabar pied hornbill | Anthracoceros coronatus |
බ්රාහ්මණ උකුස්සා | செம்பருந்து | Bhaminy kite | Haliastur indus |
Sinhala Name | Tamil Name | English Name | Scientific Name |
වීර | வீரை | Hedge Box wood | Drypetes sepiaria |
බුරුත | முதிரை | Satin wood | Chloroxylon swietenia |
කොහොඹ | வேம்பு | Kohomba | Azadirachta indica |
නුග | ஆலமரம் | Banyan | Ficus benghalensis |
කලුමැදිරිය | பதுரங்கலி | Kalumadiriya | Diospyros quaesita |
தொகுப்பாளர்– தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்பாதுகாப்பு அமைச்சு பகுதி, விவசாய மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு
பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்– ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா,அபிவிருத்தி உத்தியோகத்தர்,வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
தமிழ் மொழிபெயர்ப்பு– ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)
ஆங்கில மொழிபெயர்ப்பு– அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)
இணைய வடிவமைப்பு–என்.ஐ கயத்ரி, அபிவிருத்தி உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ) – சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவைஉத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)
படங்கள்– இணையம் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டன.
உசாத்துணை–
Wikipeedia
Ceylon expeditions
Ceylon wildtour
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |