简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 35 – மஹகனதராவ சரணாலயம்

Content Image

அக்குடும்பத்தில் எஞ்சியது ஒரு பிள்ளை மாத்திரமே

நான் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு 1998 நவம்பர் மாத ஆரம்பத்தில் வனவிலங்கு வட்டார பாதுகாவலொருவராகத் தொழிலில் இணைந்தேன். அப்போது எனக்கு வயது 20 வருடங்களும் ஒரு மாதமுமாகும். முதலாவது நான் அனுராதபுர வட்டார வனத்தில் தொழிலில் இணைந்தேன். அனுராதபுர கச்சேரியில் அமைந்திருந்தது. நான் புதிய வட்டார பாதுகாவலொருவராக அங்கு பொறுப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட வட்டார பாதுகாவலர் டப். ஏ. சரத் விக்கிரமசிங்ஹ அவர்களுடன் முதலாவதாக கடமையை நிறைவேற்றினேன். என்றைக்கு எனதுசேவைக் காலம் 26 வருடங்களையும் அண்மித்துள்ளது.

எனது வாழ்க்கையில் எனக்கு இன்றும் நினைவிலிருப்பது யானை மனித மோதலினால் இடம்பெற்ற ஒரு நிகழ்வு பற்றியாகும். இது எனது முதல் நியமனம் பெற்று சுமார் ஒரு மாத காலத்துக்குள்ளே, பெற்ற அனுபவமொன்றாகும். எனது வாழ்க்கையில் மீண்டும் நான் அவ்வாறான மிக மோசமான நிகழ்வொன்றை  அனுபவிக்கவில்லை. அதாவது யானை மனித மோதலின் காரணமாக ஒரு நாளைக்கு ஓரிடத்தில் ஓர் ஊரில் ஐவர் இறந்த நிகழ்வொன்றாகும். எனது நினைவின்படி அது 1998 டிசம்பரிலாகும். இவ்வாறு கூறப்படும் தினத்தில்  சிரேஷ்ட வட்டார பணிப்பாளர் அவர்கள், எனது ஆசிரயர் அன்று சுகவீன நிலைமை காரணமாக விடுமுறையில் இருந்தார். அவர் கஹடகஸ்திஹியிலயில் குடியிருந்தார். அனுராதபுரத்திலிருந்து மிகவும் தூரமானது. அக்காலத்தில் அலுவலகங்களுக்கு மாத்திரமே தொலைபேசி இருந்தது. வரையறுக்கப்பட்ட அளவிலேயே கையடக்கத் தொலைபேசிகள் இருந்தன. இக்கூறும் தினத்தில் நான் அவ்விடத்துக்குப் பொறுப்பாக இருந்தேன். புதிதாக இருந்தாலும் பதவியில் பொறுப்புக்கள் நிறையக் காணப்பட்டன. எமது வட்டாரம் வனவிலங்கு  வயம்ப வலயத்துக்குப் பொறுப்பாக இருந்தது. இவ்வலயத்துக்குப் பொறுப்பாகக் கடமையாற்றியவர் சிறந்த உதவிப் பணிப்பாளரொருவரான ஜே. எம். ரூபசிங்ஹ அவர்களாவார். இக்கூறும் தினத்தன்று அவர் எமது வட்டாரத்தை  அழைத்து  சில பேருடன் நாச்சாதுவவில் யானை தாக்கி ஒருவர் இறந்து விட்டார் என செல்வதற்கு ஆயத்தமாகுமாறு கூறினார்.

அப்போது அக்காலத்தில் நாம் கடமையொன்றுக்குச் செல்லும் போது மூன்று நான்கு பேர் செல்வோம். பணிக்குழுவினருக்கு ஆயத்தமாகுமாறு நான் கூறினேன். எனது நினைவின்படி சாரதி ஆரியரத்னவும், வட்டார உதவியாளர் ஏ.எம். செனவிரத்ன அவர்களுடன் வனவிலங்கு காவலரான டீ. ஆர். நந்தசேன, ரஞ்சித் தர்மபந்து, லக்‌ஷ்மன் அட்லுகமவும் அங்கு சென்றோம். எமக்கு வாகனமாக இருந்தது31-1064 உடைய சிறிய ஜீப் ஒன்றாகும். அக்காலத்தில் எல். டீ. டீ. ஈ. *பிரச்சினையினால் விமான நிலைய வீதி தடை செய்யப்பட்டிருந்தது. அனுராதபுர வீதியிலிருந்து கீரக்குலம் ஊடாக நாம் நாச்சதுவவிற்குச் சென்றோம். அதற்கு அண்மையிலேயேதான் நாச்சதுவ நகரம் அமைந்திருந்தது. அங்கு அதிகமாக முஸ்லிம் மக்களே இருந்தனர். அங்கிருந்து திரும்பி  ​நாச்சதுவ வாவி முன்னால் பிரதேசமேதான் குறிப்பிடப்பட்ட இடமாகும். நாம் நகரத்துக்கு வந்து, இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெற்றதா என விசாரித்தோம்.  சுமார் காலை 10 மணி போல் இருக்கும் என நான் நினைக்கின்றேன். எவரும் அவ்விடத்தை அறிந்திருக்கவில்லை.நாச்சதுவ்விற்கு அண்மையில் ஒன்றரை  இரண்டு கிலோமீற்றர் செல்லும் போது இடத்தைத் தேடிக் கொண்டு செல்ல முடிந்தது.  நாம் நாச்சதுவ நகரத்திலிருந்து கிராமத்துக்கு வந்தோம். கிராமம் அமைந்திருப்பது வாவிக்கு முன்னேயாகும். தூரத்தில் நீர்த்தேக்கமொன்று தெரிகின்றது. நாம் அவ்விடத்துக்குச் செல்லும் போது சுமார் 30 மற்றும் 40 மனிதர்கள்  நீர்த்தேக்கத்துக்கு ஓரத்தில் சுற்றியிருந்தனர். நீர்த்தேக்கத்துக்கு ஓரத்தில் சிறிய மண்ணாலான இரண்டு வீடுகள் காணப்பட்டன. எனினும் ஒன்று முழுமையாக உடைந்திருந்தது.

