简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 34 – ஆனவிலுந்தாவை சரணாலயம்

Content Image

ரம்சார் நிலமொன்றான ஆனவிலுந்தாவை

2001 ஆம் ஆண்டில் ஆனவிலுந்தாவை சரணாலயத்தை  ரம்சா ஈரநிலமொன்றாக்குவதற்கு நாம் முன்மொழிந்தோம். ரம்சா எனபது ஈரநிலத்தைக் கொண்ட சூழற் தொகுதியொன்றைப் பாதுகாப்பதற்காக பல்வேறு நிபந்தனைளைக் கொண்ட சர்வதேச ரீதியான முன்வைக்கப்படுகின்ற ஒப்பந்தமொன்றாகும். இலங்கையில் இது வரை  பூந்தல ரம்சா ஈரநிலம் மட்டுமே இருந்தது. அது 1991 ஆண்டிலாகும். அதன் பின்னர் வேறு ஈரநிலமொன்று ரம்சா வகைக்கு உரித்தாக்கப்பட்டிருக்கவில்லை.

நான் அப்போது வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு வந்தவுடனேயாகும். நான் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பிரிவில் உதவிப் பணிப்பாளரொருவராகச் சேவையாற்றினேன். அக்காலத்தில் அப்பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தவர் திரு. தர்மகீர்த்தி அவர்களாவர். உதவி பிரதி பணிப்பாளரொருவராக திரு. சந்திரலால் ஹேரத் அவர்களும் வனவிலங்கு பணிப்பாளர் நாயகமாக திரு. டீ. பீ. குணசேகர அவர்களும் கடமையாற்றினர்.

ஆனவிலுந்தாவை சிறந்த ஒரு சரணாலயமாகும். அங்குள்ள வாவிகள் மற்றும் சூழற் தொகுதியினைப் பாதுகாக்க வேண்டும் எனும் கருத்துக்கு அவர்கள் அனைவரும்  இணங்கினர். இது தொடர்பான தரவுகள் குறைவாகும். அத்தரவுகளைத் தேடிக் கொள்வது பொறுப்பான பணியொன்றாகும். நில அளவைத் திணைக்களத்தின் 1:50,000  வரைபடத்தையும் 1:10,000 வரைபடத்தைமாத்திரமேஎன்னால் தேடிக் கொள்ள முடிந்தது.  இக்கருத்திட்டத்துக்கு சர்வதேச ரீதியாக இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு எனது  தலைவர்கள் எனக்குக் கூறினர்.

நான் வந்தவுடனேயே என்பதனால் தொழில் நிமித்தம் நிறுவனத்தின் வாகனத்தைப் பயன்படுத்த முடியும் என நான் அறிந்திருக்கவில்லை. அக்காலத்தில்வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கொழும்பு க்ரெகரி வீதியில் அமைந்திருந்தது. திம்பிரிகஸ்யாயைக்கு அருகிலேயே IUCN அலுவலகம் இருந்தது. நான் வரைபடங்களைச் சுருட்டிக் கொண்டு பேரூந்தில் IUCN க்கு வந்தேன். அங்கு தலைவராக கலாநிதி சன்ன பம்பரகமுவ அவர்கள் கடமையாற்றினார். சந்துன் பெரேரா அவர்களும் அவர்களின் இன்னும் அதிகாரிகள் சிலரும் இருந்தனர். அங்கே நாம் ஆனவிலுந்தாவைக்கு களப் பயணமொன்று செல்வதற்கு தீர்மானித்தோம். அதன்படி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வாகனமொன்றிலும் IUCN வாகனமொன்றிலும் நாம் களப் பயணத்தைச் சென்றோம். இக்களப் பயணத்தில் நாம் ஆரச்சிகட்டுவ பிரதேச செயலாளர் பிரனாந்து அவர்களைச் சந்தித்தோம். விபரத்தை அறிந்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். உயர்ந்த பட்ச ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதியளித்தார்.

நாம் பல தடவைகள் களப் பயணங்கள் சென்றோம். முதலாவதாக சுற்றியுள்ள மக்கள் இப்பணிக்கு விருப்பினைத் தெரிவிக்கவிலை. ஏதாவதொரு தவறான வேலை னெறு என்று அவர்கள் எண்ணினர். மக்கள் எமக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர். அதனால் போலும்,IUCN கூறியவுடனேயே சர்வதேச பணியொன்று என எண்ணிணர். நாம் பிரதேசத்தின் வரைபடமொன்றையும்பக்கங்களையும் தயாரித்தோம்.

