简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 33 – சேனானாயக்க சமுத்திர சரணாலயம்

Content Image

இலங்கையில் முதலாவது வனவிலங்கு படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டது

நான் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு 1996 ஜூன் 03 ஆம் திகதி 3 ஆம் தரத்திலான வனவிலங்கு வட்டார பாதுகாவலொருவராக வந்தேன்.  சுமார் முதல் 06 மாதங்கள் கதிர்காம வனத்துக்குப் பொறுப்பாளராக இருந்து விட்டு அடுத்ததாக 1997 ஜனவரி மாதத்தில் கல்ஓயா தேசிய பூங்காவில் மேற்குப் பகுதியில் மீகல வனத்துக்குப் பொறுப்பாளராக அமர்த்தப்பட்டேன்.

கல்ஓயா தேசிய பூங்கா அமைந்திருப்பது சேனானாயக சமுத்திரத்தைச் சுற்றியாகும். அது நிர்வகிக்கப்படுவது பூங்காப் பொறுப்பாளராக இங்கினியாகலவின் கீழ் ஆகும். இங்கு 25,900 ஹெக்டயாரான அளவில் வித்தியாசமொன்று உள்ளது. கல்ஓயா நிர்வாக வசதிக்கு வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என பிரதான வட்டார வனங்கள் உள்ளன.பெயரில் கூறினால் வடபகுதி முல்லேகமவனம், தெற்குப் பகுதி பதுலுவெவ வனம், மேற்குப் பகுதியில் நில்கல வனம் மற்றும் கிழக்குப் பகுதி இங்கினியாகல பூங்கா தலைமை வனமாகும்.

பூங்காவின் தலைமை அலுவலகம் இருப்பது சேனானாயக சமுத்திரத்தின் நீர்த்தேக்க அணையின் கீழ் ஆகும். எனினும் முன்னர் நீர்த்தேக்க அணைக்கு மேல் இருந்தது. புராதன பூங்கா பொறுப்பாளர் பங்களா தற்போது இங்கினியாகல சுற்றுலா விடுதியாக்கப்பட்டது.

நான் கடமையைப் பொறுப்பேற்றது மேற்கு கல்ஓயாப் பகுதியிலாகும். அதாவது நில்கல  வனப் பகுதியில் ரதுகல மற்றும் நிலகல ஆதிவாசிகள் வாழ்ந்தனர். அவர்களின் குடும்பப் பெயர் துனிகல மக பண்டாரலாகே ஆகும். அக்காலத்தில் இருந்தது ‘ரந்துனா’ வன்னியா வேடுவ தலைவராகும். தற்போது அவரின் மகன் ‘சுதா வன்னியா’ வேடுவ தலைவராவார்.

1949-1953 காலத்தில்தான்  சேனானாயக சமுத்திரம் கல் ஓயா நதியினை மறித்து தயாரிக்கப்பட்டதாகும். இதற்கு முன்னர் நில்கல லொஜ்கலவெவ பகுதி ஆதிவாசிகள் இருந்த தனியான கிராமமொன்றாகும்,  சேனானாயக சமுத்திரத்தைச் சுற்றி 25,900 ஹெக்டயாரான தேசிய வனப்பூங்கா வர்த்தமானி வெளியீடு மேற்கொண்ட போது பழைய கிராமங்கள் சுமார் 20 இனை அகற்றி கல் ஓயா அபிவிருத்திக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆர். எல். ஸ்பிட்ல் அவர்களின் புத்தகங்களில் உள்ள ஹேனேபத்த மற்றும் தானிகல வேடுவ கிராமங்கள்சேனானாயக சமுத்திரத்துக்கு உட்பட்டன. அவ்விடங்களில் இருந்த ஆதிவாசிகள் தற்போது ரதுகலவில் குட்டியமர்த்தப்பட்டனர். அவ்வாறு அகற்றப்பட்டவுடனேயே லொப்கல்வெல நில்கல வனமாகும்.

நான் இருந்த நில்கல வன அலுவலகம் இருப்பது பிபில நில்கல வீதியில் சுமார் 20 கி.மீ. வந்து புலுகல கிராமத்திலிருந்து 10 கி.மீ. காட்டில் தென் பகுதிக்குச் சென்றால் ஆகும். இது 1950 இல் அமைக்கப்பட்ட அலுவலகமொன்றாகும். அங்கு முன்பு வேட்டைக்கு வந்த  வெள்ளை இனத்தவர்கள்  தங்குமிடத்தைப் பெற்றுக் கொண்ட விடுதியொன்று இருந்துள்ளது. லொப்கல்வெல பங்களாவாகும். தற்போது அங்கு இடிபாடுகள் புதிய அலுவலகத்துக்கு அண்மையில் உள்ளன. அதனால் இன்னும் புதிய அலுவலகத்தையும் மக்கள் அழைப்பது லொப்கல்வெல பங்களா என்றாகும்.