அந்த வீடு ஒரு மண்டபம் போன்று இருந்தது. அவ்வீடுகள் இரண்டுக்கும் இடையிலான இடைவெளி சுமார முப்பது அடிகள் போன்ற அளவாகும். உடைந்த வீட்ட்டின் கூரை உடைந்து வீழ்ந்து, மண் சுவர்கள் புரண்டிருந்தன. உயிர்ச் சேதம் நிகழ்ந்திருந்த வீடு அதுவாகும். ஒரே நாளில் அம்மாவும் மகளும் மகளின் கணவரும் இளைய மகனும் நான்கு பேராகும். மகள் அப்போது சுமார் ஒன்பது மாத கர்ப்பிணியொருவராவார். அதனாலேயே நான ஐந்து உயிர்கள் எனக் கூறினேன். வயதுகளை எடுத்துக் கொண்டால் அம்மா சுமார் நாற்பது வயதுடையவர் போன்ற தோற்றமுடையவராக இருந்தார். மகளும் இருபது போன்றிருக்கும். அவளுடைய கணவரும் அவருடைய வயது இருபது போன்றிருக்கும், இறந்த பிள்ளையின் வயது எட்டு வருடங்கள் போன்றிருக்கும். எனினும் அக்குடும்பத்தில் ஒரு குழந்தை எஞ்சியிருந்தது. பின்னர் தேடிப் பார்க்கும் போது அவ்வீடுகள் இரண்டினதும் பிள்ளைகள் காலையில் ஒன்றாக விளையாடி விட்டு மாலையில் நித்திரை செய்யும் போது அப்பிள்ளை மாத்திரம் நித்திரை செய்தது. மற்றைய பிள்ளை வீடு சென்றிருந்தது. அதனாலேயே உயிர் தப்பியது. அடுத்த வீட்டு மனிதர்கள் குறிப்பிடும் வகையில் அதிகாலையிலேயே யானையொன்று வந்து இவ்வீட்டை உடபைபதைக் கேட்டு, பார்த்து விரட்டியிருந்தனர். விரட்டினாலும் அது சென்றிருக்கவில்லை. ஒரேயடியாக யானை சுவர்களை வீழ்த்திக் கொண்டு வீட்டிற்குள்ளே சென்றது. சுவர்களையும் வீழ்த்திளும் யானை வீட்டுக்குள்ளே நடமாடியதனாலும் அனைவரும் இறந்திருந்தனர். நித்திரை செய்திருந்தவாறே அனைவரும் யானையின் மிதிக்கு உள்ளாகி இறந்திருந்தனர்.

நானும் மக்களுடனேயே அங்கு நீண்ட நேரம் இருந்தேன். அவசர மரண விசாரணையினர் மற்றும் பொலிஸார் வரும் போது மாலை இரண்டு முப்பது போல் இருக்கும். சிறிது நேரத்தில் அவ்விசாரணை நடவடிக்கைகளை செய்து விட்டு உரிய இறப்புக்களை நாச்சதுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். எனினும் அன்றைய நாள் எமக்கு அவ்விடத்திலிருந்து நகர முடியாது. ஐயா யாவரும் செல்ல முடியாது. இன்று எமது வீடுகளில் மிகவும் பயமாக உள்ளது. ஏனெனில் ஒரே இடத்தில் நால்வர் இறந்தமையினால் ஆகும். அதனால் கிராமத்தில் பாரியளவுஎதிர்ப்பொன்றும் கோரிக்கையும் வந்தது.

இவ்யானையின் கழுத்தில் மாலையொன்று இருந்ததாக அமுத்த வீட்டு நபர் கண்டிருந்தார். இன்றைக்கு சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் யானைகளுக்கு ரேடியோ கொலர் இடப்பட்டது. அது ரேடியோ கொலர் இடப்பட்ட யானையொன்று இப்பகுதியில் இருப்பதாக பணிக்குழுவினர் கூறினர். அடிச் சுவடுகளினால் சுமார் பத்து அடிகளுடைய பெரிய யானையொன்று. எவ்வாறாயினும் இன்றைய இரவைப் பார்க்க வேண்டும் என்று     மக்கள் எமக்கு அவ்விடத்திலிருந்து செல்ல இடமளிக்கவில்லை. அனுராதபுரத்திலிருந்து நாச்சதுவவிற்கு வரும் போது நாம் பகல் உணவைச் சாப்பிட்டிருக்கவுமில்லை. நாம் எப்படியாவது அங்கிருந்து மீண்டும் தபால் அலுவலகத்துக்குச் சென்று  இவச்வாறு ஐவர் இறந்துள்ளனர் எமக்கு கிராமத்தவர்கள் வர விடுவதில்லை என்ற செய்தியை உதவிப் பணிப்பாளரொருவரின் அலுவலகத்துக்கு வழங்கினோம். அதன் பின்னர் நடமாடும் அலகொன்று என்ற வகையில் அப்பகுதியிலிருந்து செல்லுமாறு எமக்கு செய்தி வந்தது.