எமக்கு ஆனவிலுந்தாவை பீட்டு அலுவலகமொன்று காணப்படவில்லை. ஆனவிலுந்தாவை கொழும்பு புத்தளம் வீதியிலுள்ள பிரதேச செயலகத்தினால் நிர்வகிக்கப்பட்டது. உதவிப் பணிப்பாளர் அலுவலகம் அனுராதபுரத்தில் இருந்தது. நாம் பிரதேசத்தின் பொதுமக்களுடன் கூட்டமொன்றை வைப்போம் என பிரதேச செயலாளர் கூறினார். இப்பிரதேசத்தில் மீனவர்கள், விவசாயிகள், வெளியிலிருந்து வந்து மணலை கரை போடுபவர்கள், சுற்றுலாக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்கள் இருந்தனர். இக்கூட்டத்துக்கு பிரதேச செயராளர், IUCN பிரதிநிதிகள், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள், மீனவர்ச் சங்கங்கள், விவசாய சங்கங்கள் போன்றோர் கலந்து கொண்டனர். ஆனவிலுந்தாவை சரணாலயத்தின் சூழற் தொகுதிகளின் பெறுமதியைப் பற்றி மக்களுக்கு சிறந்த அறிவொன்று காணப்பட்டது. கூட்டத்தின் பின்னர் செய்யப் போகின்றது சிறந்த ஒரு பணி என அறிந்து கொண்டனர். காலத்துடனேயே மக்கள் எம்முடன் நல்லிணக்கம் கொண்டனர்.

பிரதேச செயலாளர் பீட்டுஅலுவலகத்தை அமைத்துக் கொள்வதற்கு நிலமொன்றை வழங்கினார். பீட்டு அலுவலகமொன்று இருக்கும் போது தவறான வேலைகளைச் செய்வதற்குக் கடினம் என்பதனால் மக்கள் விரும்பினர். நாம் பிரதானமாக மூன்று பகுப்பாய்வுகளைச் செய்தோம். சமூக, உயிர்ப் பல்வகைமை மற்றும் நிலப் பாவனை பற்றியதாகும். சமூகப் பகுப்பாய்வு கேள்விகளினூடாக IUCN இன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஊர் மக்கள் பாதுகாப்பு தொடர்பாகக் கொண்டுள்ள கருத்துக்கள், கருத்திட்டத்தின் தேவை தொடர்பான அவர்களின் விருப்பு பற்றிய தகவல்களை அங்கு பெற்றுக் கொண்டோம்.

உயிர்ப் பல்வகைத்தன்மை தொடரபாக எமது அறிவுக்கு மேலதிகமாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கலாநிதி சமரரத்ன அவர்களினால் வெளியிடப்பட்டிருந்த ஆவணமொன்றைப் பயன்பாட்டுக்கு எடுத்தோம். நிலப் பயன்பாட்டில் வீடுகள் எவ்வாறு உள்ளன, ஈரநிலங்களின் அமைவிடம், வாவிகளின் அமைவிடம், நீர் தேங்கி நிற்றல் அவ்வாறானவைகளின் தரவுகளை எடுத்தோம். இறுதியில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை சுவிற்சர்லாந்தில் க்லேண்டில் IUCN தலைமையகத்தில் அமைந்துள்ள ரம்சா அலுவலகத்துக்கு சமர்ப்பித்தோம். இப்பணிகளுக்கு சுமார் ஒரு வருட காலம் செலவழிந்தது. இறுதியில் 2001 ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஆனவிலுந்தாவை ரம்சா ஈரநிலமொன்றாக நிறுவுவதற்கு எம்மால் முடிந்தது. அது இலங்கையின் இரண்டாவது ரம்சா ஈரநிலமாகும்.