மேல் நில்கல சூழல் வேறுபட்டது சவானா காடொன்றாகும். கடுக்காய், தான்றி, நெல்லி தாவரங்கள் உள்ளன. ‘தெவ்’ தாவரம் உள்ளது. ‘தெவ்’ தாவரங்களின் பெயரின் பொருள் நெருப்புக்கு அகப்பட்டாலும் இறப்பதில்லை என்பதாகும்.  அமில மானவும் உள்ளது.

கல் ஓயாவின் ஆரம்பம் பிபிலவுக்கு மேலால் லுணுகல, பஸ்ஸர ஆகியவற்றுக்கிடையில் உள்ள தாரபொர மலை அவ்விடத்திலிருந்து  ஆரம்பிக்கும் கல்ஓயா பிபில வனங்களினூடாக உள்ள சுமார 20 கி.மீ. நில்கல சவானா காட்டினூடாக நடுவினால் சென்று மகர எனப்படும் மலைத்தொடருக்கிடையில் தூரத்தில் அமைந்துள்ள இடத்தில் சேனானாயக சமுத்திரத்துக்கு விழுகிறது. அங்கிருந்து சேனானாயக சமுத்திரத்தின் நீர் அணைக்கு 11 கி.மீ. உள்ளன. மகர அண்மையில் கல்ஓயா பூமிக்குள் செல்கின்றது.  மேலால் நதியொன்று தெரிவதில்லை. நீர்த்தேக்கத்தின் ஆரம்பத்தில் நதி மீண்டும் மேலுக்கு வருகின்றது.

அதன் பின்னர் இருப்பது கல்ஓயா நதியை மறித்துக் கட்டிய  சேனானாயக சமுத்திரமாகும். அது 3924 ஹெக்டயார் முழுவதும் பரந்துள்ளது. சேனானாயக சமுத்திரம் 1954 பெப்ரவரி 12 ஆம் திகதி சரணாலயமொன்றாக வர்த்தமானி அறிவிக்கப்பட்டது. சேனானாயக சமுத்திரத்தினால் விவசாய மக்களுக்கு நீர் வழங்கப்படுகின்றது. மின்னுற்பத்தி நிலையத்துக்கு நீர் எடுக்கப்படுகின்றது. மீனவர்கள் தொழில் செய்கின்றனர். இங்கினியாகல ‘இங்கினி’ மலையும் அதற்கு எதிர்ப்பக்கத்தில் தெற்கில்  ‘தங்கொல்லை’ மலையையும் இனைத்து 140 அடி உயரமுல்ல 3600 நீளத்துக்கு பயன்படுத்தி நீர்த்தேக்க அணை தயாரிக்கப்பட்டுள்ளது.

சேனானாயக சமுத்திரம் இலங்கையில் இலங்கையில் பெரியளவான நீர்த்தேக்கம் ஏக்கர் 7,77,000 அடியொன்று நீர் அளவினைத் தக்கவைத்துக் கொள்கின்றது. நீர்த்தேக்கத்துக்கு  மூழ்கிய உயர்ந்த மலைகள் இன்னும் சேனானாயக சமுத்திரத்தில் தீவுகளாக மேற்பட்டுள்ளன. இவ்வாறான தீவுகள் 10 க்கும் அதிகமான அளவொன்று உள்ளன. இவ்வனைத்து தீவுகளும் இலங்கையின் நீர்ப் பறவைகளின் வேட்டை நிலம் மற்றும் இனப்பெருக்க நிலம் என்பனவாகும். ஆயிரக்கணக்கான பறவைகள் இவற்றில் கூடுகளைக் கட்டுகின்றன. பறவைகள் தீவு, நெபிலி கல தீவு, சந்தகிரி பவ்வ இத்தீவுகளில் சிலவையாகும். சந்தகிரி பவ்வ என்ற பெயரைச் சூட்டியவர் கலாசூரி. டப்.டீ. அமரதேவ அவர்கள், தர்மசிரி கமகே அவர்கள் மற்றும் பூங்கா பொறுப்பாளர் புஷ்பானந்த அவர்கள் நிலவு இருக்கும் நாளொன்றில் தீவில் தங்கியிருந்த போது 1997 இல் கண்ட அழகான காட்சியினால் ஆகும்.