நாம் கொலர் மாலை அணிவிக்கப்பட்ட யானையைப் பற்றி தேட ஆரம்பித்தோம். அக்காலத்தில் கேட்கும் கருவிகள் (இயர் போன்) இரண்டுடன் என்டனாவொன்று வழங்கப்பட்டிருந்தது. சாதாரணமாக யானை இருப்பதாயின் எமக்கு அக்கேட்கும் கருவிகளை இட்டு கையினால் என்டனாவைத் தூக்கி யானை இருக்கும் பகுதிக்கு சூழற்றிப் பார்த்தால் சிறிய டிக் டிக் எனும் சத்தமொன்று வரும்.  யானை சிறிது அண்மையில் இருந்தால் அதன் ஓசை அதிகரிக்கும். அண்மைப் பகுதியில் இருந்தால் எம்மால் தேடிக் கொள்ள முடியும். நாம் சைக்கிளில் சென்று ஒரு மணித்தியாலம் இரண்டு மணித்தியாலங்கள் செல்லும் போது யானை இருக்கும் பகுதியை நாம் அதனால் கவனித்தோம். அண்மையிலா, இங்கேயா இருப்பதொனப் பார்த்தோம். பார்த்தால் சிறிது வாவியின் அடுத்த பக்கத்தில் இருப்பதற்கான அடையாளமாக டிக் டிக் ஒலிக்கும் சத்தமொன்றும் புரிந்தது. யானை அண்மையிலேயே இருந்தது.

அப்போது இப்பக்கத்தில் இரந்த கிராமங்களான  நாச்சதுவ்விற்கு அண்மையில் துருவில, கீர்த்திகுளம், நெலுபேவ, குடாநெலுபேவ, குலுவில, நெல்லிக்குளம், ஓயா எனும் பிரதேசங்கள் இச்சம்பவத்தினால் பயத்துக்குள்ளாகியிருந்தன.இனி எனடனாவைப் பிடித்து இப்பக்கில் யானை இருப்பதெனக் கூறினாலும் மக்களுக்கு அது பயனற்றது. எந்நேரத்திலாவது தமது வீடுகளுக்கு வந்து தமது உரியவர்களையும் கொன்று விடும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். நான்கு பேர்களைக் கொன்றதனால் இவ்யானை எல்லா இடங்களிலும் மக்களை கொள்றுக் கொண்டே செல்கின்றதென அவர்கள் எண்ணினர். எனினும் யானை தூரத்தில் இருப்பதென எமக்கு விளங்கிற்று. டீ. ஆர். நந்தசேன அப்போது அவர் யானைகளைப் பிடிக்கும் குழுவில் இருந்தார். அதனால் அவருக்குப் பழக்கமாக இருந்தது. இவ்யானையைத் தேடும் போதும் அவர் அடிக்கடி யானை எங்கே உள்ளது எனப் பார்த்தார். எனினும் தூரத்தைப் பற்றி எமக்கு சரியான முடிவொன்றை எடுக்க முடியவில்லை.

எமது நபர்களுக்கும் இது சிறிது பயமான நாளொன்றாகும். யானையொன்றினால் ஐவர் இறக்க நேரிட்டமை ஆகும். நாம் இரண்டு துப்பாக்கிகளையே எடுத்துச் சென்றிருந்தோம். யானை வெடிகள் சுமார் இருபது ஆகும்.  அதனால் நான் பணிக்குழுவினரை அழைத்து என்ன செய்வதென வினவினேன். அதன் பின்னர் இரவு முழுவதும் குறிப்பிடப்பட்ட கிராமங்களில் பயணம் செய்வோம் என மூடிவு செய்தோம். யானை இருக்கின்றதா என அடிக்கடி என்டனாவை இடத்துக்கிடம் பிடித்துப் பார்த்தோம். மலைகளுக்கு மறைந்திருந்தால் சமிக்ஞை வராது. அதனால் நாம் அதனை இரவு நேரத்தில் என்டனாவைப் பிடிப்பதனை நிறுத்தினோம். அப்போது எமது வாகனத்தில் எரிபொருள் இருக்கவில்லை. அதன் பின்னர் நான் நாச்சதுவ நகரத்துக்கு வந்து சிறு கடையொன்றினால் சிறிது பணத்தை வழங்கி எரிபொருள் கொஞ்சத்தை நிரப்பிக் கொண்டோம். மரணத்தைப் பற்றி தேடிப் பார்த்து மரண பரிசோதனை நடவடிக்கைகளை நிறைவு செய்து செய்யப்படிருக்கவில்லை. அதிகாலை ஆகும் போதுதான் அந்நிகழ்வு இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் எட்டு- பத்து கிலோமீற்றர் தூரத்தில் கீரக்குலத்துக்கு உறவினரொருவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்தாக கூறப்படிருந்தது.

ஐயா அப்பக்கத்தையும் சிறிது பாருங்கள் அப்பக்கத்திலும்  அவ்யானை செல்கின்றதென அங்கு பொலிஸார் கூறினர். இரவு நேரத்தில் நான் கீரக்குலம் பக்கத்தில் பல சந்தர்ப்பங்களில் சென்றேன். நாம் அப்போது ஆகும் போது இரவு சாப்பிட்டிருக்கவில்லை. பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்படிருந்தன. ஒரு மனிதராவது வீட்டிலிருந்து வெளியே வருவதில்லை. பயத்துக்குள்ளாகியிருந்தனர்.  ஒரு ஊரிலாவது ஒரு கடையாவது திறக்கப்பட்டிருக்கவில்லை. நாம் டீ.ஆர். நந்தசேன வன விலங்கு காவலரின் நெருங்கிய குடும்பமொன்று நெல்லிக்குளம் என்னும் கிராமத்தில் இருந்தது. இவ்யானை வந்து எந்நேரத்திலாவது அவ்வீடுகளை உடைக்கும் என  அவர்களும் பயத்தில் இருந்தனர். பின்னர் அவர்கள் எமக்கு சம்பலொன்றையும் சோற்றையும் சமைத்துத் தந்தனர். நாம் மீண்டும் இரவில் நடமாடும் காவல் பயணத்தைச் செல்ல ஆரம்பித்தோம். பொலிஸார் வரவுமில்லை. நாம் முழுமையாக இரவில் சிறிது நேரம் கூட இருக்காமல் சுற்றிப் பயணித்தோம்.

