简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 28 – சீகிரியா சரணாலயம்

Content Image

சீகிரியா வலயத்தின் நல்லிணக்கம்

நான் சந்திரா பண்டாரநாயக்க, வட்டார பாதுகாப்பாளரொருவராக சீகிரிய சரணாலயத்தில் 2016 இல் நான் நான் கடமையைப் பொறுப்பேற்றேன். சீகிரியா சுற்றுலா வலயமொன்றாகும். சுற்றுலாப் பயணிகளும் அதிகம். இப்பிரதேசத்தில் பல்வேறுபட்ட பணிகளை ஆற்றும் பதவிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் இருந்தனர். எனினும் அதிகாரிகளிடையே எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை.  எமது திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையே தொடர்பும் இல்லை. எல்லா இடங்களிலும் எமது அதிகாரிகள் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டனர்.

சுற்றிலுமுள்ள மக்கள் கிணறொன்றை வெட்டுவதற்கு, மலசல குழியொன்றைத் தோண்டுவதற்கு முடியாதவாறு தொடர்பொன்று இல்லாமல் இருந்தது. நான் மக்களிடம் பேசினேன். பேசி விட்டுக் கூறினேன். இதன் பின்னர் பொதுமக்களுக்கே சேவை செய்து எமது பணிகளை நிறைவேற்றுகிறோம் என்று கூறினோம். நான் அதிகாரிகளை ஒன்றிணைக்கத் தொடங்கினேன். தம்புள்ளை பிரதேச செயலகம், பொலிஸ், பிரதேச சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனத் தலைவர்களின் மன்றமொன்றை இறுதியில் நிறுவிக் கொள்வதற்கு முடிந்தது. நாம் அதிகாரிகள் ஒரு மாதத்திற்கு ஒரு முறை சந்தித்தோம். நிறுவனங்களுக்கிடையேயான பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடினோம். பொதுமக்களுக்கு சேவையாற்றுவதற்கு முடியுமான வகையிலான தொடர்புகளை இனங்கண்டோம். அதன் பின்னர் பல மாதங்கள் செல்லும் வேலையை ஒரு தொலைபேசி அழைப்​பினால் செய்து கொள்ள முடியுமான சூழலொன்று உருவாகியது.

27.06.2017 ஆம் திகதி சீகிரிய கிம்பிஸ்ஸ பிரதேசத்தில் நபரொருவர் காட்டு யானை தாக்கியதால் இறந்து விட்டார்.  அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர். சுமார் 6.00 மணிக்கு வயலிலிருந்து வரும் போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அந்நாளில் நான் கடமை நிமித்தம் பத்தரமுல்ல பிரதான அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். இறந்தவரின் மைத்துனர் பிரதேச சபை மந்திரி ஒருவர். அவர் எனக்கு தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் சம்பவம் தொடர்பில் அறிவித்தார். மந்திரி அவர்களே நாளை வெள்ளிக்கிழமை எனினும் நட்ட ஈட்டுப் பணத்தை பிரதேச செயலாளருடன் கதைத்து விட்டு எடுத்துத் தருகிறேன் எனக் கூறினேன். மக்களுக்கு பதற்றமடைய செய்ய விட வேண்டாம் எனக் கூறினேன். நான் அவரை ஆறுதல்படுத்தினேன். கிம்பிஸ்ஸ மிகக் கெட்ட ஒரு பிரதேசம். நான் மறுநாள் அங்கே வந்தேன். நட்ட ஈட்டுப் பணம் ஒரு இலட்சம் ரூபாவை எடுத்துக் கொடுத்தேன். அன்று பிரதி அமைச்சர் அவர்களும் வந்தார். நான் அமைச்சரின் முன்னிலையிலே உறுதி வழங்கினேன்.  இவர்களுக்கு இருப்பதற்கு வீடு இல்லை. இருப்பதற்கு வீடொன்றையாவது நாம் ஒன்று திரண்டு கட்டித் தருவதாகக் கூறினோம்.  எமது நிறுவனங்களின் ஒத்துழைப்பினால் அதைச் செய்ய முடியும் எனவும் கூறினோம்.