பிரதான நதி, கல்ஓயாவை மறித்து அமைத்தாலும் கல்ஓயா மாத்திரமன்று இன்னும் ஓயாக்கள் பலவும் நீர்த்தேக்கத்துக்கு விழுகின்றன. பதுலு வெல ஓயா, தென் பகுதியிலிருந்து வருகின்ற செல்லக்கா ஓயா, புத்தம மலைத்தொடரிலிருந்து ஆரம்பிக்கின்ற குருலு ஓயா, வட முல்லேகம பக்கத்திலிருந்து முல்லேகம ஆர மற்றும் தாங்கல மலைத்தொடரிலிருந்து வருகின்ற கெதெல்ல பொக்க ஆரவும் சமுத்திரத்துக்கு விழுகின்றது.

தற்போது இத்தீவு வனஜீவராசிகள் முகாம் நிலமொன்றாக பயன்படுத்தப்படுகின்றது. இத்தீவுகளுக்கு வருடத்தில் எப்போதும் யானைகள் நீந்துகின்றன. காரணம் 1949 நீர்த்தேக்க அணை கட்டுவதற்கு முன்னர் யானைகளின் பயணப் பாதைகள் இதனூடாக இருந்துள்ளன. இதனால் இன்னும் அப்பாதைகள் ஊடாக யானைகள் தீவுக்கு நீந்திச் செல்கின்றன. மிக அழகானது.

இந்நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு நான் பூங்காப் பொறுப்பாளர் என்ற வகையில் 2008 ஆண்டில் பயணம் செய்வதற்கு இருந்த படகு சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டது. முதலாவதாக பயன்படுத்தப்பட்டது நீர்த்தேக்கத்தின் பாதுகாப்புக்கு ரோந்து  பயணத்துக்கு செல்ல இருந்த படகாகும். நீர்த்தேக்க அணைக்கட்டுப் பக்கத்திலிருந்து மகர வரை வந்து மீண்டும் நீர்த்தேக்க அணைக்கட்டுப் பக்கத்திற்கு படகு செல்கின்றது. ஒரு படகினால் ஆரம்பிக்கப்பட்டு 03 வரை படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 06 மணித்தியாலய பயணமாகும். பின்னர் கேள்வி அதிகரித்தனால் 03 மணித்தியாலயங்கள் வீதத்தில் படகுப் பயணங்கள் 03 காலை 6.00, காலை 9.30 க்கும் மாலை 3.00 க்கு ஆரம்பிக்கப்பட்டது. இதனால் காலை 6.00 மற்றும் 3.00 படகு சேவை இரண்டும் மிகப் பிரபல்யமானவை.

ஒரு படகில் 08 ஆசனஙகள் உள்ளன. பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் பயிற்சிபெற்ற படகு செயற்படுத்துனர் ஒருவரும் வழிகாட்டியொருவரும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டன. அப்போது செல்ல முடியுமான மொத்த எண்ணிக்கை 10 இனை இங்கினியாகல பூங்கா பொறுப்பாளர் அலுவலகத்தினால் படகுகளுக்கு நுழைவுச்சீட்டு பெற்றுக் கொள்ள முடியும். சேனானாயக சமுத்திரம் அமைந்திருப்பது இலங்கையில்  வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் செல்கின்ற பாதையொன்றான பாசிக்குடா, அறுகம்பையிலிருந்து பதுளை வரை செல்லும் பாதையிலாகும். அதனால் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளிடையே படகுச் சேவை பிரசித்தமடைந்தது.  ஆரம்பத்தில் வருடமொன்றுக்கு  சுமார் ரூ. 18,000/-  ஆன வருமானம் கிடைத்த படகுச் சேவையினால் தற்போது வருடமொன்றுக்கு 100 இலட்சத்துக்கும் அதிகமான வருமானம் கிடைக்கின்றது.

இன்று ஆகும் போது இதனை சார்ந்த பாரிய அளவில் சுற்றுலா ஹோட்டல்கள் 02 உம் இன்னும் சுற்றுலா தங்குமிட வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.  இதற்கு மேலதிகமாக மீனவ படகுகள் சுமார் 130 சமுத்திரத்தில் மீன்களைப் பிடிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

இச்சுற்றுலாப் படகுச் சேவையை சேனானாயக்க சமுத்திரத்தில் ஆரம்பிப்பதற்குக் கிடைத்தமை எனது வெற்றியாகும். அதனை எனக்கு எப்போதும் மறக்க முடியாது. தற்போது எனது வாழ்க்கையில் காடு பற்றிய நினைவுகள் பல இருந்தாலும் படகுச் சேவையை ஆரம்பித்தமை அவற்றில் விசேடமானதாகும்.