இது தொடர்பாக நான் எடுத்த முயற்சியைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகின்றேன். அண்மையில் நான் முன்பு அடிக்கடி வரும் போகும் வாகனத்தில் நிறுத்திய இடங்கள், முன்பு இருந்து சாப்பிட்ட அதே போன்று மலசலகூடத்தைப் பயன்படுத்திய வீட்டின் மாமியைப் பார்க்கச் சென்றேன். அவர் வேறொரு இடத்தில் தங்கியிருந்தார். எனினும் என்னைக் கண்டு அவரின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. ரம்சா ஈரநிலத்தை நிறுவியமையினால் இவ்விடத்துக்கு ஏற்பட்ட நன்மைகளைப் பற்றி அவர் பேசினார். சேவைக் காலப்பகுதியில் மனத்திருப்தியைப் பெற்றுத் தந்த கடமையொன்றாக நான் ஆனவிலுந்தாவை சம்பவத்தைக் கருதுகின்றேன்.

சிரிதத்தா சாந்தனீ வில்சன்

திருமதி சிரிதத்தா சாந்தனீ வில்சன் அவர்கள் இலங்கையின் விஞ்ஞான சேவையில் உதவிப் பணிப்பாளரொருவராக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு 1998 ஆம் ஆண்டில் நியமனம் பெற்றார். 1999 ஆம் ஆண்டிலிருந்து அவர் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பிரிவிற்கு இணைக்கப்பட்டிருந்தார். 1998 இலிருந்தே 2010 வரை வனஜீவராசிகள் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளரொருவராகவும் 2011 ஆண்டிலிருந்தே பிரதிப் பணிப்பாளரொருவராகவும் சேவையாற்றினார்.

திருமதி சாந்தனீ வில்சன் அவர்கள் சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரியொருவராவார். அவ்வாறே அப்பல்கலைக்கழகத்திலேயே வன விஞ்ஞானம் மற்றும் சூழல் முகாமைத்துவம் பற்றிய முதுமாணிப் பட்டத்தையும், அதற்கு மேலதிகமாக வனவிலங்னு முகாமைத்துவம் பற்றியும் இந்தியாவில் தெஹராதுன் வனவிலங்கு நிறுவனத்தில் சூழல் நிர்வாகம் பற்றிய முதுமாணி டிப்ளோமாவையும் நிறைவேற்றியுள்ளார்.

1996 ஆம் ஆண்டில் மே மாதத்திலிருந்து 1997 ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் விலங்கு விஞ்ஞான திணைக்களத்தில் (Demonstrator) ஆக கடமையாற்றிய அவர் வனவிலங்கிற்கு உரிய உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சிப் பாடநெறிகளையும் பட்டறைகள் பலவற்றுக்கும் வெற்றுகரமாக பங்குபற்றியுள்ளார். அவ்வாறே அவரினால் பல்வேறு பிரிவுகளின் கீழ் துறைக்குரிய ஆய்வுப் பத்திரங்கள் சுமார் முப்பத்து இரண்டினை வெளியிட்டுள்ளதோடு கீழே அது பற்றிக் காட்டப்பட்டுள்ளது. அவரினால் வனவிலங்குகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குரிய பத்திரிகைகளுக்காக கட்டுரைகள் உள்ள ஆக்கங்கள் பலவாகும்.

திருமதி சாந்தனீ வில்சன் அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் இலங்கை சுற்றுலா கல்வி நிறுவனத்திலும் வெளிவாரி விரிவுரையாளரொருவராகவும் தமது சேவையை ஆற்றினார். அவ்வாறே தமது உற்பத்தித்திறன் அலுவலகத்தில் நடுவர் குழுமத்திலும் சேவையாற்றியதோடு ஜேர்மன் அபிவிருத்திக் கூட்டுத்தாபன்தின் கருத்திட்டத்தில் செயற்பாட்டு அதிகாரியொருவராக 2018 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சேவையாற்றுகிறார்.

திருமதி சாந்தனீ வில்சன் அவர்களினால் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் நீர்த்தேக்க புனர்நிர்மாணங்களுக்காக வழிகாட்டலொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

அவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரொருவரான நிஷாந்த மெண்டிஸ் அவர்களைத் திருமணம் செய்துள்ளார். அவர்களின் மகள் ஹோமாகமை மஹிந்த வித்தியாலயத்தில் உயர் தரம் செய்து கொண்டிருக்கின்றார்.