மறுநாள் நல்லடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருந்தன. கதைத்த அனைவரும் பிக்கு அவர்களும் கூட சவப்பெட்டியை எடுத்து வீதிக்குச் செல்வதற்கு தயார் செய்தனர். எனினும் இறந்தவரின் மைத்துனர் பிரதேச சபை உறுப்பினர் கூறினார் யார் எவ்வாறு கூறினாலும் பண்டாரநாயக்க அவர்கள் திறமையான அதிகாரி ஒருவர். அவர் வீடொன்றைக் கட்டித் தருவதாக உறுதியளித்தார். அதை இல்லாமல் செய்ய முடியாது. அதனால் சவத்தை எடுத்து வீதிக்குச் செல்ல வேண்டாம் என்றிருந்தது. அதனால் மக்கள் செய்வதற்கு இருந்த வேலை நின்று விட்டது.

மூன்று நாட்களுக்குப் பின்னர் எமது அதிகாரகளின் முன்னே கூறிய கூட்டம் கூடப்பட்டது. நான் எல்லோருக்கும் கோரிக்கையொன்றை விடுத்தேன். இங்கே இறந்தவரின் குடும்பத்துக்கு காணியொன்று இல்லை. வீடொன்று இல்லை. நான் வீடொன்று கட்டித் தருவதாக உறுதியளித்தேன். தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கோரினேன். அனைவரும் இணங்கினர்.

கலாச்சார நிதியத்தின் முகாமையாளர் மேஜர் நிஷாந்த அவர்கள் திட்டத்தையும் உழைப்பினையும் தருவதற்கு இணக்கம் தெரிவித்தார். வான் படை உழைப்பைத் தருவதற்கும், மின்சார சபை நலன்புரியின் ஊடாக மின்சாரத்தை வழங்குவதற்கும், நீர் வளங்கள் சபை நீரை வழங்குவதற்கும் இணங்கின. விலங்கு வைத்தியர் அவர்கள் கோழிகள் கட்டுப்பாடு நிர்வாகம் மற்றும்மாட்டு நிர்வாகத்தினூடாக வருமானத்தை ஈட்டுவதற்கு செயன்முறையை தயாரித்துத் தருவதற்கு உறுதியளித்தார். வன பாதுகாப்புத் திணைக்களம் கல் மற்றும் மணலைப் பெற்றுக் கொள்வதற்கும் வனஜீவராசிகள் திணைக்களம் கலாசார நிதியத்திலிருந்து அகற்றுவதற்கு இருந்த பல மரங்களை வெட்டுவதற்கு சந்தர்ப்பத்தினையும் பெற்றுத் தந்தார். வீடு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து 3 இலட்சம் கிடைத்தது.  வனஜீவராசிகள் திணைக்களத்தின் நட்டஈடாக 5 இலட்சம் கிடைத்தது. நாம் பொருத்தமான இடமொன்றைத் தேடிக் கொண்டோம்.

மூன்று மாதத்தில் வேலையை முடிக்கும் நோக்கத்துடன் வீட்டுவேலையை ஆரம்பித்தோம். மூன்று மாதத்துக்கு முன்னர் 3 அறைகளும், சமயலறையொன்றும், சாப்பாட்டறையொன்றும், மலசலகூடமொன்றும் உள்ள சிவிலின் அடித்த அழகான வீடொன்றைக் கட்டுவதற்கு எமக்கு முடியுமானது. வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கினோம்.

நாம் மூன்று மாதங்கள் பூரணமடைந்த நாளன்று விழாவொன்றை நடத்தி பிரதேச செயலாளரின் தலைமையில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டு அக்குடும்பத்துக்கு வீட்டை வழங்கினோம்.