திரு. புத்திக விதானகே  அவர்கள்

1972  பெப்ரவரி 05 ஆம் திகதி மாத்தறை நகரில் பிறந்தார். அவர் முதலாவதாக கிரிந்த புஹுல்வெல்ல கனிஷ்ட வித்தியாலயத்தில் பாடசாலை சென்றார். அவர் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர் மாத்தறை ராஹுலவிற்கு நுழைந்து உயர்தரம் வரை மாத்தறை ராஹுல வித்தியாலய்தில் பல்வு கற்றார். புத்திக விதானகே  அவர்கள் 1996 அம் ஆண்டில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வட்டார வன பாதுகாவலர் 3 ஆம் தரத்தில் அதிகாரியொருவராக இணைந்தார். அக்காலப் பகுதியினுள் அங்கிருந்து கதிர்காம வட்டார வனம், நில்கல வனம், லுணுகம்வெஹெர மற்றும் யால தேசிய பூங்காவில் சேவையாற்றுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

2006 ஆம் ஆண்டில் வனவிலங்கு வட்டார பாதுகாவலர் 2 ஆம் தரத்துக்கு பதவியுயர்வு பெற்ற புத்திக விதானகே  அவர்கள் கல்ஓயா தேசிய பூங்காவின் பொறுப்பாளராக நியமனம் பெற்றார். அங்கிருந்து 06 வருடங்கள்  கல்ஓயா தேசிய பூங்காவில் பூங்காப் பொறுப்பாளராக சேவையாற்றிய அவருக்கு யால மற்றும் மின்னேரிய வனப் பூங்காக்களில் சேவையாற்றிய பின்னர் 2013 ஆம் வருடத்தில் மீண்டும் கல்ஓயா தேசிய பூங்காவில் இரண்டாம் முறையாக பூங்காவின் பொறுப்பாளராக வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அவருக்கு 1 ஆம் தரத்துக்கு பதவியுயர்வு கிடைத்தது அதற்கிடையிலாகும். மீண்டும் மன்னார் மற்றும் மாதுறுஓயா தேசிய பூங்காக்களில் சேவையாற்றி அவர் தற்போது லாஹுகல தேசிய பூங்காவில் சேவையாற்றுகிறார்.

புத்திக விதானகே  அவர்கள் தற்போது 28 வருட கால சேவைக் காலமொன்றைப் பூர்த்தி  செய்துள்ளார். 1997 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வனவிலங்கு டிப்ளோமா பாடநெறியொன்றை நிறைவு செய்த புத்திக விதானகே  அவர்களுக்கு அதன் பகுதியொன்றாக 3 1/3இனை இந்தியாவின் டெஹெராதுன் வனவிலங்கு கல்வி நிறுவனத்தில் கற்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. 2018 இல் 3 கிழமைகள் மலேசியாவில் சுற்றுலாவொன்று செல்வதற்கும் 2014 இல் 03 கிழமைகள் சீனாவிற்கு சுற்றுலா செல்வதற்கும் அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

அவர் பொழுதுபோக்காக சமூக ஊடகவியலாளர்களுக்கு வனஜீவராசிகள் திணைக்களத்த்லும் காடுகள் பற்றிய கடந்த கால கதைகளை எழுதுகிறார். புத்திக விதானகே  அவர்கள் திருமணம் செய்தது நிஷாந்தி தில்ருக்‌ஷி ஹெட்டி ஆரச்சி அவர்களுடனே ஆகும். அது பாடசாலைக் காதலாகும். அப்போது அவர் சியனே விஞ்ஞான பீடத்தில் கற்று விஞ்ஞான ஆசிரியையொருவராக ஹக்கம் கோனேகல மகா வித்தியாலயத்தில் கடமையாற்றுகிறார்.