I.  Fire Management Protected area in Sri Lanka, Dharmathilaka P.M, Wilson A.S.C. Scientific Dimentions of Forest Fires, India 2000

II.  Socio economic impact on mangrove Resource uses in Muthurajawela marsh and Negombo lagoon Area in Sri Lanka, Ranasinghe, D.M.S.H. K. Wilson C., International Conference on Conservation of Wetlands, 2003

III.  Demand and other socio – economic impacts on mangrove resources use in Muthurajawela and Negombo lagoon. 2002

IV.  Ecosystem management and community development plan for Anawilundawa Wildlife Sanctuary and Ramsar wetland. 2004

V.  An assessment of water resources dependency of surrounding community and impacts of aquatic weeds of water bodies in Anawilundawa Wildlife Sanctuary and Ramsar Wetlands in Sri Lanka. 2006

VI. An assessment of impact of aquatic needs control methods on water resources dependency in Anawilundawa Ramsar Wetland. S.Chandani Wilson SLAFAR 14th annually scientific sessions 2008

VII. An assessment of impacts of aquatic weeds and weed control methods on water resource dependency in Anawilundawa Ramsar wetland, Sri Lanka association for fishers and aquatic resources (SLAFAR) 2008

VIII.  An analysis of water quality and availability in some selected villu eco systems in WilapattuNational Park, Sri Lanka, Wild Lanka International Journal. 2014

IX. The fauna and flora diversity of some selected villus in Wilpattu National Park, Wild Lanka International Journal. 2015

X.  Fluctuation of avian diversity in some selected villus in Wilpattu National Park, Sri Lanka, Winc, WUSL, Wayamba International Conference, Wayamba University of Sri Lanka. 2016

XI.  An analysis of Intensity of human elephant conflict based on human and elephant deaths and compensations for property damages in Sri Lanka. Wild property damages in Sri Lanka. Wild Lanka International Journal.2016

XII. Rapid assessment of flora, butterfly, dragonfly and avifauna to determine the baseline in Mailawewa reservoir of Wilpattu National Park, Sri Lanka. Proceeding of the Annual Session of Department of Wildlife Conservation, 2017, Colombo. Wild Lanka International Symposium. 2017

XIII.  A study on elephant distribution pattern with respect to different habitat types at Maduruoya National Park in Sri Lanka Wild Lanka International Sysposium.2018

XIV.   Body condition of Elephasmaximus in Maduruoya National Park, Sri Lanka. WinC WUSL, WayambaUndiversity of Sri Lanka. 2019

XV.    A study on elephant distribution, ranging pattern with respect to different habitat type at Maduruoya National Park in Sri Lanka, in a view of mitigating human elephant conflict, Wild Lanka International Journal. 2019

XVI.   An Investigation on density of recorded human elephant conflict, measured taken to mitigate and the body condition of elephant observed within Maduruoya National Park Wild Lanka International Journal. 2019

XVII.  Living and farming in the vicinity of Maduruoya National Park with elephants: solutions need thinking beyond fences, Winc WUCL, Wayamba university international Reseacch congress. 2020

XVIII. Elephant movements around Maduruoya National Park; importance of elephant corridors. Winc WUCL, Wayamba university international Research congress.2021

XIX.   Ecotourism for wildlife management, 2021, the journal of wildlife, Sri Lanka.

XX.    Potential for wild elephant –based ecotourism practices in and around Maduruoya National Park,2022, International journal of Tourism economics and applied research

XXI.   Distribution of wild Elephants and Human-Elephant conflict in Maduruoyaarea,Sri Lanka , 2022, Wayamba university international Research congress.

XXII.  Distribution of wild elephants and human elephant conflicts in and around Maduruoyaaraa, Sri Lanka, 2023.Wildanka international journal

XXIII. The elephant migration pattern and how it affectstoMaduruoya area, 2023, Wayambarinternational research congress

ஆனவிலுந்தாவை சரணாலயம்

1997 ஜுன் 11 ஆம் திகதி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் சரணாலயமொன்றாக பிரகடனப்படுத்தப்பட்ட ஆனவிலுந்தாவ ஈரநிலம் 2001 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி சர்வதேச ரீதியாக முக்கியமாக) விசேடமாகஇடமாற்றப்பட்ட நீர்ப் பறவைகளுக்காக ரம்சா ஈரநிலமொன்றாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள உயிர்ப் பல்வகைத்தன்மையின் செல்வம், புலம்பெயர் பறவைகளின் இரை நிலமொன்றாகச் செயற்படுதல் மற்றும் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் இதற்கான காரணமாகியது.