எனக்கு இக் கதையிலிருந்து சிறந்த ஒருங்கிணைப்பொன்றின் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையொன்றினை வழங்குவதற்கு முடியும் என்ற கருத்தினை விளங்கிக் கொன்டேன். அப்போது மக்களிடமிருந்து எமது சேவை பணிகளுக்கும் சிறந்த ஒத்துழைப்பொன்று கிடைத்தது. நான் கல்வி நிகழ்ச்சிகளை போன்றவைகளையும் மேற்கொண்டாலும் இந்த வீடொன்றைக் கட்டிக் கொடுப்பது எனது நினைவில் எந்நாளும் உள்ள அழகான சந்தர்ப்பமொன்றாகும்.

திரு. சந்திரா பண்டாரநாயக்க அவர்கள்

சந்திரா பண்டாரநாயக்க அவர்கள்1986 இல் வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைந்தார். முதலில் வஸ்கமுவ தேசிய பூங்காவில் சேவையாற்றிய அவர் இரண்டாவது கிரிதலை வனஜீவராசிகள் நிலையத்தில் 10 வருடங்கள் சேவையாற்றினார். இதற்கிடையில் தொழிலாளரொருவராக தொழிலில் இணைந்த அவர் வனவிலங்கு காப்பாளராக பதவியுயர்வு பெற்றார். மாத்தளை, ஹம்பாந்தோட்டை, எலஹெர பிரதேசங்களில் வட்டார உதவியாளரொருவராக சேவையாற்றிய  சந்திரா பண்டாரநாயக்க அவர்கள்2015 இல் பதவியுயர்வு பெற்று வட்டார பாதுகாப்பாளராக சீகிரிய சரணாலய வலயத்தில் சேவையாற்றினார்.

அவர் வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற டிப்ளோமா பாடநெறியை நிறைவேற்றினார். அனைவருடனும் அன்புடன் பணியாற்றுவதை விரும்பும் பண்டாரநாயக்க அவர்கள் தமது கடமையைப் பற்றி மிகவும் திருப்தியடைகிறார்.

பண்டாரநாயக்க அவர்களின் அன்பான மனைவி மாத்தளை பிரதேச அபிவிருத்தி வங்கியில் சேவையாற்றும் ஆர். எம். சகுந்தலா ரத்நாயக்க அவர்கள் ஆவர். மூத்த மகன் தினூஷ பண்டார, வெளிநாட்டு தொழில் ஒன்றில் உள்ளதோடு இளைய மகன் எரந்தக பண்டார மாத்தளை ஹோட்டல் பாடசாலையில் கல்வி கற்கிறார்.

அவரின் முகவரி ஆர். எம். சீ. பண்டாரநாயக்க, 193/1, பல்லே வெஹெரகம, கைகாவல, மாத்தளை ஆகும்.

சீகிரியா சரணாலயம்

சீகிரியா சரணாலயம் இலங்கையின் கலாச்சார முக்கோண வலயத்தின் இதயத்தில் அமைந்துள்ளதோடு அது பல்லாயிரம் வருடங்கள் பழமையான புராதன நினைவுச் சின்னங்களால் சூழப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் வட திசைக்கு ஆகுமாறு அமைந்துள்ள 26.01.1990 ஆம் திகதி சீகிரியா சரணாலயமாகப் பெயரிடப்பட்ட இப்பிரதேசம் சீகிரியா மலைக்குன்று, சீகிரியா மலைக்குன்றினைச் சுற்றி அதே போன்று பிதுரங்கல குன்று மற்றும் பிதுரங்கல குன்றினைச் சுற்றி 5,099 ஹெக்டயாரான காடுகளினைப் போன்றே நீர் ஆதாரங்களினைக் கொண்டதாகும். அவ்வாறே அது யுனெஸ்கோ உலக பாரம்பரியமொன்றாகும்.