அவருக்கு இரண்டு மகன்மார்கள் உள்ளனர். மூத்த மகன் சினத் சாகல்ய விதானகே ராஹுல வித்தியாலயத்தில் 2024 ஆண்டில் கணிதப் பிரிவில் உயர் தரத்தில் செய்வதற்கு  தயாராகிக் கொண்டிருக்கிறார். இரண்டாம் மகன் விகத் விதானகே ராஹுல வித்தியாலயத்தில் 08 அம் தரத்தில் கல்வி கற்கிறார். புத்திக விதானகே  அவர்களின் முகவரு கேதகீ, பாடசாலை மாவத்தை, கும்புருபிட்டிய வீதி, கிரிந்த, புஹுல்வெல்ல ஆவதோடு தொலைபேசி இலக்கம் 0719800777 ஆகும்.

சேனானாயக்க சமுத்திர சரணாலயம்

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த டீ. எஸ்.சேனானாயக்க அவர்களினால் 1949/19502 காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது பல்நோக்கு நீர்ப்பாசன  முன்மொழிவு முறையின் கீழ் கல்ஓயாவை மறித்து அமைக்கப்பட்ட பாரிய நீர்த்தேக்கம் சேனானாயக்க சமுத்திரமாகப் பெயரிடப்பட்டது.  அது அப்போதைய  இலங்கையில் பாரிய நீர்ப்பாசன  நீர்த்தேக்கமாகும். நீரின் திறன் 770,000 அடி ஏக்கரான சேனானாயக்க சமுத்திரத்தை நிர்மாணித்ததன் ஒரு பகுதி விளைவாக நீர்த்தேக்கத்தின் அண்மையில் 2590 ஹெக்டயாரான நீர்ப் பிரதேச பரப்பளவில் கல்ஓயா பூங்காவாகவும், 9324 ஹெக்டயாரான நீர்ப்பாசன  நீர்த்தேக்கமான சேனானாயக்க சமுத்திர சரணாலயமாகவும் 12.02.1954 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பொன்றின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. இப்பூங்கா நாட்டின் கிழக்குப் பிரதேசத்தில் மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு  உரித்தாக அமைந்துள்ளது.

அப்பிரதேசத்தில் பாதுகாப்புபோன்றே வனவிலங்குப் பாதுகாப்பினை நிரந்தரமாக  தக்கவைத்துக் கொண்டு செல்வதற்காக 1954 ஆண்டில் கல் ஓயா அபிவிருத்தி சபையின் மூலம் வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் சேனானாயக்க சமுத்திரம் மற்றும் சுற்றியுள்ள நீர்த்தேக்க காடுகளுக்கு பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்வதனை அடிப்படையாகக் கொண்டு வனவிலங்குப் பாதுகாப்புப் பிரதேசங்களாக கல்ஓயா தேசிய பூங்கா,  சேனானாயக்க சமுத்திர சரணாலயம், கல்ஓயா வடகீழ் சரணாலயம் 12432 ஹெக்டயார் மற்றும் கல்ஓயா  தென்மேற்கு சரணாலயம் 15281 ஹெக்டயாராக வனவிலங்கு பாதுகாப்பு பிரதேசங்கள் நான்கு உருவாக்கப்பட்டன.

நாட்டில் வரண்ட வலயத்தில் அமைந்துள்ள இப்பூங்காக்களுக்கு வடகீழ் பருவக் காலத்தில் மழை கிடைப்பதோடுஅது சாதாரண வருடாந்த மழைவீழ்ச்சி 1600-1700 மில்லிமீற்றர்களுக்கு இடையிலாகும். சேனானாயக்க சமுத்திரத்தை அண்டியதாக அமைந்துள்ள நிலத்தின் மண் சிவப்பு– கபில நிறத்தைக் கொண்டதாகும். இலங்கையில் பாரிய உள்ளக நீர்த்தேக்கமான சேனானாயக்க சமுத்திரத்தை அண்டி 25000 ஹெக்டயார்களுக்கும் அதிகமான பசுமையான காடுகளும் திறந்த சவானா காடுகளுமாகும். நீருக்கு மேற்பரப்பு  தீவுகளினால் நிரம்பியுள்ளது.

சேனானாயக்க சமுத்திர சரணாலயத்தைச் சுற்றிய பூங்கா வரண்ட வலயத்துக்கு உரித்தான தாவரங்களைக் கொண்டதாகும். இப்பூங்காவில் காணக் கிடைக்கின்ற கானகத்தில் மூன்று வகையான தாவரங்கள் உள்ளன. காடுகள், பற்றைகள் மற்றும் புல்நிலங்கள் எனும் பெயருடைய இங்கு சுமார் 45% ஆன பசுமைய்யான காடுகளிலிருந்து  மறைக்கப்பட்டுள்ளதோடு இன்னும் 33% ஆனவை புல்நிலங்களினாலும் 9 % ஆனவை மலைநாட்டு புல்நிலங்களாகும்.