நான் வந்தவுடனேயே உதவிப் பணிப்பாளரைச் சந்திக்கச் சென்றேன். சிறிது நேரத்தில் அவர் நேற்று இரவும் அந்த யானை கல்குலம பகுதியில் ஒருவரைக் கொன்றுள்ளது எனக் கூறினார். கல்கமுவ இருப்பது நாச்சதுவவின் அடுத்தபக்கத்திலாகும். பொதுவாகப் பார்த்தால் பதினைந்து இருபது கிலோமீற்றர் தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டும். நேற்று எமக்கு சமிக்ஞை வந்ததும் அப்பக்கத்திலிருந்துதான். அப்பக்கம் இருப்பது மஹகனதராவ மிஹிந்தலை சரணாலயத்துக்கு அண்மையிலாகும். யானை பயணம் செய்யும் பாதையாகும்​. நாம் இருந்தது கலாவெவவிலிருந்து யானைகள் பாயும் பகுதியிலாகும்.  அடுத்த இறப்பு இடம்பெற்றிருப்பது மிஹிந்தலை மஹகனதராவ சரணாலயத்துக்கு அண்மையிலாகும். அப்போது கீரக்குலம என்பது அனுராதபுர பக்கத்துக்கு அண்மித்ததாக சிறு தூரங்கள் பத்து, பதினைந்து, இருபது தூரங்கள். எனினும் யானைகளுக்கு போவதற்கும் வருவதற்கும் முடியுமான விதத்தில் சரணாலயத்துக்கு இடையில் சிறு தொடர்பொன்று காட்டினால் இருந்தது. மடுகல்ல இப்போது சென்று தூங்கவும் என உதவிப் பணிப்பாளர் கூறினார்.  இதற்க வேறொரு குழுவை அனுப்புகிறேன் என்றார். தற்போது உள்ள நிலைமை மற்றும் யானையினால் உள்ள அபாயம் பற்றியும் நான்   உதவிப் பணிப்பாளரைச் சந்தித்து தெளிவுபடுத்தினேன். அப்போது வரையும் அரசாங்க அதிபர் கதைத்து யானையைப் பிடிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கு சுமார்  ஒரு கிழமை செல்லும் எனக் கூறினார். அதுவரை நடமாடும் காவல் பயணத்தைச் செல்வதற்கும், மக்களின் பாதுகாப்புக்கும் அறிவூட்டுவதற்கும் பிரச்சார வாகனமொன்றை அனுப்புவதற்கும் முடிவு செய்யப்பட்டது. அதனால் கச்சேரியில் மேலதிக அரசாங்க அதிபரைச் சந்தித்து ஒலிபெருக்கி முறைமையொன்றைப் பொருத்திக் கொண்டு வருமாறு வாகனத்தை என்னிடம் தந்தார். மேலதிக செயலாளர் அவர்கள் கவனமாக என்று கூறி ஒலிபெருக்கி முறைமையை எனக்குத் தந்தார்.

அக்காலத்தில் வனவிலங்கிலிருந்து அறிவூட்டல்களை  விடுத்தால் மக்கள் அடிக்கும் எதிப்பொன்று வரும் என அறிவூட்டலை விடுத்தமை பிரதான அரசாங்க மா அதிபரின்  செய்தியொன்றாகவேயாகும். நான் விடுத்த அறிவிப்பு எனக்கு நினைவிருக்கிறது. ‘தயவு செய்து கவனிக்கவும், இது உங்களை அழைப்பது அனுராதபுர அரசாங்க மாஅதிபரின் செய்தியொன்றுக்காகவேயாகும். இத்தினங்களில் இப்பிரதேசத்தில் நடமாடுகின்ற கொடிய காட்டு யானையைப் பிடித்து அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. யானையைப் பிடிப்பதற்கு சில நாட்கள் செல்லும் எனவும் அதுவரை மாலை நேரங்களில் வீட்டுக்குள்ளே இருந்து காலத்தை செலவிடுமாறும், அந்நேரத்தில் பயணம் செல்வதனைத் தவிர்க்குமாறும் அறியத் தருவதோடு உங்களது பாதுகாப்புக்கு வனவிலங்கு அதிகாரிகள் இரவு நேரத்தில் பிரதேசத்தை அண்மித்து தங்கியுள்ளனர் என அறியத் தருகின்றேன் நன்றி’ என்றவாறாகும். நான் அங்கிருந்து புறப்பட்டு சிறுது தூங்குவதற்காக தங்கும் அறைக்கு வந்தேன். எனினும் சுமார் ஒரு மணித்தியாலயம் தூங்கிக் கொண்டிருக்கும் போது உதவிப் பணிப்பாளர் ரூபசிங்ஹ அவர்கள் வாகனத்தை எடுத்து வந்து நுழைவாயிலுக்கு அருகில் நிற்கிறார். நான் வந்து விரைவாக வாகனத்தில் ஏறி எமது கச்சேரி அலுவலகத்துக்கு வந்தேன். அங்கே வரும் போது எமது இன்னொரு வட்டார பணிப்பாளரொருவர் இருந்தார் எம்.டீ.ஏ.எல். லயனல் டீ. ஆர். நந்தசேனவும், அடலுகமவும் வந்திருந்தனர். நேற்று இறந்த மனிதர்களின் மரண வீடு இருப்பது கீரக்குலம கிராமத்திலாகும் என ரூபசிங்ஹ அவர்கள் கூறினார்கள். இன்றைக்கே புதைக்கின்றனர். சுடுகாட்டுக்கு அண்மையில் அந்த யானை இருப்பதாக செய்தியொன்று வந்தது. இப்போதே செல்லுங்கள் எனக் கூறினர். லயனல் அவர்கள் சிரேஷ்சடமானவர் என்பதனால் அவர்தான் பொறுப்பேற்றிருந்தார். பின்னர் நானும், லயனல் அவர்களும், டீ. ஆர். நந்தசேனவும், அடலுகமவும், சாரதியும் வாகனத்திலேயே கீரக்குலம கிராமத்துக்குச் சென்றோம். மரண வீட்டுக்கு அருகில் செல்லும் போது நிலைமை நன்றாக இல்லை என்பதனால் நாம் உள்ளே செல்லவில்லை. பாங்சுகுலவிற்கு நெருங்கி விட்டது என மக்கள் கூறினர். சுமார் அரை கிலோமீற்றர் தூரத்தில் சுடுகாடு உள்ளது. அங்கு யானை இருப்பதாகக் கூறினர். நாம் வழியைக் காட்டுவதுடன் ஆண் பிள்ளைகள் சுமார் நான் பேர் வந்தளர்.