சீகிரியா மலைக்குன்று
சீகிரியா மலைக்குன்றும் பிதுரங்கல குன்றும்

சீகிரியா குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள காடு உள்நாட்டுக்கே உரித்தான, தங்குகின்ற மற்றும் புலம்பெயர் பறவை இனங்கள் அதிகளவான எண்ணிக்கையின் விருப்பமான வாழிடமொன்றாகும். இவ்வாறு சீகிரியா சரணாலயம் புராதன பிதுரங்கல விகாரைக்குச் செல்லும் பக்தர்களுக்கு உதவுகின்ற காடுகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் சுற்றியுள்ள வழியமைப்புக்களைக் கொண்டதாகும்.

சீகிரியா சரணாலயத்தினுள் உள்ள வழியமைப்பு
புராதன பிதுரங்கல விகாரை

சீகிரியா சரணாலயத்தின் பெரிய பகுதியொன்று இன்னும் மாறாமல் உள்ளதோடு சீகிரியா குன்றின் அடிவாரத்தில் உள்ள கரடுமுரடான நிலப் பிரதேசத்தில் இன்னும் வனவிலங்குகள் பெருமளவின் வாழிடமாகும்.

அடர்ந்த விதானம், உயர்ந்த விதானம் மற்றும் கீழ் பற்றைகளுடனான அடர்ந்த இலைகளைக் கொண்டுள்ள சிங்கராஜ ஈரக் காடுகள் இலங்கையின் பறவைகளைப் பார்வையிடுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாகும். சிங்கராஜ ஈரக் காட்டின் அளவுக்கு அடர்ந்த காடொன்றாக இல்லாத சீகிரியா காட்டில் உள்ள விசேடமானது இங்கு பறவைகளை இனங்கண்டு கொள்வது சிங்கராஜவை விட மிக இலகுவானதாகும். வரண்ட வலய காடொன்றான சீகிரியாவைப் பார்வையிடுவதற்குக் கிடைக்கின்ற சில பறவைகள் ஈரக் காடுகளில் கண்டு கொள்ள முடியாது. சீகிரியா காட்டுப் பயணம் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் உள்ளதோடு அக்காலத்திற்குள் பார்வையாளர்களுக்கு பறவையினங்கள் பல்லாயிரக்கணக்கானவற்றைக் கண்டுகொள்ள முடியும். சீகிரிய சரணாலயத்தில் பொதுவான மற்றும் அரிதானவை போன்றே உள்நாட்டுக்கே உரித்தான,தங்குகின்ற மற்றும் புலம்பெயர் பறவை இனங்கள்சுமார் 120 வாழ்கின்றன. இப்பல்வேறுபட்ட தன்மையினால் சீகிரியா சரணாலயத்தின் முக்கியத்துவம் மிக உயர்ந்து சென்றுள்ளது.

                                                                                                                            சீகிரிய யானைகள்

சீகிரிய பறவைகளைப் பார்வையிடும் சுற்றுலா சுமார் ஐந்து மணித்தியாலயங்கள் இருப்பதோடு சீகிரியா குன்று கோட்டையைச் சுற்றி பெரிய பிரதேசமொன்று இதனால் உள்ளடக்கப்படுகின்றது. பறவைகளைப் பார்வையிடும் சுற்றுலா சீகிரியா குளத்துக்கு அருகிலிருந்து ஆரம்பிக்கப்படுவதோடு அது பெரிய எண்ணிக்கையிலான பறவைகளைப் பார்வையிடுவதற்கு சிறந்த இடமொன்றாகும். இங்கு காணக் கிடைக்கின்ற பொதுவான பறவைகள் சிலவற்றின் பெயர்கள் உண்ணிக் கொக்கு, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, திக்கெல்லின் பூங்கொத்தி, மாம்பழச்சிட்டு, புள்ளித் தினைக்குருவி, நீளவால் தாழைக்கோழி, பாம்புத்தாரா, சிறு நீல மீன்கொத்தி, கருஞ்சிட்டு, வெண்கழுத்துநாரை, செம்பருந்து என்பனவாகும். இங்கு உள்நாட்டுக்கே உரித்தான பறவையினங்கள் ஏழினைக் காணக் கிடைக்கின்றது.