 மலையடிவார பள்ளத்தாக்கின் இரு பக்கங்களிலும் மிகச் செழிப்பாக புல் வகைகளும் மூலிகைத் தாவரங்களும் வளர்ந்துள்ளதோடு ஆயுர்வேதவில் பிரதான மூலிகை மரங்கள் மூன்றான கடுக்காய், தான்றி, நெல்லி, மற்றும் வேங்கை போன்றே மானா, தர்ப்பைப்புல் போன்ற புல்வகைகளும் மிகச் செழிப்பாக வளர்ச்சியடைந்துள்ளன. இக்காட்டில் உயரமாக வளர்ந்துள்ள தாவரமாக சாவண்டலை மரம், காட்டு மா மற்றும் பதுரங்கலி, வீரை, பாலை, கருங்காலி  மற்றும் விளாவும் பற்றைத் தாவரங்களாக இலந்தை போன்ற உள்நாட்டு மரங்கள் பலவற்றினை பாரிய அளவில் காணக் கிடைக்கின்றன.

பூங்காவில் உயர்ந்த வானத்தை அழகாக்கும் பல்வேறு பறவையினங்கள் 150 க்கு அண்மித்த அளவானவை  நீர்த்தேக்கத்துக்கு அண்மையிளைள  தீவுகளில்  கூடு கட்டியுள்ளன. நீர்த்தேக்கத்தில் உள்ள பறவைகள் கூடுகளுக்காகப் பயன்படுத்துகின்ற தீவுகள்   Bird Islandஎன்று அறிமுகப்படுத்தப்படுகின்றன. கடினமான பச்சை நிறமுடைய கூரையொன்றைக் கொண்ட பூங்கா பறவைகளின் வசிப்பிடம் என்பதோடுசேனானாயக்க சமுத்திரத்துக்கு  அண்மையில் கொக்குகள், நீர்க்காகங்கள், சாம்பல் நாரை மற்றும் சிறியசீழ்க்கைச்சிரவி மற்றும் பருந்து இனங்கள், நீத்தேக்கத்தில் பெரும்பாலும் காணக் கிடைக்கின்ற பறவைகளாகும். சிறுத்த பெருநாரை, சாம்பல் கூழைக்கடா, இலங்கை சாம்பல் இருவாய்ச்சி, செம்முகப் பூங்குயில், இலங்கை காட்டுக்கோழி, சின்னக் காட்டுக்கோழி, பழுப்பு நிற மூடிய புழுணி போன்றவை பூங்காவின் உள்ளகத்துக்குள் வசிக்கின்ற பறவையினங்களாகும்.

இலங்கை காட்டுக்கோழி
சிரல்
வண்ணந்தீட்டியக் கவுதாரி
இலங்கை சாம்பல் இருவாய்ச்சி
இலங்கை தவளைவாயன்
பெரிய காட்டு ஆந்தை
குடுமிக் கழுகு
கடல் பருந்து
நீர்க்காகம்
கொக்கு

தேசிய பூங்காவொன்று வனவிலங்குகளுக்கு மிகவும் இணக்கமாக இருப்பது வருடம் முழுவதும் நீர் குறைவின்றி உள்ளமையினாலும் பசுமை நிறத்தில் நிழலினால் எப்போதும் ஆறுதல் கிடைப்பதினாலும் ஆகும். அதனால் கல்ஓயா தேசிய பூங்காவில் முக்கியமான பகுதியொன்றாக இருப்பது வருடம் முழுவதும் காணக் கிடைக்கின்ற யானைக் கூட்டமாகும்.  கல்ஓயா தேசிய பூங்கா தமது இயற்கை வாழிடத்தினுள் அதே காலத்தில் வாழ்கின்ற ஆசிய யானைகளைக் கண்டு கொள்வதற்கு உலகிலுள்ள  சிறந்த இடங்களில் ஒன்றாகும். வனவிலங்குகள் மற்றும் சூழலுக்கிடையில் நல்லிணக்கத்தை எடுத்துக் காட்டுகின்ற கல்ஓயா தேசிய பூங்காவில் உள்ள அனைத்து பாலூட்டிகளிலும் வலிமையான நீச்சல் வீரர்களாக இருப்பதும் யானைகளாகும். மார்ச்சிலிருந்து ஜுலை வரையான காலத்தினுள் படகு சவாரியின் மூலம் சேனானாயக்க சமுத்திர நீர்த்தேக்கத்தில் ஒரு தீவிலிருந்து இன்னுமொரு தீவொன்றுக்கு நீந்தும் யானைக் கூட்டங்களைக் கண்டுகொள்ள முடியும். பாலூட்டிகள் 32 க்கும் அண்மித்த அளவொன்று பூங்காவில் பதியப்பட்டிருப்பதோடு ஆசிய யானை, எருமை,  மரைகள், இலங்கை சிறுத்தை, கரடி, மான், புள்ளி மான், சுள்ளிய சாம்பல் குரங்கு, செங்குரங்கு மற்றும் காட்டுப்பன்றி அவற்றுள் உள்ளடங்குகின்றன. பூங்காவில் ஊர்வன இனங்களுக்கு சதுப்பு முதலைகள் மற்றும் நட்சத்திர ஆமைகள், பால் ஆமைகள், கல் ஆமைகள்,  மலைப்பாம்பு மற்றும் நாகம் உள்ளடங்குகின்றன.