நாம் சுடுகாட்டுக்கு அண்மையில் சென்றோம். சுடுகாடு இருந்தது திறந்த பிரதேசமொன்றிலாகும். எனினும் சுற்றியும் காடு இருந்தது. அப்போது நான்கு பேரினதும் உடலைப் புதைப்பதற்கு குழிகள் நான் கிராமத்தினால் வெட்டப்பட்டிருந்தன. நாம் அங்கே அருகில் செல்லும் போது காட்டுக்குள்ளிருந்து சத்தமொன்று கேட்டது. நேரம் சுமார் பகல் இரண்டரை போல் இருக்கும். எம்மிடமிருந்தது  இரண்டு துப்பாக்கிகளும் சில யானைவெடிகளுமாகும்.  இரண்டு துப்பாக்கிகளும் லயனல் அவர்களிடமும்   டீ. ஆர். நந்தசேன அவர்களிடமுமாகும். யானைவெடிகள் அடலுகமவிடவும் என்னிடமும் இருந்தன். நாம் யானைவெடியொன்றை அடித்துப் பார்ப்போம் என்ன என்று என்றவாறு லயனல் அவர்கள் கூறினார்கள். அச்சத்தம் வந்த பக்கத்துக்கு நானும் யானைவெடியை வீசினேன். ஒரேயடியாக வெடி வெடிக்கும் சத்தத்துக்கு யானை கத்திக் கொண்டு சுடுகாட்டின் அடுத்த மூலையினால் வெளியேறினர். பெரும் பகலொன்றில் யானையைத் துரத்தியதென்பது எமது வலவிலங்கு துறையில் முகாமைத்துவத்தில் செய்யாத கருமமொன்றாகும். எனினும் இங்குள்ள நிலைமையுடன் அதனை செய்ய வேண்டியிருந்தது. யானைவெடியை அடித்தவுடனேயே யானை எமது பக்கத்துக்கு வந்தது. பெரியவர்களுடைய உயிர் ஆபத்திலிருந்தது. அந்நேரத்தில் அதனை நிகழ்த்திய காரணமாக இறந்த உடல்கள் நான்கினைப் புதைப்பதற்கு உள்ள இடத்திலேயே  யானை இருந்தது.யானை ஐம்பது மீற்றர் அப்பால் காடொன்றிலிருந்து வெளிப்பட்டது.      யானை எமது பக்கத்துக்கு துரத்தி வந்தது.உண்மையிலேயே அது கொலர் இடப்பட்ட யானை. அந்நேரத்தில் எமக்கு யானைவெடியை இடவதற்கு நேரம் இருக்கவில்லை. எம்முடன் வந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். நானும் அடலுகமவும் ஓட ஆரம்பித்தோம். எனினும்  யானை வருகின்ற பக்கத்திலிருந்த பழைய சிரேஷ்ட அதிகாரிகளான டீ. ஆர். நந்தசேனவும்  எம்.டீ.எல். லயனலும் வட்டார வன பணிப்பாளரும் அசையவுமில்லை. அந்நபர்கள் துப்பாக்கியை சரிசெய்து கொண்டு யானை வரும் திசைக்கு வெடி வைத்தனர். அந்நேரத்தில் யானை அருகிலேயே வந்து விட்டது. யானைக்கு வெடி பட்டது. யானை திரும்பி அவ்விடத்திலிருந்து சென்றது. அந்நேரத்தில் யானைக்கு வெடி படாமல் இருந்தால் நாம் சில பேர் அன்று இறக்க நேரிட்டிருக்கும். அதனால்  ​சிரேஷ்ட அதிகாரிகளின் அனுபவங்களினால் நாம் காப்பாற்றப்பட்டோம்.