சரணாலயத்தின் எல்லையாக வடக்கே பத்துலு ஓயா உடப்பப்புவ பெருந்தெருவும், கிழக்கில் புத்தளம்- சிலாபம் புகையிரதப் பாதையும், தெற்யேக செங்கல் ஓயா மற்றும் மேற்கே பாரு கால்வாய் (ஓலந்த கால்வாயும்) ஆகும். இதன் அளவு சுமார் 1397 ஹெக்டயார் ஆகும்.

கி.பி. சுமார் 12 ஆம் நூற்றாண்டில் மகா பராக்கிரமபாகு மன்னனினால் எல்லன்கா நீர்ப்பாசன முறையில் தயாரிக்கப்பட்ட புராதன வாவி அமைப்பொன்றைக் கொண்டதாகும். இங்கு ஆனவிலுந்தாவை, பிங்கட்டடிய, சுருவில, மய்யாவ, மரதன் சோலை, வெல்லாவல மற்றும் இரக்காவில எனும் மேல் ஏரி என்று அழைக்கப்படும் ஆழமற்ற பிரதான வாவிகள் 07 இனைக் கொண்டதாகும்.

மகா சமுத்திரத்தினைனச் சுற்றியுள்ள கடற்கரையும் ஈரநில தாவர சமூகத்தினாலும் நன்னீர் நீர்ப்பாசன தொகுதியினாலும் அமையப் பெற்றுள்ள ஆனவிலுந்தாவை சரணாலயம் இலங்கையில் அமைந்துள்ள அற்புதமான சூழல் அமைப்பொன்றாகும். பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு போன்றே  வெளிநாட்டுப் பறவைகளுக்கும் வாழிடத்தை அளிக்கின்ற இச்சரணாலயம் நீரில் வாழும் விலங்குகளுக்குப் போன்றே நீர்த் தாவரங்களுக்கும் மிகச் சிறந்த இருப்பிடமாகும்.

அழகான பறவைகள் சுவர்க்கமொன்றான இச்சரணாலயத்தில் உள்நாட்டு பறவையினங்கள் 131 போன்றே புலம்பெயர் பறவையினங்கள் சுமார் 37 உம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வற்புதமான சூழல் அமைப்பு, ஆனவிலுந்தாவை நூற்றுக்கணக்கான பறவையினங்களுக்கு சாதகமான கூடுகளையும் இனப்பெருக்க இடமொன்றாகவும் அமைந்துள்ளது. பெரிய நீர்க்காகம், நத்தை குத்தி நாரை போன்ற பறவையினங்களைக் கொண்ட பாரிய இனப்பெருக்க குடியிருப்பாகும். பாலூட்டி இனங்கள் 20 உம், ஈரூடக வாழினங்கள் 11 உம், ஊர்வன இனங்கள் 34 உம், வண்ணத்துப்பூச்சியினங்கள் சுமார் 74 உம், மீனினங்கள் 47 உம் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான இங்கே உரித்தானதும் தங்குகின்ற பறவைகளை வருடம் முழுவதும் அவதானிக்க முடியும் என்பதோடு புலம்பெயர் பறவைகளை மிகவும் நன்றாக ஒக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கிடையில் கண்டு கொள்ள முடியும். ஆனவிலுந்தாவை பறவைகள் சரணாலயம், பறவைகளைக் கண்காணிப்பவர்கள் மற்றும் இயற்கைக்கு நேசமாக உள்ளவர்களிடையே மிகப் பிரசித்தமான இடமொன்றாகும். அவர்கள் இங்கு வருவது அரிதான பறவைகளைப் பார்வையிடுவதற்கும் புகைப்படக் கருமங்களில் ஈடுபடுவதற்குமேயாகும்.

ஆனவிலுந்தாவையில் கண்டுகொள்ள முடியுமான பறவைகளுள் சிலவை.

பெரிய நீர்க்காகம்
சாம்பல் கூழைக்கடா
சிறிய சீழ்க்கைச்சிரவி
சின்ன நீர்க்காகம்
கார்வெண் மீன்கொத்தி
பாம்புத்தாரா
செந்நாரை
சிறு முக்குளிப்பான்