                                                                                                                              ஆசியயானை

                                                                                                                      நீந்துகின்ற யானைகள்

சதுப்பு முதலை

சேனானாயக்க சமுத்திர வாவியில் அமைதியான நீரின் மேல் நீங்கள் பயணம் செய்யும் போது, கல்ஓயா தேசிய பூங்கா உயிரினங்களினால் நிறைந்து அமைந்துள்ளதென உங்களுக்கு விரைவாக விளங்கிக் கொள்ள முடியும். பூங்காவில் உள்ள அமைதியான சூழல் உல்லாசப் பயணிகளுக்கு உயர்ந்தபட்ச சுதந்திரமாக பார்வையிடுவதற்கு இடமளிக்கிறது.         

வரண்ட கலப்பு பசுமையான பூங்காவொன்றான இந்நிலம் கொழும்பிலிருந்து சுமார் 368 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. பூங்காவின் நுழை​வாயில் அம்பாறையிலிருந்து 20 கிலோமீற்றர் கிழக்காக இங்கினியாகல அமைந்துள்ளது. கல்ஓயா தேசிய பூங்காவிற்கு கொழும்பிலிருந்து இரத்தினபுரி, பெல்மடுல்ல, பலாங்கொடை, வெல்லவாய, மொனராகலை, சியம்பலாண்டுவ- அம்பாறை பாதையில் 17 ஆம் மைல் கம்பத்தில் திரும்பி இங்கினியாகலவிற்கும் அவ்வாறே  கொழும்பு, கண்டி, மஹியங்கனை, அம்பாறையினூடாக இங்கினியாகலவுக்கும் நெருங்க முடியும். இங்கினியாகலவிலிருந்து படகினால் சேனானாயக்க சமுத்திரத்தை கடப்பது கல்ஓயா தேசிய பூங்காவுக்கு நுழைவது மாற்று முறையொன்றாகும்.

உல்லாசப் பிரயாணிகளுக்காக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் வசதிகள் வழங்கப்படுவதோடு சுற்றுலா விடுதிகளில் தங்குமிடங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பிரதான வனவிலங்கு அலுவலகத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வனவிலங்கு சுற்றுலா விடுதிகள் இங்கினியாக, மஹதொரொவ்வ, கொஸ்ஸபொல போன்ற இடங்களில் முகாம் நிலங்கள் அமைக்கப்பட்டன. மேலும் முல்லேகமவிலிருந்து கெபெல்லபொக்க வரையும் அலிவங்குவ்விலிருந்து கொஸ்ஸபொல  வரையும் ஜீப் வண்டியினால் சுற்றுலா செல்லவும் முடியுமாக உள்ளது.

கோடைக் குடில்

சேனாநாயக்க சரணாலயம்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Scientific Name

කොකා

கொக்கு

Heron

Ardeidae Sps.