அதனுடனேயே நாம் யானைவெடிகள் இரண்டு மூன்றினைச் விடுத்தோம். விடுத்து சிறிது நேரம் செல்லும் போது யானை சிறிது தூரத்திற்குச் சென்று விட்டதென எமக்கு விளங்கிற்று.  யானை கொன்ற மரணங்களுக்கு அருகில் யானை வருவதாக நாம் பேச்சுக்குக் கேட்டுள்ளோம். எனக்கு அதனை அனுபவிக்க முடிந்தது. இறப்புகளை புதைக்க முன்னரே அந்த சுடுகாட்டுக்கு அருகாமைகு இந்த யானை வந்திருந்தது. பின்னர் அவ்விறப்புக்களை எடுத்து வரும் செய்தியும் வந்தது. சுமார் ஒரு மணித்தியாலயம் செல்லும் போது எமக்கு எதிர்ப்பொன்று வரும் என, மரண ஊர்வலத்தை அண்மிக்க விட்டு நாம் அங்கிருந்து அனுராதபுரத்துக்கு வந்தோம். அனுராதபுரத்துக்குவரும் போது அடுத்த குழு ஜீப் வண்டியில் ஒலிபெருக்கியையும் கட்டிக் கொண்டு கிராமத்துக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தது. மாலை ஐந்திலிருந்து சுமார் ஏழு மணி வரை அன்று அறிவிப்பு விடுத்தோம். அதன் பின்னர் இரவு நடமாடும் காவல் பயணத்தை மேற்கொண்டோம். அவ்வாறான தினங்களில் பகல் வேளையில் சிறிது தூங்குவோம். இதோ இவ்வாறு ஐந்து ஆறு நாட்கள் செல்லும் போது யானையைப் பிடிக்கும் குழுக்கள் முகாம்களைக் கட்டுவதற்காக சிறிது சிறிதாக வந்தனர்.  துருவில நாச்சதுவவை அண்டியேதான் முகாம்களைக் கட்டினர். எவ்வாறாவது இன்னும் நான் நாட்களில் யானையைப் பிடித்துக் கட்டினர். யானையைப் பிடித்தவர் எமது சிரேஷ்ட விலங்கு வைத்தியர் நந்தன அதபத்து அவர்கள், செயற்படுத்தியவர் விலங்கு வைத்தியர் தாரக பிரசாத், பணிப்பாளர் சுகாதார முகாமைத்துவம், யானையை யாலவில் விடுவதற்கு அக்காலத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த யானையை நாச்சதுவென் யாலவிற்கு விடுவிப்பதற்கு யானை லொறியில் ஏற்றிச் சென்றனர். இன்னும் சுமார் ஒரு மாதம் செல்லும் போது யாலவில் இராணுவ பதுங்குகுழியொன்றை உடைக்க வந்து சிவில் பாதுகாப்பு வீர்ரொருவர் பின்னால் விரட்டியதனால் யானைக்கு வெடி வைக்கப்பட்டுள்ளது என செய்தியொன்று கிடைத்தது. யானையை விட்டு இரண்டு நாட்களுக்குள்ளேயே யானை அவ்வாறு கொல்லப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் யானை மனித மோதலினால் உயிர்கள் இழக்கப்படுவதும் பிள்ளையொன்றுக்கு முழு குடும்பமும் இழக்கப்படுவதும் அம்மரணத்தை ஏற்படுத்திய யானை யானை மனித மோதலினாலேயேஇறப்புக்கு உள்ளாகியமையும் இக்குறுகிய காலத்துக்குள்ளேயே இடம்பெற்றது. அப்போது யானை பல சரணாலயங்களுக்கு மத்தியில் இருந்தது. அபிவிருத்தி செயல்கள் காரணமாக அவர்களின் வாழிடங்கள் இழக்கப்பட்டுள்ளன. இன்றும் மஹகனதராவ, மிஹிந்தலை, கஹல்லபல்லகெலே சரணாலயங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அது பற்றி எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இன்றாகும் போது மின்வேலிகள்  அமைக்கப்பட்டுள்ளன.  இன்று முகாமைத்துவ முறைமைகள் மாறியுள்ளன. அபிவிருத்தி செயல்கள் அதிகமானளவு இறுதியில் இழக்கப்பட்டு இருப்பது இவ்வனவிலங்குகளின் வாழிடத்திலாகும்.

* தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அமைப்பு

திரு. பாதிய மடுகல்லே அவர்கள்

திரு. பாதிய மடுகல்லே அவர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு 1998 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி இணைந்தார். வன விலங்கு வட்டார பணிப்பாளர் குழுவொன்று கடமைக்காக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு இணைந்து கொள்ளும் சந்தர்ப்பத்தில் அங்கு இளையவராக அவர் சேவைக்கு இணைந்துள்ளார். தற்போது அவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் வஸ்கமுவை தேசிய பூங்காவில் பூங்கா பொறுப்பாளராக கட்டையாற்றுகிறார்.

திரு. பாதிய மடுகல்லே அவர்கள் வத்தேகம மத்திய மகா வித்தியாலயத்திலும் கண்டி கின்ஸ்வூட் வித்தியாலயத்திலும் கல்வியைக் கற்று உயர் தரத்தை விஞ்ஞானப்  பாடத்தில் சித்தியடைந்து வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவைக்கு இணைந்தார். அவர் திறந்த பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணி பட்டத்தை சேவையில் இருக்கும் போதே பெற்றார். மேலும்  வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடத்தப்படுகின்ற வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த அவர் அக்குழுவில் சிறந்த திறமையுள்ள டிப்ளோமாதாரிக்குரியதங்க விருதை வென்றுள்ளார்.

பாதிய மடுகல்லே அவர்கள்வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுராதபுர வட்டாரம், தந்திரிமலை வட்டாரம், வில்பத்து தேசிய பூங்கா தலைமையகம், கல்கமுவை யானைகள் முகாமைத்துவ அலகு, நுவரெலியா ஹக்கல வட்டாரம், ரன்தெனிகலை வட்டாரம், கல்பிட்டிய வட்டாரம் போன்ற இடங்களில் வனவிலங்கு வட்டார பாதுகாவலராகவும், மாதுறுஓயா தேசிய பூங்காவில் பூங்கா பொறுப்பாளர், மின்னேரியா தேசிய பூங்காவில் பூங்கா பொறுப்பாளராகவும் கடமையை நிறைவேற்றியுள்ளார்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையாற்றுவது பற்றி மிகவும் திருப்தியடைவதாகவும்,  இதுவரை பல அனுபவங்களைப் பெற்றிருப்பதாகவும், இத்துறையில் சிரேஷ்டமானவர்கள் பெருமளவானவர்களை பழகவும், பல துறைகளில்  அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததெனவும் மடுகல்லே அவர்கள் குறிப்பிட்டார்கள்.

திருமணமானவரான அவர் தற்போது இரு ஆண் பிள்ளைகளின் தந்தையாவார். அப்பிள்ளைகள் இருவரும் சாந்த சில்வெஸ்தர் வித்தியாலயத்தில் தரம் 11 மற்றும் தரம் 10 வகுப்புகளில் கல்வி கற்கின்றனர்.