அரசவால் ஈப்பிடிப்பான்r

சீகிரியா சரணாலயத்தினுள் சூழல் பல்வேறுபட்டதன்மை ஏற்பட முடியும் என்பதோடு தாவர இனங்களின் பல்வேறுபட்டதன்மை குறைவாகும். இங்கு தாவர சமூகம் அரை பசுமையான காடுகளாகும். நுரை, இறும்பிலி, தென்துக்கி, இளநீர், வித்பனி, வெண்ணங்கு, குரவம், வீரை போன்ற மரங்களும்,  கொஞ்சி, உலுவேந்தம், காசன், பொங்கொரந்தி, தெப்பத்தி எனும் பற்றைகளும் பெரும்பாலும் கிடைக்கின்றன.  அவ்வாறே காட்டு நொச்சி, சாவண்டலை மரம், பூக்கம்,  பாலை போன்ற மரங்களும் கிடைக்கின்றன.

சுற்றுலா வழிகாட்டிகளிடம் காட்டு மலை ஏறுவதனையும் பறவைகளைப் பார்வையிடும் சுற்றுலாவுக்காக வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் சீகிரியாவில் பல நாட்கள் செலவிடுவதற்கு திட்டமிட்டு இருப்பதாயின், சீகிரியா காட்டினை ஆய்வு செய்வதற்கும் வனவிலங்கு மற்றும் தாவர அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு சில காலத்தை ஒதுக்குவதும் முக்கியமானதாகும்.  சீகிரியா மலைக்குன்று,  பிதுரங்கல மலை விகாரையைப் பார்வையிடுதல்,  சீகிரியா குளத்தை ஆய்வு செய்வதற்கும் அங்கு சூழல் நுழைவு பற்றி அறிமுகப்படுத்துதல் உங்களுக்குப் பயனுள்ளதாக  அமையும். சீகிரியா மலைக் கோட்டை கி. பி. 5 ஆம் நூற்றாண்டு வரை செல்லும் வரைபடம் கொண்ட பூங்காவினைக் கொண்ட மிகவும் திட்டமிடப்பட்ட நகரொன்றாகும்.  இன்று அது நாட்டில் அதிகமானஎண்ணிக்கையினர் சுற்றுலா செய்யும் இடங்களில் ஒன்றாகும். சூரிய உதயம் அல்லது சூரியன் மறைந்து செல்லும் காட்சியினை அனுபவிப்பதற்கு அதிகாலையில் அல்லது மாலை வேளையில் மலையேறுவதற்கு ஆரம்பிப்பது பொருத்தமானதாகும். உள்நாட்டு வெளிநாட்டு சூழல் ஆர்வலர்களிடையே மிகவும் பிரசித்தமான அழகானதும் வரலாற்று முக்கியத்துவமும் கொண்ட சீகிரியா சரணாலயத்தைப் பார்வையிடுவதற்கு நீங்களும் வருகை தாருங்கள்.

கடந்த பல தசாப்தங்களில் பிரதானமாக மக்கள் குடியிருப்பு கருத்திட்டங்கள் காரணமாக சீகிரியாவைச் சுற்றி வனப் பகுதிகள் அதிகமானளவு குறைந்துள்ளன. கிராமத்தில் சனத்தொகை அதிகரிப்பதுடன் சீகிரியா ஒதுக்கத்தின் பகுதியொன்றை இலக்கு வைத்து காடழிப்பும் இடம்பெற்று பயிர்ச்செய்கை நிலங்கள் விரிவடைந்து கொண்டு செல்கின்றது. காட்டின் பகுதியொன்று அடிக்கடி சுத்திகரிப்பு செய்யப்படுதல் எனும் வனவிலங்குகளின் வாழ்வுக்கான வாழிடங்களின் பகுதியொன்று இழக்கப்படுவதாகும். யானைகள் போன்ற வனவிலங்குகளின் வாழிடங்களின் பகுதியொன்றை பறித்துக் கொள்வது காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள் போன்ற இத்தாயகவாசிகள் மீண்டும் உணவு மற்றும் நீரைத் தேடி அடிக்கடி தமது இடத்துக்கு உடைத்து உள்நுழைவது வீடுகளுக்கும் பயிர்ச்செய்கை நிலங்களுக்கும் அதிக சேதம் ஏற்படுவதற்கான தாக்கத்தைச் செலுத்துகின்றது.  இவ்வனநிலத்தைப் பாதுகாப்பதற்கு சுற்றியுள்ள மக்கள் அக்கறை செலுத்த வேண்டும்.