அறுபதாம் நூற்றாண்டில் உலகில் ஈரநிலங்களுக்கு இருண்ட தசாப்தமொன்று உதயமானதால் உலகில் நிலவிய பல ஈரநிலங்கள் நிலங்களாக மாறுவதற்கும் அபிவிருத்தியடைவதற்கும் உள்ளாகின. பெரும்பாலான ஈரநிலங்கள், பயிர்ச்செய்கை நிலங்களாக மாறின. சிலவை குடியிருப்புக்களாகவோ அல்லது நகரங்களாக மாறின. இக்காரணங்களினால் பெரும்பாலான்ன நாடுகள் சூழல் மாற்றங்களை எதிர்நோக்கின. வெள்ளம் பெருக்கெடுத்தல், நிலச்சரிவு, சூழல் வெப்பநிலை உயர்வடைந்து செல்லல் போன்ற பெரும்பாலான சூழல் மாற்றங்கள் காரணமாக மக்களுக்கு பல்வேறுபட்ட சிரமங்களைச் சந்திக்க நேரிட்டது. இதனால் ஈரநிலங்களை மீட்பதனால் ஏற்படுகின்ற எதிர்மறையான விளைவுகள் பற்றிய உலக மக்களின் கவனத்தை அதிகளவில் செலுத்தச் செய்வதற்கான தேவை ஏற்பட்டது. அதன் பெறுபேறாக 1971 இல் ஈராக்கில் ரம்சா நகரத்தில் ஒன்றுகூடிய நாடுகள் 136 இன் இணைப்பினால் உலகில் ஈரநில பாதுகாப்புக்கான  மாநாடொன்றுக்கு வந்தன.  அது ஈரநில பாதுகாப்பு பற்றிய ரம்சா மாநாடாகும். இம்மாநாட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு இலங்கையும் 1990 ஒக்டோபர் 15 ஆம் திகதி ரம்சா மாநாட்டில் பிரதிநிதித்துவ நாடொன்றாக ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் பெறுபேறாக இலங்கையில் அமைந்துள்ள ஈரநில சூழற் தொகுதிகள் 6 இதுவரை சர்வதேச ரம்சா ஈரநிலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

  • பூந்தல தேசிய பூங்கா –           06.15
  • மாது கங்கை சரணாலயம் –           08.03
  • ஆனவிலுந்தாவை தேசிய பூங்கா –           12.11
  • வான்கலைய் சரணாலயம் –           07.12
  • குமண தேசிய பூங்கா –           10.29
  • வில்பத்து தேசிய பூங்கா –           01.28

இங்கு காணப்படுகின்ற விசேடமான சூழல் முக்கியத்துவம் காரணமாக ஆனவிலுந்தாவை சரணாலயம் 2001 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி சர்வதேச ரம்சா ஈரநிலமொன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது. புத்தளம் மாவட்டத்தில் ஆரச்சிகட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குரிய 1397 ஹெக்டயாருடைய இச்சரணாலயத்தில் கைவிடப்பட்ட இறால் கூடுகள் பலவையும் காணப்படுகின்றன. அவ்வாறு கைவிடப்பட்ட இறால் கூடுகளுக்குள் மீண்டும் சதுப்புநில தாவரங்களை மீள்நடுவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி பாரு கால்வாயை அண்டி கைவிடப்பட்டிருந்த சுமார் 4 ஹெக்டயாரான அரை நிலப்பகுதியில் உட்புற வடிகாலமைப்பை முறைப்படுத்தி சதுப்புநில தாவரங்களை மீளுருவாக்குவதற்குப் பொருத்தமான சூழல் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டது.

மேலும் ஆனவிலுந்தாவை சரணாலயத்தினுள் தாவர இனங்கள் 264 இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுள் 110 மர வகைகளும், 54 பற்றைத் தாவரங்களும், 68 செடி வகைகளும், 30 கொடி வகைகளும் நாம் தாவர வகைகள் 2 உம் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்காலத்தில் மீனவர்களினால் மீன் பிடித்தலுக்காக பாரு கால்வாயைப் பயன்படுத்திக் கொள்வதோடு, கால்வாயின் கரை இரு புறங்களிலும் சதுப்புநில தாவர சமூகத்தினால் பாதுகாப்பு அரணாகச்  செயற்படுகின்றது. இங்கு தாவரங்களுள்கண்டல், வெண் கண்டல், அலையாத்தி, தில்லை, தீப்பரத்தை, கண்டலங்காய், காக்கண்டல்,  பன்றிக்குத்தி,நிலாட்,சொன் முந்திரி மற்றும் நிபா பழம்போன்ற சதுப்பு நிலங்களைச் சார்ந்த தாவர இனங்கள் 13 இனையும் இங்கு கண்டு கொள்ள முடியும். அவ்வாறே தற்காலத்தில் மீனவர்களினால் ஆனவிலுந்தாவை சரணாலய நிலத்தின்  சூழல் நிலைமைகளுக்குப் பொருந்துகின்ற சதுப்பு நில இனங்களானகாக்கண்டல், சிகப்பு காக்கண்டல் மற்றும்நரிக்கண்டல்தாவரங்களை அந்நிலத்தில் மீண்டும் நடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கண்டல்