மஹகனதராவ சரணாலயம்

இன்றுடன் 1700 வருடங்களுக்கு முன்னர் ரன்திய தஹர எனும் கணக ஓடை மகாசென் மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட பிரதேசத்தில் நிலக்கீழ் நீர் மட்டத்தை உயர் நிலையில் வைத்துக் கொள்ளவும் நாட்டுக்கு சோற்றினை வழங்குகின்ற விவசாயிகளின்வயல்களை வளமாக்குவதற்கும் நோக்காகக் கொண்டுஅமைக்கப்பட்டது. நிலக்கீழ் நீர் மட்டத்தை உயர் நிலையில் வைத்துக் கொள்ளும் நோக்கம் குடிநீராக சிறு கிணறுகளின் மூலம் மக்களுக்கு நீரைப் பெற்றுக் கொள்வதனை இலகுபடுத்துவதனையும் நோக்காகக் கொண்டுஅமைக்கப்பட்டது. அதனால் கனக ஓடையின் நீரை வயல்வெளிகளை வளமாக்கும் பொருட்டும் குளித்தல் போன்ற செயற்பாடுகளின் பொருட்டும் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.  மகாசென் மன்னனின் அன்றைய கனக ஓடை இன்று மஹகனதரா நீர்த்தேக்கமாகும்.  மஹகனதரா வாவியின் முழுமையான நீர்த்தேக்க சுற்றளவு 400 ஆகும்.

ஏரிப் படுகையில்  பாரிய மரத் தண்டுகளும், கற்காறைகளும் இருப்பது இதன் அழகை இன்னும் உயர்த்துகின்ற விடயமாகும். ஏரியைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் மான்கள், மரைகள் உட்பட பாலூட்டிகள் பலவும் வாழ்கின்றன என்பதோடு எப்போதாவது யானைகளும் இங்கு வருவதனைக் காண முடிகின்றது. இவ்வாறு சுற்றுச் சூழலில் உள்ள முக்கியத்துவத்தினால் 1966 டிசம்பர் 9 ஆம் திகதி  வர்த்தமானி எண் 414 இன் கீழ், மஹகனதராவ ஏரி சரணாலமொன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

புள்ளி மான்
ஆசிய யானை

வரலாற்று முக்கியத்துவத்தை மறைத்துக் கொண்டுள்ள இந்த ஏரியை அண்மித்து விவசாயக் குடும்பங்கள் பாரிய அளவில் வாழ்கின்றனர். பெரும்பாலான மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருப்பது விவசாயமாகும்.  ஏரியில் 36,000 அடி ஏக்கரான நீர் கொள்ளளவை தக்க வைத்துக் கொண்டுள்ள முடிவதோடு சேமிக்கப்பட்ட நீர் கீழ்- மேல் இரண்டினாலும் விநியோகிக்கப்படுகின்றது. பல்வேறுபட்ட வெளிப்புற உத்திகளினாலும் சதிகள் போன்றவற்றினாலும் பீதிக்கு உள்ளாகினாலும் அழியாமல் உள்ள  மஹகனதரா நீர்த்தேக்கம் 1959 புனர்நிர்மாணத்துக்கு உட்பட்டு மகா நீர்ப்பாசன விவசாய குடியிருப்பாக இரண்டு கட்டணங்களினால் விவசாய குடும்பங்களைக் குடியிருத்தப்பட்டுள்ள விவசாய இராசதானியாகும். ஆரம்பத்திலேயே 6100 ஏக்கர் அளவிலான வயல் மஹகனதரா நீர்த்தேக்கத்தினால் போசணை பெற்று தேசத்துக்கே சோற்றினை வழங்குவது இடம்பெற்றது.

மகாசென் மன்னனினால் கட்டப்பட்ட இவ்வாவி, கனதரா ஓயாவினை மறித்து அதற்கு நீரைப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. காணவாபி என்றவாறு அக்காலத்தில் அது அழைக்கப்பட்டது. 1 வது சேன மன்னன் (833-855) காணவாபியை மிஹிந்தலை விகாரைக்காக பூஜை செய்தான்.  அடுத்து மன்னனாக வந்த இரண்டாம் சேன இங்கு நீரின் கொள்ளளவினை அதிகரிப்பதற்கு அணையை உயர்த்திக் கட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு நான்காம் மஹிந்த  மன்னனும் இங்கு நீரினை மிஹிந்தலை விகாரையின் பயன்பாட்டுக்கு ஒப்படைத்ததென மிஹிந்தலை கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலன்னறுவை யுகத்தில் விஜயபாகு மற்றும் பராக்கிரமபாகு எனும் மன்னர்கள் மஹகனதராவையை புனர்நிர்மாணம் செய்ததன் பின்னர் காணவாபி ஏரிக் கரையின் 1600 ரியன் நீண்டதென பராக்கிரமபாகு மன்னனின் கல்வெட்டொன்றில் காட்டப்பட்டுள்ளது.

ஏரியில் குளிப்பதனை சிறந்த அனுபவமாக பெற்றுக் கொள்ள முடியுமான சந்தர்ப்பமொன்றாகும்.  அதற்காக கிராமவாசிகள் பயன்படுத்துகின்ற குளிக்கும்  தொட்டியொன்றைப் பயன்படுத்துவதற்கு கவனத் செலுத்த வேண்டும்.  ஏரியின் ஆழத்தைப் பற்றி எமக்கு புரிதலொன்று இல்லாமையினால் அங்கு கவனமாக இருப்பது பொருத்தமானதாகும்.

ஏரிக் கரைக்கு மேல் மிஹிந்தலை மலைத்தொடரில் அழகான காட்சியொன்றையும் கண்டுகொள்ள முடியும். சரணாலயத்தில்  மேல் வானை அழகுபடுத்துகின்ற பல்வேறான பறவைகளைப் பார்வையிடுவதற்கும் ஏரியைச் சுற்றியுள்ள பொருத்தமான இடமொன்றாகும்.  மயில் இங்கு மிக எளிதாக கூட்டமாக கண்டுகொள்ள முடியுமான பறவையொன்றான நீர்க்காகங்களை நூற்றுக்கணக்கில் இங்கு சுற்றித் திரிகின்றன. பெரிய நீர்க்காகம், பாம்புத்தாரா, பெரிய கொக்கு, குளத்துக் கொக்கு, செந்நாரை, மஞ்சள் மூக்கு நாரை,   அகலவாயன், வெண்கழுத்து நாரை, சிறியசீழ்க்கைச்சிரவி, சிறுத்த பெருநாரை, நீலவால் பஞ்சுருட்டான், நீலத் தாழைக்கோழி, பெரும் பூநாரை உட்பட நீர்ப் பறவை வகைகள் பலவும் இங்கு வாழ்கின்றன.