දියකාවා

நீர்க்காகம்

cormorant

Phalacrocorax fuscicollis

අළු කොකා

சாம்பல்நாரை

Grey Heron

Ardea cinerea

තඹසේරුවා

சிறிய சீழ்க்கைச்சிரவி

 Lesser Whistling Duck

Denbrocygna javanica

බහුරුමානාවා

சிறுத்த பெருநாரை

Lesser Adjutant

Leptoptilos javanicus

පැස්තුඩුවා

சாம்பல் கூழைக்கடா

Spot-billed Pelican

Pelecanus philippensis

ශ්‍රී ලංකා අළුකෑදැත්තා

இலங்கை சாம்பல் இருவாய்ச்சி

Sri Lanka Grey Hornbill

Ocyceros gingalensis

රතු මුහුණැති මල්කොහා

செம்முகப் பூங்குயில்

Sri Lanka Red Faced Malkoha

Phaenicophaeus pyrrhocephalus

වළිකුකුලා

இலங்கை காட்டுக்கோழி

Sri Lanka Junglefowl

Gallus lafayetii

හබන්කුකුලා

சின்னக் காட்டுக்கோழி

Sri Lanka Spurfowl

Galloperdix bicalcarata

ලංකා මුදුන් බොර දෙමලිච්චා

பழுப்பு நிற மூடிய புழுணி

Brown Capped Babbler

Pellorneum fuscocapillus

මල් පිලිහුඩුවා

 சிரல்

Common Kingfisher

Alcedo atthis

මානම් / පතන් කුකුළා (තිත් වටු-කුකුළා)

வண்ணந்தீட்டியக் கவுதாரி

Painted Francolin

Francolinus pictus

මැඩි-මූණා

 இலங்கை தவளைவாயன்

Frogmouth

Batrachostomus moniliger

උලමා

 பெரிய காட்டு ஆந்தை

Spot-bellied Eagle Owl

Bubo nipalensis

කොණ්ඩරාජාලියා

 குடுமிக் கழுகு

Changeable Hawk Eagle

Spizaetus cirrhatus

මුහුදු රාජ අලියා

 கடல் பருந்து

White-bellied Sea Eagle

Haliaeetus leucogaster

අලියා

ஆசியயானை

Asian Elephant

​Elephas maximus

මීහරකා

எருமை

Wild Buffalo

Bubalus arnee

ගෝනා

மரை

Sambar

Rusa unicolor

ශ්‍රී ලංකා දිවියා

சிறுத்தை

 Leopard

Panthera pardus kotiya

වලසා

கரடி

 Sloth Bear

Melursus ursinus

මුවා

மான்

Barking Deer

Muntiacus muntijak

තිත්මුවා

புள்ளிமான்

Spotted Deer

Axis axis ceylonensis

අළුවදුරා

சுள்ளிய சாம்பல் குரங்கு

Gray Langur

Semnopithecus entellus

රිළවා

செங்குரங்கு

Toque Macaque

Macaca sinica

වල්ඌරා

காட்டுப்பன்றி

Wild Boar

Sus scrofa

හැලකිඹුලා

சதுப்பு முதலை

Mugger Crocodile

Crocodylus palustris

තාරකාඉබ්බා

நட்சத்திர ஆமை

Star Tortoise

Testudo elegans

කිරිඉබ්බා

பால் ஆமை

Flapshell Turtle

Lissemys ceylonensis

ගල්ඉබ්බා

கல் ஆமை

Parker’s Black Turtle

Melanochelys trijuga

පිඹුරා

மலைப்பாம்பு

Python

Python molurus

නයා

நாகம்

Cobra

Naja naja

சேனாநாயக்க சரணாலயம்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific Name

අරළු

 கடுக்காய்

Aralu

Terminalia chebula

බුළු

 தான்றி

Bulu

Terminalia bellirica

නෙල්ලි

 நெல்லி

 Nelli

Phyllanthus emblica

ගම්මාලු

வேங்கை

Gammalu

Pterocarpus marsupium

මාන

 மானா

Mana

Cymbopogon confertiflorus

ඉලුක්

 தர்ப்பைப்புல்

Illuk

Imperata cylindrica

හල්මිල්ල

 சாவண்டலை மரம்

Halmilla

Berraya cordifolia

ඇටඹ

 காட்டுமா

Etamba

Mangifera zeylancia

කළුමැදිරි

 பதுரங்கலி

Kalumediri

Diopyros chaetocarpa

වීර

 வீரை

Weera 

Dryptes sepiaria

පලු

 பாலை

Palu

Manilkara hexandra

කළුවර

 கருங்காலி

 Ebony

Diospyros altissima

දිවුල්

 விளா

Divul

Limonia acidissima

එරමිණියා

 இலந்தை

 

Zizyphus sps.

குப்பாளர்  –  தம்மிகா மல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன  வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா,அபிவிருத்தி  உத்தியோகத்தர்,வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (வனஜீ.வன. வள. பா. அ)

இணய வடிவமப்புஎன்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள்ரோஹித குணவர்தன, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்