விஞ்ஞான செயன்முறையின்படி சிறந்த சூழல் முகாமைத்துவத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற இச்சதுப்புநில தாவர மீளுருவாக்கத்தின் மூலம் ஆனவிலுந்தாவை சரணாலயத்தின் சூழல் விஞ்ஞான சூழல், பொருளாதார, சமூக போன்ற கல்வியின் மதிப்பு எதிர்காலத்தில் விலை மதிக்க முடியாதளவு உயர்ந்து செல்லும். வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் வயம்ப பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படுகின்ற சதுப்புநில தாவர மீளுருவாக்கம், இறால் கூடுகளில் இருந்த எஞ்சிய நிலப் பகுதியிலும் விரைவாகவெ மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக அரசு சாராத நிறுவனங்கள் மற்றும் வியாபார சமூகத்தினதும் பங்கேற்பினைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. பூமியில் வாழ்கின்ற அனைத்து உயிர்களினதும் நிலையான இருப்பிற்காக இணையற்ற பணியொன்றினை அமைதியாக நிறைவேற்றுகின்ற சதுப்புநில சூழற் தொகுதி உட்பட ஈர நில சூழலைப் பாதுகாப்பது நாளைய நாளில் சுபீட்சமான இலங்கைக்கான இன்றைய தினத்தில் நாம் செய்கின்ற பெரும் பணியொன்றாகும்

ஆனவிலுந்தாவை சரணாலயம் 2001 ஆகஸ்ட் மாதத்தில் ரம்சா மாநாட்டிற்கு உரிய 1078 ஆவது ரம்சா ஈரநிலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. எண்பதாம் நூற்றாண்டுகளில் ஆனவிலுந்தாவை சரணாலயத்தை அண்டிய நிலப் பிரதேசம் பெரியளவிலான இறால் செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், தொண்ணூறாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் பரவிச் சென்ற நோயொன்றின் காரணமாக அப்பிரதேசத்தில் இறால் செய்கை கைவிடப்பட்டது. இன்று அவ்வரை நிலப்பகுதியில் ஆனவிலுந்தாவை சரணாலயத்துக்குரிய அரை நிலமாகப் பயன்பாட்டுகு எடுத்து சதுப்புநில தாவரங்களை மீளுருவாக்கும் கருத்திட்டமொன்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனவிலுந்தாவை சரணாலயத்தில் உவர் நீர் ஈரநில சூழற் தொகுதி, சதுப்புநில தாவரப் பரம்பலுக்கு சிறந்த இடமொன்றாகும். கடலோர அரிப்பினைத் தடுத்தல், காற்றுக் கட்டுப்பாடு, மண் பாதுகாப்பு, இறால்கள் பாறை இறால்கள் போன்ற நீர்வாழ் உயிரினங்களினதும் மீனினங்களினதும் இனப்பெருக்க நிலமொன்றாகச் செயற்படுதல், போசணைப்  பொருட்களின் உற்பத்தி மற்றும் தக்க வைத்துக் கொள்ளல் மாத்திரமின்றி சதுப்புநில தாவர சமூகமும் கடற் புற்கள் மற்றும் பவளப் பாறை சூழற் தொகுதியுடன் தற்போதுள்ள பரஸ்பர உறவு மற்றும் சூழல் சமநிலைத் தன்மையைத் தக்க வைத்துக் கொள்ளல் போன்ற சதுப்புநிலங்களினால் இடம்பெறும் சேவையை மனிதன் உள்ளிட்ட உயிரினச் சமூகத்தின் இருப்புக்குப் பெரிதும் பயன்படுகின்றன. ஆனவிலுந்தாவை சதுப்புநில கருத்திட்டத்துக்கு பல்கலைக்கழகங்களைப் போன்றே தனியார் நிறுவனங்களின் மூலமும் அனுசரனையை வழங்கி தற்போது சுமார் 40 ஹெக்டயார் அளவிலான அப்பிரதேசத்துக்குப் பொருத்தமான இயற்கை ஈரநிலத்தை வெற்றிகரமாக நடப்பட்டுள்ளதோடு அவ்வளவில் 95%வை வெற்றிகரமாக முளைத்துள்ளமை சிறந்த நிலைமையாகும். அவ்வாறே ஈரநிலங்களை அண்டிய ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றுதல் போன்ற பல கருத்திட்டங்களும் பூந்தல தேசிய பூங்கா உட்பட ஒதுக்கப் பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இவ்வாறு இது போன்ற கருத்திட்டங்களை ஆரம்பிப்பதனூடாக நாட்டின் நுரையீரல் வரி சதுப்பு நிலங்களை மீண்டும் செயற்படுத்தப்பட்டு மனிதன் உட்பட உயிரினங்களுக்கு வாழ்வை அளிப்பதற்கும், புத்திசாலித்தனமாக ஈரநிலங்களைப் பயன்படுத்தி மனிதனின் எதிர்கால இருப்பிற்காக மிகச் சிறந்த சூழலொன்றைக் கட்டியெழுப்புவதற்கும் முடியுமாகின்றது.