பெரிய கொக்கு
மஞ்சள் மூக்கு நாரை
நீலவால் பஞ்சுருட்டான்
நீலத் தாழைக்கோழி
சிறியசீழ்க்கைச்சிரவி
சிறுத்தபெருநாரை

நிகினி மாதத்தில் ரஜரட்டவுக்கே உரித்தான வரட்சி நிலைமை ஏற்பட்டதுடன் மஹகனதரா ஏரியின் நீர் மட்டம் துரிதமாக குறைவதற்கு தொடங்கிற்று. இதன் காரணமாக, புராதன அனுராதபுர- திருகோணமலை வீதியில் அடையாளங்கள் வெளிப்பட்டு அவ்வதியில் வட க்குப் பக்கம்தெரியுமாவாறு உள்ளதோடு, தெற்குப் பக்கத்தில் வற்றிச் செல்லும் நீரூற்றுக்கள் தென்படுகின்றன.

மிஹிந்தலை மலைக்கு ஏறிய போது தென்படுகின்ற தூரம் வரையுள்ளவற்றில் பரந்து செல்கின்ற ஏரிகளிடையே விசாலமான ஏரி மஹகனதராவ ஆகும். இவ்வேரி மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள இடிபாடுகளைக் கண்டுகொள்வதினால் உங்களுக்கு அற்புதமான அனுபவமொன்றைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பது சந்தேகமற்றது. மிஹிந்தலையில் தரிசனம் செய்து விட்டு மஹகனதரா ஏரியின் இடிபாடுகளை இலகுவாகப் பார்வையிடுவதற்கும் உங்களால் முடியும். மிஹிந்தலை சந்தியைக் கடந்து திருகோணமலை வீதியில் வயல்களுக்கு இடையில் சுமார் 3 கி. மீ. செல்லும் போது மஹகனதரா ஏரி தெரிகின்றது.  இந்நெடுஞ்சாலையானது ஏரி இரண்டாகப் பிரிந்து, ஆங்கிலேயர் காலத்தில் மண்ணை அகழ்ந்து கட்டப்பட்ட அணைக்கட்டினூடாக நீண்டு செல்கின்றது. ஏரிக் கரைக்கு நுழைவதாயின் நீங்கள் கனதரா சந்தியிலிருந்து திரும்பி இன்னும் 3 கி.மீ. கிராமத்தினுடாக பயணம் செய்ய வேண்டும்.

மஹகனதராவ சரணாலயத்துக்குள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் நடத்திச் செல்லப்படுகின்ற மஹகனதராவ சுற்றுலா விடுதி அமைந்துள்ளது. பத்து பேரினைக் கொண்ட குழுவொன்றுக்கு அங்கு இலகுவாக தங்குமிடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முடியுமாக உள்ளதோடுவிடுதியை ஒதுக்கிக் கொள்வது பிரதான அலுவலகத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்றது.

மஹகனதராவ சரணாலயம்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Scientific Name

මුවා

புள்ளி மான்

Spotted deer

Axis axis ceylonensis

ගෝනා

மரை​கள்

Sambar

Rusa unicolor

අලියා

ஆசிய யானை

Asian elephant

Elephas maximus

මහ දියකාවා

பெரிய நீர்க்காகம்

Great cormorant

Phalacrocorax carbo

අභිකාවා

பாம்புத்தாரா

Darter

Anhinga melanogaster

මහ සුදු කොකා

பெரிய கொக்கு

Great egret

Casmerodius albus

කණකොකා

குளத்துக் கொக்கு

Indian pond-horon

Ardeola grayii

ලතු වැකියා

மஞ்சள் மூக்கு நாரை

Painted stork 

Mycteria leucocephala

විවිර තුඩුවා

 நத்தை குத்தி

Asian openbillstork

Anastomus oscitans

පාදිලිමානාවා

வெண்கழுத்து நாரை

Woolly-necked stork

Ciconia episcopus

රජ සියක්කාරයා

அமெரிக்க பூநாரை

Greater flamingo

Phoenicopterus ruber

පෙඳනිල්බිඟුහරයා

நீலவால் பஞ்சுருட்டான்

Blue tailed bee eater

 Merops philippinus

බත් කූරා

ஊசித்தட்டான்

Damsel fly

Suborder zygoptera

කිතලා

நீலத் தாழைக்கோழி

Purple coot

Porphyrio porphyrio

තඹසේරුවා

சிறியசீழ்க்கைச்சிரவி

Lesser whistling teal

Denbrocygna javanica

බහුරුමානාවා

சிறுத்தபெருநாரை

Lesser adjutant 

Leptoptilos javanicus

වලිකුකුළා

இலங்கைக்காட்டுக்கோழி

Sri lanka jungle fowl

Gallus lafayettii

පළා පොළඟා

பச்சை விரியன்

Green Pit Viper

Trimeresurus trigonocephalus

සර්ප රාජාලියා

கொண்டை பாம்புண்ணிக் கழுகு

Serpent Eagle

Spilornis cheela

කරවැල් කොකා

செந்நாரை

Purple heron

Ardea purpurea

குப்பாளர்  -தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர்,வனஜீவராசிகள் மற்றும் வன   வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம், மஹேக்ஷா சதுராணி பெரேரா, அபிவிருத்தி  உத்தியோகத்தர்,வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (வனஜீ.வன. வள. பா. அ)

இணய வடிவமப்பு என்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

புகைப்படங்கள்–  வனஜீவராசிகள்  பாதுகாப்பு திணைக்களம்