சீகிரியா சரணாலயம்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Scientific Name

අලියාஆசிய யானைAsian elephantElephas maximus

ගව කොකා

உண்ணிக் கொக்கு

Cattle Egret

Bubulcus ibis

කිරලා

சிவப்பு மூக்கு ஆள்காட்டி

Red-wattled Lapwing

Vanellus indicus

ලාතුඩු පිළිලිච්චා

திக்கெல்லின் பூங்கொத்தி

Pale-billed Flowerpecker

Dicaeum erythrorynchos

පොදු අයෝරාවා

மாம்பழச்சிட்டு

Common Iora

Aegithina tiphia

ළය කායුරුවී කුරුල්ලා

புள்ளித் தினைக்குருவி

Scaly-breasted Munia

Lonchura punctulata

බළල් සේරාநீளவால் தாழைக்கோழிPheasant-tailed JacanaHydrophasianus chirurgus
අභිකාවාபாம்புத்தாராOriental DarterAnhinga melanogaster pennant

මල් පිළිහුඩුවා

சிறு நீல மீன்கொத்தி

Common Kingfisher

Alcedo atthis

කළුකිච්චා

கருஞ்சிட்டு

Indian Robin

Saxicoloides fulicatus

පාදිලි මානාවා

வெண்கழுத்துநாரை

Woolly-necked Stork

Ciconia episcopus

බ්‍රාහ්මණ උකුස්සා

செம்பருந்து

Brahminy Kite

Haliastur indus

සුදු රෙදි හොරා

அரசவால் ஈப்பிடிப்பான்

White Indian flycatcher

Terpsiphone paradisi

சீகிரியா சரணாலயம்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific Name

මොරநுரை

Longan, Dragons eye

Dimocarpns longan

කුණුමැල්ලஇறும்பிலிBastard Ebony

Diospyros ovalifolia

වැලිවැන්නதென்துக்கிJodpakli

Dimorphocalyx glabellus

තැඹිලියஇளநீர்Rox burgh’s cherry

Eugenia bracteata

දික්වැන්නவித்பனிThwaitesDiplodiscus verrucosus
වෙළඟුவெண்ணங்குFishing rod tree

Pterospermum suberifolium

කරණகுரவம்

Tarenna asiatica

වීරவீரைHedge Box wood

Drypetes sepiaria

බෝපනகொஞ்சிOrange berry

Glycosmis mauritiana

උල්කෙන්ද

உலுவேந்தம்

DunalPolyalthia korinti
කොරකහ

காசன்

Iron wood treeMemecylon umbellatum
ගල්හිඹුටුபொங்கொரந்திOblong leaf salacia

Salacia oblonga

ගස් කැප්පෙටියා

தெப்பத்தி

Croton oil treeCroton laccifer
මිල්ලகாட்டு நொச்சிMilla

Vitex altissima

හල්මිල්ලசாவண்டலை மரம்Halmilla

Berraya cordifolia

පලුபாலைPalu

Manilkara hexandra

කොන්

பூக்கம்

Ceylon oakSchleichera oleosa

குப்பாளர்  –  தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு பகுதி, விவசாய மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன  வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா,அபிவிருத்தி  உத்தியோகத்தர்,வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

இணய வடிவமப்புஎன்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ) சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள்ஜனக ஜயசேகர