சதுப்புநில தாவரங்கள்

ஆனவிலுந்தவ சரணாலயம்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Scientific Name

මහ දියකාවා

பெரிய நீர்க்காகம்

Great cormorant

Phalacrocorax carbo

විවිර තුඩුවා

 நத்தை குத்தி

Asian openbillstork

Anastomus oscitans

තිත් හොට පැස්තුඩුවා

சாம்பல் கூழைக்கடா

Spot-billed pelikan

Pelecanus philippensis

හීන් තඹ සේරුවා

சிறிய சீழ்க்கைச்சிரவி

Lesser whistling duck

Dendrocygna javanica

පුංචි දියකාවා

சின்ன நீர்க்காகம்

Little cormorant

Phalacrocorax niger

ගෝමර පිළිහුඩුවා

கார்வெண் மீன்கொத்தி

Pied kingfisher

Ceryle rudis

අභිකාවා

பாம்புத்தாரா

Darter

Anhinga melanogaster

කරවැල් කොකා

செந்நாரை

Purple heron

Ardea purpurea

පුංචි ගෙඹිතුරුවා

சிறு முக்குளிப்பான்

Little grebe

Tachybaptus ruficollis

 

ஆனவிலுந்தாவ சரணாலயம்  தொடர்பான விளக்கத்தில் காணப்படும் தாவரங்களின்  பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific Name

මහ කඩොල්

 கண்டல்

Red mangrove / Asiatic mangrove

Rhizphora mucronata

උල් මණ්ඩ

 வெண் கண்டல்

Grey mangrove / White mangrove

Avicennia marina

මොට මණ්ඩ

 அலையாத்தி

Indian Mangrove

Avicennia officinalis

මුට්ටි කඩොල්

 கண்டலங்காய்

Cannonball mangrove

Xylocarpus granatum

තෙලකීරීය

 தில்லை

Blinding tree / Blind-your-eye mangrove

Excoecaria agallocha

ගිං පොල්

 நிபா பழம்

Mangrove palm

Nypa fruticans

ඇටුන

 சொன் முந்திரி

Glass tree management

Heritierrali

බෙරිය

 தீப்பரத்தை

White-flowered black mangrove

Luminitzera recemosa

මල් කඩොල්

 காக்கண்டல்

Upriver orange mangrove

Bruguiera sexangula

හීන් මල් කඩොල්

 சிகப்பு  காக்கண்டல்

 Flowering mangrove

Bruguiera cylindrica

ඇවරි කඩොල් / හීන් කඩොල්

 நரிக் கண்டல்

Black mangrove

Aegiceras corniculatum

කළු කඩොල්

 நிலாட்

Yamstick mangrove

Scyphiphora hydrophyllacea

පුං කණ්ඩ / රතු ගස්

 பன்றிக்குத்தி

 Indian Mangrove

 Ceriops Sps

குப்பாளர்   -தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன   வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

மஹேக்ஷா சதுராணி பெரேரா, அபிவிருத்தி  உத்தியோகத்தர்,வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (வனஜீ.வன. வள. பா. அ)

இணய வடிவமப்பு என்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ) சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள்ரோஹித குணவர்தன, வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்